ArchiveJuly 2021

கபடவேடதாரி – பா. சுதாகர் மதிப்புரை (அத்தியாயம் 35)

ஒருவழியாக கோவிந்தசாமி நீலவனத்துக்கு வந்துவிட்டான். வந்தவன் தனியாக வராமல் ஒரு குழுவில் ஒரு அங்கத்தினனாக வருகிறான். அதற்கு ஒரு திருப்பதி கதை பின்னனியாக சொல்லப்படுகிறது. அவன் சாகரிகாவின் கணவன் என்பதை அறிந்து கொள்கிற அந்தக்குழுவினர் அவனிடம் சாகரிகாவைப் பற்றியே விசாரிக்கின்றனர். இடையில் இன்னொரு தகவலும் சொல்கிறார்கள். இரவு ராணி எனும் அந்த மந்திரமலர், மாதம் ஒரு முறை தான் பூக்குமாம். ஏற்கனவே பூத்தமலரை...

கபடவேடதாரி – பிரியா சபாபதி மதிப்புரை (அத்தியாயம் 30)

பாராவிற்கும் சூனியனுக்குமான போர் இவ்வாறாக மாறும் என எண்ணவில்லை. இது போன்ற ஒரு திருப்பத்தை நான் எதிர்ப்பார்க்கவில்லை. புராணக்கதைகளில் கானகத்தில் போர் நடைபெற்ற காட்சிகளைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் இப்போர் நவீன காலப் போர் அல்லவா போன்று இருக்கிறது. சாகரிகா,ஷில்பா, நிழல் அவ்விடத்திற்கு வரும் பொழுது சூனியனின் படைப்புகள் ஒரு சேர அவர்களைக் காண்கிறார்களே என எண்ணிக் கொண்டிருக்கும் போதே...

கபடவேடதாரி – பிரியா சபாபதி மதிப்புரை (அத்தியாயம் 29)

கோவிந்தசாமியைப் போன்று கோவிந்தசாமியின் நிழலும் சாகரிகாவை மனதார விரும்ப ஆரம்பித்தது. நிழலும் அவனின் பிரதி பிம்பம்தானே வேறு எப்படி இருக்கும். சாகரிகாவின் செய்கைகளால் அன்பின் உச்சத்திற்குச் செல்கிறது. ஷில்பாவிடம் அவளைத் தவிர வேறு யாருக்கும் தன் மனத்தில் இடமில்லை. சாகரிகாவும் நிழலும் ஒருவருக்கொருவர் படைக்கப்பட்டுள்ளனர் என்பதை வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் சொல்லி உறுதிப்படுத்திக் கொள்கிறது. ஷில்பா...

படித்துக் கிழித்த புத்தகம்

ஆயிரம் புத்தகங்கள் படித்திருப்பேன். ஆனால் படித்துக் கிழித்த புத்தகம் என்றால் அது லிஃப்கோ டிக்‌ஷனரிதான். பள்ளியில் நான் கற்காத ஆங்கிலத்தை வீட்டில் எனக்கு அப்பா சொல்லிக் கொடுத்தார். கைல எப்பவும் டிக்‌ஷனரி வெச்சிக்கோ என்பார். அவருக்கு ஆசிரியராக இருந்த யாரோ ஒருவர் என்ன கேட்டாலும் refer to the dictionary and come to my room என்று சொல்வாராம். பையன்கள் அதை வைத்துக்கொண்டு அவரை எப்படியெல்லாம்...

கபடவேடதாரி – பா. சுதாகர் மதிப்புரை (அத்தியாயம் 34)

மந்திரமலரை பறிக்க வந்து கொண்டிருக்கும் கோவிந்தசாமி இன்னும் வந்து சேரவில்லை. சாகரிகாவுக்கும் ஷில்பாவுக்கும் சூனியன் அன்ட் கோ அந்த காட்டில் இருப்பது தெரியாமல் நிழலை சுற்றிப் பார்க்க விட்டுவிட்டு இவர்கள் ரிலாக்ஸ் ஆகிவிட்டனர். நிழலுக்கு இவை எதுவும் தெரியாமல் காட்டை சுற்றிப் பார்த்துவிட்டு மந்திரமலர் தடாகத்தின் கரையில் வந்து அமர்கிறது. அதனைத்தேடி வந்த செம்மொழிப்ரியா அதனைத் தன் வலையில் வீழ்த்தி...

முழு தயிர்சாதமாக இருப்பது எப்படி?

  ‘முழு தயிர்சாதமாக இருப்பது எப்படி?’ கிண்டிலில் (மட்டும்) வெளியாகவிருக்கும் என்னுடைய அடுத்த கட்டுரை நூல். ஆகஸ்ட் 4ம் தேதி இந்தப் புத்தகம் வெளியாகிறது. இந்தப் புத்தகத்தின் விலை ரூ. 125. ஆனால் இப்போது முதல் முன் பதிவு செய்தால் இதன் விலை ரூ. 60 மட்டுமே. முன்பதிவு வசதியின் மூலம் சரி பாதிக்கும் கீழே விலையில் தள்ளுபடி வழங்க முடிகிறது. நீங்கள் இந்தப் புத்தகத்தை முன்பதிவு செய்தால்...

கபடவேடதாரி – பிரியா சபாபதி மதிப்புரை (அத்தியாயம் 28)

மனிதன் ஆதிகாலத்தில் இயற்கையோடு இணைந்துதான் வாழ்ந்திருக்கிறான். காலத்தை விட்டு மனிதன் விலக விலக இயற்கையுடனான பிணைப்பும் குறைந்தது. அது போல சூனியனியர்கள் இயற்கை மிக முக்கிய இடத்தை வகிக்கிறது. ஆனால் நீலநகரவாசிகளின் உலகிலோ அது அவர்களை விட்டுப் பல மைல் தூரத்தில் சென்றுள்ளது.தானாக விளையக் கூடிய தாவரங்கள், மனிதன் விளைவிக்கக்கூடிய தாவரங்கள் உள்ளன என சூனியன் மனிதர்களுக்கு இயற்கையின் அருமையை உணர்த்துகிறான்...

கபடவேடதாரி – பிரியா சபாபதி மதிப்புரை (அத்தியாயம் 27)

சூனியன் மட்டுமே இந்த அத்தியாயம் முழுவதும் விரவி உள்ளான். தன்னைப் பற்றிய பழங்கதைகளைக் கூறுகிறான்.தான் வல்லமை பொருந்தியவன் என்பதை ஒவ்வொரு வரிகளிலும் நமக்கு உணர்த்துகிறான். அவன் படைத்த கதாப்பாத்திரங்கள் ஏன்? எதற்கு? உருவாக்கப்பட்ட என்பதையும் கூறுகிறான். இதில் பல துணைக்கதாப்பாத்திரங்களும் காணப்படுகின்றன. சாகரிகாவின் உண்மைக் குணமும் அந்த இரு கதாப்பாத்திரங்களின் வழியே தெளிவாகத் தெரிகிறது. சூனியன் பிற...

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி