ArchiveMay 2021

கபடவேடதாரி – சாய் வைஷ்ணவி மதிப்புரை (அத்தியாயம் 3)

இரண்டு அத்தியாயங்களை விட மூன்றாம் அத்தியாயம் விறுவிறுப்பாக இருந்தது. சூனியர்களின் கப்பலை நோக்கி வரும் நீல நகரத்தினை தாக்கி அழிக்கவும் அதே நேரம் தான் விடுபட்டு கொள்ளவும் சூனியனுக்கு கணநேரத்தில் யோசனை வருகிறது. இங்கு யோசனை என்பது சிந்தனையை தான் குறிக்கும். ஆனால் பண்டைய கால அளவீடுகளின் படி யோசனை என்பது தூரத்தினை அளவிடும் ஒரு சொல் என்பதை கூகிளிடம் கேட்டுத்தான் தெரிந்துக்கொண்டேன். ஆசிரியர் ஒவ்வொரு...

கபடவேடதாரி – தேவேந்திரன் ராமையன் மதிப்புரை ( அத்தியாயம் 4)

சூனியக்காரன் அந்த மிதக்கும் கப்பலிலிருந்து பூகம்ப சங்குடன் நீல நகரத்தை நோக்கி விரைந்தான், ஒரு வழியாக நீல நகரத்தில் பிரவேசித்தான். இந்த நிகழ்வு எப்படி சாத்தியம் என்றுதான் தெரியவில்லை, மிதக்கும் கப்பலிலிருந்து பறந்து வந்த சூனியக்காரன் நீல நகரினை பிளந்துகொண்டு வந்து உள்ளே பிரவேசித்தான் என்று நம்பித்தான் ஆக வேண்டும் ஏனெனில் அவன் சூனியக்காரன் அல்லவா அதனால் தான் அவன் அத்தனை வல்லமை பெற்றுள்ளான்...

கபடவேடதாரி – தேவேந்திரன் ராமையன் மதிப்புரை ( அத்தியாயம் 3)

விறுவிறுப்பாக செல்லும் இந்த கபடவேடதாரியின் மூன்றாவது அத்தியாத்தில், சூனியக்காரன் தனது வாழ்வின் இறுதிக்காலத்தின் நிகழ்வான மரணதண்டனைக்கு செல்கிறான். இனி வாழ்வில் திரும்ப வாழ முடியாது என்று தெரிந்து அவன் எதாவது ஒரு அதிசயம் நிகழாதா என்று எண்ணிக்கொண்டேயிருக்கிறான். அப்போது அவனுக்கு கிடைக்கும் ஒரு அதிசயமான ஆபத்து ஆனால் அந்த ஆபத்தை பயன்படுத்தி தற்சயம் இந்த மரண தண்டனையிலிருந்து தப்பிக்க ஒரு அருமையான...

கபடவேடதாரி – முனைவர் ப. சரவணன் மதிப்புரை (அத்தியாயம் 17)

ஒரு காதல், ஒரு கவிதை ஆகிய இவற்றைக் கொண்டு 17ஆவது அத்தியாயத்தை எழுதியுள்ளார் எழுத்தாளர் உயர்திரு. பா. ராகவன் அவர்கள். அது கவிதையா இல்லையா என்பது ஒரு புறம் இருக்கட்டும். அது காதற்கவிதையா என்பதே இந்த அத்தியாயத்தில் வாசகர்கள் எதிர்பார்ப்பது. ‘காதலர்தினம்’ குறித்த விமர்சனம் ஒருபுறமிருந்தாலும் பேரிகை இதழ் குறித்துப் பேசும் போது தமிழ்ச் சிற்றிதழ்களையும் ஒரு பிடி பிடித்துவிட்டார் பா.ரா. பெரும்பாலான...

ஜேகே – அஞ்சலி

ஐந்தரைக்கு அவரிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. ‘சார், ஒரு ரெண்டவர் டைம் தர முடியும். அர்ஜெண்ட்டா ஒரு கதை தேவைப்படுது. சொல்ல முடியுமா?’ இந்தத் துறையில் இந்த அவசர அழைப்புகளுக்குப் பெரும்பாலும் எந்தப் பொருளும் கிடையாது. எதற்கு எப்போது விதித்திருக்கிறதோ, அப்போது அது தன்னால் நடக்கும். கதை என்ன, எதுவுமே இல்லாவிட்டாலும் நடக்கும். விதிக்கப்படவில்லையென்றால் என்ன முட்டுக் கொடுத்தாலும் அரை...

யதி – ஒரு மதிப்புரை (திவாகர். ஜெ)

“சாமியார்கள் பற்றிய நூல்கள் ஏதேனும் இதற்கு முன் வாசித்து இருக்கிறீர்களா? நான் ஒரே ஒரு நூல் தான் வாசித்து இருக்கிறேன். ”சாமியார்களின் திருவிளையாடல்கள்” என்ற நூல். அதில் போலிச் சாமியார்கள் குறித்தும், மண், பெண் என அத்தனையின் மீதும் அவர்கள் செய்த காவாலித்தனங்கள் குறித்தும் ஆதாரத்தோடு விளக்கப்பட்டிருக்கும். மற்றபடி, சாமியார்களுக்கும், நமக்கும் இப்போது உலகம் பின்பற்றிக் கொண்டிருக்கும் சமூக இடைவெளியை...

கபடவேடதாரி – சாய் வைஷ்ணவி மதிப்புரை (அத்தியாயம் 2)

இதோ சூனியன் கிளம்பிவிட்டான்.அவனுக்காக எலும்புகள் கொண்டு செய்யப்பட்ட கப்பல் காத்திருக்கிறது. என்ன எலும்புகளால் ஆன கப்பலா? எனக்கேட்டால் அவன் சொல்வதைக் கேளுங்கள். “சூனியர்களின் உலகில் எலும்புகளுக்கு மதிப்பு அதிகம். வீட்டு விசேடங்களுக்கு ,விழாக்களுக்கு என எல்லா நிகழ்ச்சிகளிலும் எலும்புகள் அலங்காரம் இருக்கும்”.நாம் புராதானப் பொருட்களை சேர்த்து பாதுகாத்து வைப்பதைப்போல இவர்கள் புராதான...

கபடவேடதாரி – பா. சுதாகர் மதிப்புரை (அத்தியாயம் 17)

ஒரு சங்கியாக இருப்பது எவ்வளவு கடினமென்று நம்மில் பெரும்பாலானோர் நேரில் பார்த்திருப்போம். அதுவும் தமிழ்நாட்டில் சங்கியாக இருப்பது மிகவும் கடினம். காவிச் சங்கி, வெள்ளை சங்கி, பச்சை சங்கி, நீலச் சங்கி, கருப்பு சங்கி வகைகளில் காவிச் சங்கியாய் கோவிந்தசாமி சிறப்பாக பொருந்துகிறான். அப்படியோர் காவிச்சங்கியாக அறியப்படுகிற கோவிந்தசாமியைப் பற்றி நாம் சூனியன் மூலமாக அறிந்திருக்கிறோம், சாகரிகா மூலமாக...

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி