ArchiveJune 2021

குறுஞ்செய்தி

வேறெதுவும் இல்லை. வெறும் குட் மார்னிங். தினமும் வருகிறது இக்குறுஞ்செய்தி. ஒரு நாள் தவறாமல் பல மாதங்களாக வருகிறது. பதில் எதிர்பார்ப்பதில்லை. குட் மார்னிங் சொல்வது தவிர வேறெதுவும் பேசுவதில்லை. நீங்கள் யார், எதற்காக எனக்கு தினமும் குட் மார்னிங் அனுப்புகிறீர்கள் என்று கேட்டாலும் பதில் வருவதில்லை. அவனுக்கு சில சமயம் சலிப்பாக இருக்கும். சில சமயம் கோபம் வரும். குறிப்பிட்ட எண்ணை ட்ரூ காலரில் போட்டுப்...

கபடவேடதாரி – பிரியதர்சினி பழனி மதிப்புரை (அத்தியாயம் 25)

அதுல்யாவின் பதிவிற்கு, சாகரிகாவிடம் எழும் உணர்ச்சிகளின் காரணம் எனக்குப் புரியவில்லை. வேண்டாமென வெறுத்து ஒதுக்கியவனிடம் எதற்கு இப்படியொரு உணர்வு ? தன்னுடைய தோழி ஷில்பாவிடம் புலம்புவது, கதையோட்டத்தில் எதார்த்தமாக அமைந்துள்ளது. இருந்தும், தோழியின் அறிவுரைகளுக்குக் காது கொடுக்காமல் அதுல்யாவை வெண்பலகையில் தனியே அழைத்துப் பேச்சு கொடுக்கிறாள். அதில் தெரிய வரும் விடயங்களைக் கேட்டதும் இன்னும் மனம்...

பிரியாணி

அதிகாலை மூன்றரை மணிக்குத் தொலைபேசியில் அழைத்து விவரம் சொன்னார்கள். உடனே கிளம்பி ஸ்டேஷனுக்கு வரவும். மதியம் ஒரு மணி வரை ஏர்போர்ட் ட்யூட்டி. பெரியசாமி கண் எரிச்சலுடன் குளித்து, யூனிஃபார்ம் அணிந்து புறப்படத் தயாரானபோது மணிமேகலை அவருக்குக் காப்பி கொடுத்தாள். ‘ஒரு மணிக்கு வீட்டுக்கு வந்திடுவிங்க இல்ல?’ ‘ஆமா.’ விடைபெற்று வெளியே வந்து அவர் சைக்கிளை எடுத்தபோது சொன்னாள்...

மரண அறிவிப்பு

ஒரு பறவையின் மரணத்தை அவன் கண்டதில்லை. அநேகமாக யாருமே பார்த்திருக்க மாட்டார்கள். முதல் முறையாக அப்படி ஓர் அனுபவம் தனக்கு வாய்க்குமோ என்று நினைத்தான். வீட்டு வாசலில் அந்தக் காகம் அமர்ந்திருந்தது. நெருங்கி அருகே சென்றபோதும் அசையாமல் அப்படியே இருந்தது. இது சிறிது வியப்பாக இருந்தது. அதன் கண்களைச் சுற்றி சாம்பல் நிறத்தில் ஏதோ ஒட்டிக்கொண்டிருந்தாற்போல இருந்தது. காகத்தின் கழுத்துப் பகுதி இயல்பாகவே...

கண்ணி

சில விஷயங்களில் எளிதாக முடிவெடுக்க முடிவதில்லை. ஒரு பொறுப்பின் கண்ணிக்குள் சிக்கிக்கொள்ளும்போது இது இன்னும் சிரமமாகிறது. கட்டற்ற தனி மனித சுதந்தரம் என்பது எப்போதும் திருமணத்துக்குப் பிறகு திரும்பக் கிடைக்கப் போவதில்லை. செய்வதற்கு ஒன்றுமில்லை. இதையும் உள்ளடக்கியதாகவே வாழ்க்கை இருக்கிறது. எதையும் தொடங்கும் முன்னால் அவனிடம் சொல்லிவிட வேண்டும் என்று முடிவு செய்திருந்தாள். முன்பேகூடச் சொல்லியிருக்க...

கபடவேடதாரி – பா. சுதாகர் மதிப்புரை (அத்தியாயம் 26)

இதுவரை நம்மிடம் மட்டுமே முட்டாள்தனங்களும் காமெடிகளும் பண்ணிக்கொண்டிருந்த நம்மாள் கோவிந்தன் தன் பெயரை நீலநகரம் முழுதும் தெரியும்படி செய்து கொண்டான். யாரோ ஒரு பெண் தன்னை கணவன் என்று வெண்பலகையில் எழுதிவிட்டாள் என்பதற்காக தெருவில் இறங்கி கத்திக்கொண்டே ஓடியதால் எவ்வளவு காமெடி. அந்த நகரத்தில் இருந்த அணில்களைப் பற்றியெல்லாம் நாம் அறிந்துகொள்ள வேண்டியதாய்ப் போய்விட்டது. ஏற்கனவே இங்கே அணில்கள் பெயரால்...

ஆதியிலே நகரமும் நானும் இருந்தோம் – ஒரு மதிப்புரை

பா ராகவன் எழுதிய இந்த சென்னை நினைவுக் குறிப்புகள் என்னும் கட்டுரைத் தொகுதியை நேற்றுதான் என் நண்பர் கிருஷ்ணகுமார் மூலமாக என் கையில் கிடைத்தது. எடுத்து படிக்கத் துவங்கி, கீழே வைக்க மனமில்லாமல் 160 பக்கங்கள் கொண்ட இந்த புத்தகத்தை ஒரே மூச்சில் படித்து முடித்து விட்டேன். இதை கட்டுரை என்று சொல்ல எனக்கு மனம் வரவில்லை. இது பா.ரா-வின் சுயசரிதம் (50%) என்று வைத்துக் கொள்ளலாம். அவருடைய பழைய நினைவுகளில்...

கபடவேடதாரி – பிரியா சபாபதி மதிப்புரை (அத்தியாயம் 24)

ஒவ்வொரு அத்தியாயங்களிலும் புதிய கதாப்பாத்திரங்களைக் காண முடிகிறது. இந்த அத்தியாயத்தில் அதுல்யா எனும் பாத்திரத்தைக் காண முடிகிறது. அவளுடைய வாழ்க்கையானது துன்பத்தில் தொடங்குகிறது. ஆனால் காலம் செல்ல செல்ல உச்சத்தை அடைகிறது. தன்னுடைய பூர்வீகத்தைக் காணச் செல்ல முற்படும் நம்முடைய கோவிந்தசாமியைக் காண்கிறாள். கோவிந்தசாமி அவளைக் காணும் பொழுது தன் மனைவியைக் கொண்டே அவளை ஒப்பிடுகிறான். அவனுடைய பேச்சினை மிக...

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி