ArchiveJune 2021

கபடவேடதாரி – பா. சுதாகர் மதிப்புரை (அத்தியாயம் 24)

பொதுவாக உலகத்தில் என்ன நடக்கிறது? பிரம்மன் ஒரு உயிரை படைக்கிறான். அந்த உயிர் போகிற போக்கில் இந்த மண்ணில் வாழ்ந்து ஒரு சரித்திரத்தை விட்டுவிட்டுப் போகிறது. அதனை எத்தனை பேர் நினைவில் எவ்வளவு நாட்கள் வைத்திருப்பார்கள் என்பது வேறுவிஷயம். ஆனால், தான் அந்த பிரம்மனைப் போலல்ல என நினைக்கும் சூனியன் தான் படைக்கப் போகும் படைப்பின் சரித்திரத்தை முதலில் எழுதிவிட்டு அதன் பிறகே அவளை படைக்கிறன். அழகிய அந்த...

கபடவேடதாரி – சாய் வைஷ்ணவி மதிப்புரை (அத்தியாயம் 9)

இதென்ன கூத்து? பாரா தன்னை தானே இழுத்து கதையில் விட்டுக்கொள்கிறாரே. போதாத குறைக்கு கோரக்கர் வேறு. சரி இருக்கட்டும். இப்போதைக்கு பாராவை சூனியன் எதிரியாகப் பார்க்கிறான். ஏனெனில் பாரா கடவுளின் கைக்கூலியான கோரக்கர் சித்தரின் அதிதீவிர பக்தர்.என்றால் சூனியன் சாலச்சிறந்த சங்கியான கோவிந்துக்கு ஏன் உதவ நினைக்கிறான்?அவன் சூனியனின் எதிரியான கடவுளின் தீவிர குருட்டு பக்தனாயிற்றே? நீல நகரத்தின் வெண்பலகையை...

நான் மில்லியனர் ஆகப் போகிறேன்.

அன்பின் மூசா முகமது, உங்கள் அஞ்சலுக்கு நன்றி. சர்வதேச வர்த்தக ஆய்வு நிறுவன டைரக்டரிக்கு என் மின்னஞ்சல் எப்படிச் சென்றது என்று தெரியவில்லை. பாருங்கள், நான் எவ்வளவு பெரிய அப்பாடக்கார் என்பது எனக்கே தெரியாதிருக்கிறது. அது நிற்க. இருபத்திரண்டு மில்லியனில் நாற்பத்தைந்து சதமானப் பங்கு என்பது பெரிய தொகை மட்டுமல்ல. உங்கள் பரந்த உள்ளத்தையும் காட்டுகின்றது. இந்தப் பணம் எனக்குக் கிடைத்துவிடும் பட்சத்தில்...

கபடவேடதாரி – பா. சுதாகர் மதிப்புரை (அத்தியாயம் 23)

முதலில் குனியன் சொல்கிறான், ஏதோ ஒரு மலை, மலையில் ஒரு மரம், அதிலொரு பழம், அந்தப் பழத்தின் சிறப்பு, அதைக் கொண்டு அவன் செய்யப் போகும் பணிகள், இவ்வளவுதான். ஆனால் இதையே ஆயிரம் வார்த்தைகளுக்கு மேல் விவரித்துக் கொண்டே சென்றால், வேறென்ன, பிரமிப்புதான் மிஞ்சுகிறது. அவையெல்லாம் நமது கற்பனைக்கு மிகவும் அப்பாற்பட்டவை. பிறகு வருவதெல்லாம் நாம் அறிந்த விஷயங்கள் தான். ஆனால் அவற்றை சொல்வது யார்? அந்த...

கபடவேடதாரி – பிரியதர்சினி பழனி மதிப்புரை (அத்தியாயம் 23)

கடந்த சில அத்தியாயங்களாகக் கதைக்களம் நேரியலாகவும், புனைவுகள் அதிகம் இல்லாமலும் நகர்ந்து கொண்டிருந்தது. அதற்கெல்லாம் ஈடு செய்வது போல, இந்த அத்தியாயம் மிகு புனைவைக் கையிலெடுத்து விறுவிறுப்பாய் பயணிக்கிறது. மனிதனுக்கோ, சூனியனுக்கோ ஏதாவது ஒன்றின் மீது ஒரு பயம் கலந்த மரியாதை வேண்டி இருக்கிறது. மனிதனுக்கு கடவுளைப் போல, சூனியர்களுக்கு ஹிக்லியோனஸ் மலைச் சிகரத்தில் இருக்கும் சகட விருட்சம். அதன் ஓசைக்கு...

கபடவேடதாரி – சாய் வைஷ்ணவி மதிப்புரை (அத்தியாயம் 8)

கோவிந்தசாமியின் நிழலும் சூனியனும் என்ன ஆனார்கள் என்பது தெரியாமல் நகரின் எல்லைக்குள் அமர்ந்திருந்த கோவிந்தசாமிக்கு பசி வந்துவிட்டது. பாவம் என்ன செய்வான்? எங்கேயாவது கடைகளில் டீ பானிபூரி தருகிறார்களா ?என்று தேடிப்பார்க்கிறான். மொழி தெரியாத ஊரில் என்னவென்று தேடுவது?யாரைக்கேட்பது? அவனுக்கு இந்தியின் நினைவு வருகையில் எனக்கு கோபம் வந்தது. அதற்கென அவனுக்கு ஒரு கதை வேறு இருந்தது. ஒரு மாநாட்டில் அவன்...

கபடவேடதாரி – சாய் வைஷ்ணவி மதிப்புரை (அத்தியாயம் 7)

என்ன சொல்வது?அடடா!கற்பனை வானை பொத்துக்கொண்டு ஊற்றுகிறதே.நிச்சயம் இதுபோல் ஒரு கற்பனை புனைவு கதையை கேட்டிருக்கமாட்டோம். அந்தரங்கம் இல்லாத உலகம். ரகசியம் இல்லாத உலகம். நேற்றிரவு யார் யாரோடு இருந்தார்கள் என்பதை ஊர் மொத்தமும் தெரிந்து கொள்ளும். அதற்கென பிரத்யேகமான வெள்ளை போர்டு பொதுவெளியிலும் வீட்டிற்குள்ளும் வைத்திருக்கிறார்கள்.வீட்டில் நடப்பதை வீட்டிலிருக்கும் பலகையில் எழுதி விட வேண்டும். இன்னும்...

கபடவேடதாரி – பிரியா சபாபதி மதிப்புரை (அத்தியாயம் 21)

மனித மனமானது செம்மையானால் மந்திரம் தேவையில்லை என்று கூறியுள்ளனர். ஆனால் மனமானது செம்மையாகும் வழியே இல்லையே. கோவிந்தசாமியின் மனம், உடல், ஆன்மா ஒன்றுடன் ஒன்று இணைய மறுக்கிறது. மறுத்தலுக்குத் தன்னை ஒப்புக்கொடுத்து விடுகிறான். கோவிந்தசாமியின் மன அலைகளைச் சூனியன் உள்ளுக்குள் இருந்தே பார்த்தே உள்ளூர ரசிக்கிறான். சூனியன் தன் நிலைநிறுத்தலை எண்ணிக் கொண்டே இருக்கிறான். செம்மொழிப்ரியா எனும் உருக்கொண்டு...

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

Subscribe to News Letter


Exit mobile version