ArchiveJune 2021

கபடவேடதாரி – பிரியா சபாபதி மதிப்புரை (அத்தியாயம் 23)

சூனியன் விருட்சத்தைப் பற்றியும் பழங்களைப் பற்றியும் கூறும் பொழுது அதனை நேரில் காண வேண்டும் என்ற ஆவலே எழுகிறது. தனக்கான உலகம் வேண்டுமென்ற அவனது உடல் முழுவதும் நிறைந்த எண்ணத்தினை அவன் செயல்படுத்த வேண்டும் என்று அவன் கொள்ளும் செயலானது அசுர வேகமானது. மனித மனமானது ஒன்றிலிருந்து ஒன்று தாவிக் கொண்டிருக்கும். சாகரிகாவைப் பற்றிய செம்மொழிப்ரியாவின் செய்தி நீல நகரம் முழுவதும் பரவிக் கொண்டிருந்த வேளையில்...

கபடவேடதாரி – பிரியா சபாபதி மதிப்புரை (அத்தியாயம் 22)

கோவிந்தசாமியின் நிழல் கோவிந்தசாமியின் குளோனிங் என்றாலும் கோவிந்தசாமி அல்ல என்பதை உணர்த்த முற்படுகிறது. நிழலானது தான் தனியாள் என்பதை உணர்கிறது. உணர்த்துகிறது. கோவிந்தசாமி கொண்ட காதலின் எச்சமானது நிழலுக்குள் உள்ளதால் அது சாகரிகாவைக் காதலிக்கிறது. பல்லாண்டு காலங்கள் கோவிந்தசாமிக்குள் வாழ்ந்ததால் நிழலானது அவனின் எண்ணங்களைத் தன்னிலிருந்து உதிர்க்கவும் போராடுகிறது. ஷில்பா நிழலுக்கு உதவி செய்வதில்...

கபடவேடதாரி – முனைவர் ப. சரவணன் மதிப்புரை (அத்தியாயம் 26)

‘RIP’ ஸ்லோகங்களையும் இந்த அத்தியாயத்தில் எழுத்தாளர் உயர்திரு. பா. ராகவன் அவர்கள் எழுதியிருந்தால் கொராணாவில் இறந்த அனைவருக்கும் அந்த ஸ்லோகங்களைச் சொல்லி அவர்களனைவரையும் நீலநகரத்தில் குடியேற்றியிருக்கலாம். இந்தக் கோரிக்கையை எழுத்தாளர் அவர்கள் கவனத்தில் கொண்டு, அந்த ஸ்லோகங்களை அடுத்த அத்தியாயத்தில் எழுதி வெளியிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். ஸ்ரீ ராமானுஜரைப்போலவே இந்த விஷயத்தில் இந்த...

கபடவேடதாரி – முனைவர் ப. சரவணன் மதிப்புரை (அத்தியாயம் 25)

‘அதுல்யா’ – ‘சாகரிகா’ இடையிலான பொறாமைமிகுந்த உரையாடல் சிறப்பு. இந்த உலகத்தில் மட்டுமல்ல எந்த உலகத்திலும் பெண்கள் இப்படித்தான் போல. ‘சாகரிகா’ – ‘ஷில்பா’ உரையாடல்களைக் கட்டமைத்தமைக்காகவே எழுத்தாளர் உயர்திரு. பா. ராகவன் அவர்களுக்குப் ‘பெண்ணியச் சூனியவாதி’ எனும் பட்டத்தை வழங்கலாம். இந்த எழுத்தாளருக்குப் பெண்ணால்தான் தீங்கு என்பது இவர் பிறக்கும்போதே எழுதப்பட்டுவிட்டதுபோலும். கோவிந்தசாமியின் தேர்வறைக்...

கபடவேடதாரி – முனைவர் ப. சரவணன் மதிப்புரை (அத்தியாயம் 24)

‘அதுல்யா’ வின் வருகை நல்வரவாகட்டும். கோவிந்தசாமியின் வாழ்க்கை இனி ‘டாப்கியர்’இல் செல்லும் என்று நம்புவோம். ஆனால், அப்படியும் உறுதிபடுத்திவிட இயலாது. சூனியன், கோவிந்தசாமியின் நிழல் ஆகியோர் அதுல்யாவைக் கைப்பற்றவும் வாய்ப்புள்ளது. எது எப்படியோ எழுத்தாளர் உயர்திரு. பா. ராகவன் அவர்கள் மனம் உவந்து ஓர் அழகியைப் படைத்தமைக்காக வாசகர்கள் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவிக்க வேண்டும். அதுல்யா-கோவிந்தசாமியின்...

கபடவேடதாரி – முனைவர் ப. சரவணன் மதிப்புரை (அத்தியாயம் 23)

சூனியனின் புதுவிதமான முடிவுகள் நம்மைத் திகைப்படையச் செய்கின்றன. சூனியனின் முற்கால வாழ்வு குறித்த விரிவாக தகவல்கள் இந்தப் பகுதியில் தெரிவிக்கப்பட்டுள்ளன. ‘சகட விருட்சம்’ என்ற புதுவித கருத்து மிகச் சிறப்பு. இனிச் சூனியன் ‘விஸ்வரூபம்’ எடுப்பது உறுதி. இந்த அத்தியாயத்தில் இடைவெட்டாகச் செம்மொழிப்பரியா – சாகரிகா பற்றிய செய்திகளும் செம்மொழிப்பிரியாவின் கட்டுரை ஏற்படுத்திய பரபரப்பும் சிறப்பு. சூனியனைப்...

கபடவேடதாரி – கோபி சரபோஜி மதிப்புரை (அத்தியாயம் 26)

தலைப்பை வாசித்ததும் மீண்டும் சில முறை உச்சரித்து பார்த்தேன். அந்தச் சொல்லாடல் உவப்பாய் இருந்ததைப் போல அதற்கான காரணமும் அத்தனை உவப்பு! மின் தடைக்கு துறை சார்ந்த அமைச்சர் சொன்ன காரணத்திற்கான அத்தனை சாத்தியங்களும் இருக்கிறது என்பதற்கான ஆதாரங்களை பா.ரா. தன் படைப்பின் வழி நிறுவி இருக்கிறார். அதுல்யாவின் பதிவை வாசித்த கோவிந்தசாமி பதறியடித்துக் கொண்டு தன் நிலை மறந்து நகர நிர்வாக அலுவலகம் நோக்கி...

கபடவேடதாரி – கோபி சரபோஜி மதிப்புரை (அத்தியாயம் 25)

சாகரிகா கலங்கடித்துக் கொண்டிருந்த இடத்தை அதுல்யா கைப்பற்றினாள். வெண்பலகையில் அவள் இட்ட பதிவு சாகரிகாவுக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது. அதிலிருந்து மீள அதுல்யாவிடம் தனி உரையாடலை நிகழ்த்திய சாகரிகாவுக்கு அவள் சொன்ன தகவல் அந்த அதிர்ச்சியை இன்னும் கூடுதலாக்கியது. கோவிந்தசாமியின் இன்னொரு முகமாக அதுல்யா காட்டும் அவன் செயல்பாடுகள் நம்மையும் ஆச்சர்யம் கொள்ள வைக்கின்றன. ”அதற்கெல்லாம் சரிபட்டு வரமாட்டான்” என...

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி