ArchiveJuly 2021

கபடவேடதாரி – பிரியா சபாபதி மதிப்புரை (அத்தியாயம் 26)

மனிதர்களுள் சிலர் இணைந்து வாழ்ந்தாலும் தனித்துதான் இருக்கிறார்கள். அது போல்தான் நீல நகரத்தில் வசிப்பவர்களும் உள்ளார்கள். அவர்கள் பேச்சினை அடக்கி எழுத்தின் வழியே தன் பேச்சினை பரப்புகிறார்கள்.இந்நகரத்தில் நம் கோவிந்தசாமி படும் பாட்டைக் கண்டு மனம் வருந்துகிறது. தனக்கு இழைக்கப்படும் துன்பத்திற்கு வழி தேடுகிறான். எல்லாம் அவனுக்கு எதிராகவே செயல்படுகிறது. இயற்கை கூட அவனுக்கு கைக்கொடுக்கவில்லை. கைவிட்டு...

கபடவேடதாரி – பிரியா சபாபதி மதிப்புரை (அத்தியாயம் 25)

சாகரிகாவுக்குக் கோவிந்தசாமிக்குப் பிடிக்கவில்லை என்றாலும் அவனை பிறர் விரும்பக் கூடாது. அவனுக்கும் யாரையும் பிடிக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறாள் என்பது தெளிவாகிறது. அவனைப் பிடிக்கவில்லை என்று கூறி அவனை விடாமல் பிடித்துக் கொண்டிருக்கிறாள். இது மனித இயல்புதான். இதை மாற்ற இயலாது.நமக்கு ஒருவரைப் பிடித்திருந்தாலும் பிடிக்காமல் இருந்தாலும் அவர்களை நம் எண்ணத்தைச் சுற்றியே சுற்ற வைத்துக்...

இது போதும்

தொழில்நுட்ப யுகத்தில் மனிதன் மூன்று மிகப்பெரிய மாயைகளில் தவறாமல் விழுகிறான். 1. அன்லிமிடெட் டாக் டைம் 2. அன்லிமிடெட் டேட்டா 3. 1டிபி க்ளவுட் ஸ்டோரேஜ் நாம் பேசிக்கொண்டே இருப்பதில்லை. நாம் படம் பார்த்துக்கொண்டே இருப்பதில்லை. நாமே ஏறி உட்கார்ந்தாலும் 1 டிபி ஸ்டோரேஜ் ஸ்பேஸ் நிரம்பாது. அறிவு உணரும் இந்த உண்மையை நடைமுறைப்படுத்தும்போது தயக்கம் வந்துவிடுகிறது. தவறாமல் தவறு செய்துவிடுகிறோம். மிகவும்...

அருட்செல்வப் பேரரசனின் வால்மிகி ராமாயண மொழிபெயர்ப்பு

அருட்செல்வப் பேரரசன் வால்மிகி ராமாயணத்தை மொழியாக்கம் செய்யத் தொடங்கியிருக்கிறார். அவருக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். அவரது முழு மகாபாரதம் (கிஸாரி மோகன் கங்குலியின் ஆங்கில மொழிபெயர்ப்பிலிருந்து தமிழ்) ஒன்றுதான் இணையத்தில் நான் முழுதாக வாசித்த ஒரே தொடர். எளிய, நேர்த்தியான, சமகாலத் தமிழைத்தான் அவர் மொழிபெயர்ப்புக்குப் பயன்படுத்துகிறார். எங்குமே உறுத்தல் இல்லாமல் வாசிக்க முடியும். நான்கு...

கபடவேடதாரி – பிரியதர்சினி பழனி மதிப்புரை (அத்தியாயம் 32)

சூனியனின் மிக நுண்ணிய விவரங்களுடனான கதைகளை வெண்பலகையில் வாசிக்கையில் வெகுசுவாரசியம். இந்த அத்தியாயத்தில் முல்லைக்கொடியின் கதையையும், அவளுக்கும் கோவிந்தசாமிக்குமான உறவு எனச் சூனியன், கோவிந்தசாமிக்கு இன்னொரு கல்யாணமும் செய்து வைத்திருக்கிறான். வழக்கம்போல அதையெல்லாம் படித்துவிட்டு கோவிந்தசாமி வெகுவாய் அலறுகிறான்.மேலும் வாகனத்தில் இருந்தவர்களின் கருத்துகள் அவனை மேலும் கலங்கடிக்கின்றன. கோவிந்தசாமி நீல...

கபடவேடதாரி – பா. சுதாகர் மதிப்புரை (அத்தியாயம் 33)

இரவு ராணி என்னும் மந்திர மலரை பறித்துவந்து சாகரிகாவை கவர நீலவனத்துக்கு கோவிந்த சாமி சென்று கொண்டிருக்கையில், சூனியன் செம்மொழிப்பிரியாவுக்கும் அதுல்யாவுக்கும் ஆளுக்கொரு டாஸ்க் கொடுத்திருக்கிறான். கோவிந்தசாமியுடனான டாஸ்க்கை அதுல்யாவுக்கும், நிழலுக்கான டாஸ்க்கை செம்மொழிப்பிரியாவுக்கும் தந்திருக்கிறான் என அறிகிறோம். நிழலுடனான டாஸ்க்கை நிறைவேற்ற செம்மொழிப்பிரியா கிளம்புகிறாள். வழியில் அவள் நீலவனத்தின்...

தீவிரவாதியாக வாழ்வது எப்படி?

மாயவலை மொத்தம் 1300 பக்கங்கள். ஆறு வருடங்கள் வேலை செய்தேன். ஒரு நாள்கூட இடைவெளி இல்லாமல் இரண்டு வருடங்கள் எழுதினேன். இதெல்லாம் பெரிய விஷயமே இல்லை. அந்தப் புத்தகத்தை எழுதிக்கொண்டிருந்த காலத்தில் தீவிரவாத இயக்கங்களின் ட்விட்டர் கணக்குகளுக்குள் நுழைந்து, அதில் தொடர்புடைய நபர்களின் சொந்தப் பக்கங்களை தேடி ஃபாலோ செய்தது என்னைப் பொறுத்தவரை பெரிய சாகசம். அன்று இது அவ்வளவு எளிய காரியமல்ல. எப்படி என்று...

ஒரு சமர்ப்பணப் பிரச்னை

ஜெயமோகனின் ஒவ்வொரு புதிய புத்தகம் வெளிவரும்போதும் அதை அவர் யாருக்கு சமர்ப்பணம் செய்திருக்கிறார் என்று முதலில் பார்ப்பேன். நூற்றுக் கணக்கான புத்தகங்களை அவர் எழுதிக்கொண்டே இருப்பதில் எனக்கு வியப்பில்லை. ஒரு ஸ்திதப்ரக்ஞன் என்ன செய்வானோ அதைத்தான் அவர் செய்கிறார். ஆனால் ஒவ்வொரு புத்தகத்தையும் சமர்ப்பணம் செய்ய அவருக்கு எப்படியோ யாரோ ஒருவர் இருந்துவிடுகிறார். சில வருடங்களுக்கு முன்புவரை என். சொக்கன்...

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி