ArchiveNovember 2021

கபடவேடதாரி – பிரியதர்சினி பழனி மதிப்புரை (அத்தியாயம் 50)

கபடவேடதாரியின் இறுதி அத்தியாயத்திற்குள் நுழைந்துவிட்டோம். கோவிந்தசாமி முதன் முறையாகத் தனது அறிவை பயன்படுத்தி செயல்படுவதை பார்க்கிறோம். சூனியன் தான் அனைத்து பாத்திரங்களையும் படைத்திருக்கிறான், அதுவரையில் நமக்கிருந்த குழப்பம் தீர்க்கிறது. ஒரு பக்கம் கோவிந்தசாமி தான் நூற்று முப்பது பெண்களைத் திருமணம் செய்யப் போவதாகவும், மேலும் சாகரிகாவை விர்ச்சுவல் விவாகரத்து செய்யப் போவதாகவும் அறிவிக்கிறான்...

கபடவேடதாரி – பிரியதர்சினி பழனி மதிப்புரை (அத்தியாயம் 49)

கபடவேடதாரியில் கடைசி இரண்டு அத்தியாயங்களே இருக்கின்றன. இந்த அத்தியாயத்தில், சூனியன் தனது மொத்த திட்டத்தையும் விவரமாக விளக்குகிறான். அவன் குற்றவாளியாக இருந்து தப்பித்தது முதல், நாம் மறந்திருந்த பூகம்ப சங்கு வரை நினைவுப்படுத்துகிறான். அனைத்துமே அவனது திட்டத்தின்படி நடந்து கொண்டிருந்தது. அப்போது தான் அதுல்யா அந்தப் பூகம்பச் சங்கை எப்போது பயன்படுத்தப் போவதாகச் சூனியனிடம் கேட்கிறாள். இந்தக் கேள்வியில்...

கபடவேடதாரி – பிரியதர்சினி பழனி மதிப்புரை (அத்தியாயம் 48)

கபடவேடதாரியில் கடைசி சில அத்தியாயங்களே இருக்கின்றன, ஆனால் இன்னும் வேடதாரி யாரென்று நமக்குத் தெரியவில்லை. ஒரு பக்கம் சூனியன், கோவிந்தசாமி, சாகரிகா இவர்களெல்லாம் அவனது கதாபாத்திரங்கள் என்று சொல்கிறான், இன்னொரு பக்கம் ஷில்பா, அவள் கதையின் கதாபாத்திரங்கள் தான் சாகரிகாவும் பாராவும் என்கிறாள். யார் சொல்வது உண்மை, யாருடைய கதை இது என்ற குழப்பமே மிஞ்சுகிறது. இந்த அத்தியாயத்தில் சூனியன் மேல் கோபம் கொள்ளும்...

கபடவேடதாரி – பிரியதர்சினி பழனி மதிப்புரை (அத்தியாயம் 47)

ஒவ்வொரு அத்தியாயத்திலும் நம் சூனியனுக்குள் இருக்கும் ஒரு புதிய திறனை அறிந்து கொள்கிறோம். இந்த அத்தியாயத்தில் சூனியனுக்கு தொலைவில் வரும் போதே மூடர்களை கண்டு கொள்ளும் சக்தியெல்லாம் இருக்கிறதாம். ஒலிம்பிக் ஜோதி போல இரவு ராணி மலரைத் தூக்கி வரும் கோவிந்தசாமிக்கும் நம் சூனியனுக்கும் இடையேயான உரையாடல் சண்டையில் முடிகிறது. சூனியனை சபித்து விட்டு ஓட்டம் பிடிக்கிறான் கோவிந்தசாமி. இதற்குப் பிறகான கதையைச்...

கபடவேடதாரி – பா. சுதாகர் மதிப்புரை (அத்தியாயம் 50)

நான் சற்றும் எதிர்பாராத முடிவு. நான் மட்டுமல்ல, யாரும் இப்படி ஒரு முடிவை எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். முடிவை விடுங்கள். இந்த அத்தியாயம் தொடங்கியதில் இருந்தே ஜெட் வேகத்தில் பயணிக்கிறது. கதையில் யாரெல்லாம் மிகவும் புத்திசாலியாக இருந்தார்களோ அவர்களெல்லாம் முட்டாள்களாகளாக்கப் படுகிறார்கள். எனில் முழு முட்டாள் கோவிந்தசாமி? அவன்தான் அனைவரையும் முட்டாளாக்கிவிட்டு கதையோடு தன் வாழ்வை முடிக்கிறான்...

கபடவேடதாரி – பா. சுதாகர் மதிப்புரை (அத்தியாயம் 49)

இது இறுதிக்கு முந்தைய அத்தியாயம் என்ற அந்த கடைசி வரிதான் என்னை ஒருதரம் கதை முழுதையும் ஒருமுறை ரீவைண்ட் செய்துபார்க்கத் தூண்டியது. அதுதான் சூனியனையும் அவ்வாறு செய்யத் தூண்டி இருக்கலாம். பூகம்பச் சங்குடன் தான் பயணித்த விண்கலனை பாதுகாப்பதாகச் சொல்லி பாசாங்கு செய்து நீல நகரத்தில் குதிக்கும் சூனியன், நகரத்தில் நுழைவதற்கு கோவிந்தசாமியை பயன்படுத்திக்கொள்கிறான். அதற்கு பிரதிபலனாக அவனுக்கு உதவ...

கபடவேடதாரி – பா. சுதாகர் மதிப்புரை (அத்தியாயம் 48)

ஷில்பாவின் யோசனைப்படி கோவிந்தசாமி நீலவனத்தில் ஒரு சமஸ்தானம் அமைத்து அதன் மூலம் சாகரிகாவைக் கவர அனைத்து ஏற்பாடுகளும் செய்கிறான். சூனியனின் வார்த்தைகள் அவனை உறுத்திக்கொண்டிருந்தாலும் அதில் சலனமுற்று அவன் தான் வந்த வேலையை தவறவிட தயாராய் இல்லை. சாகரிகாவைக் கண்டு அவளிடம் அந்த நீலவனத்து மந்திரமலரை கொடுத்து தன் மனதிலுள்ள காதலை வெளிப்படுத்தும் செயல் ஒன்றே அவன் மனதை முழுமையாய் ஆட்கொண்டிருக்கிறது...

கபடவேடதாரி – பா. சுதாகர் மதிப்புரை (அத்தியாயம் 47)

மலருடன் செல்லும் கோவிந்தசாமியை சூனியன் சந்திக்கிறான். அவனை எவ்வாறெல்லாம் மனவலிமை குன்றச் செய்ய முடியுமோ அதையெல்லாம் செய்கிறான். சாகரிகா ஒரு திமுக அபிமானி என்றும் அவன் கொஞ்சிக் குலாவிய இரண்டு பேரில் ஒருத்தி தமிழ்த் தேசியத் தாரகை என்றும் இன்னொருத்தி நக்சல்பாரி என்றும் சொல்கிறான். கோவிந்தசாமியின் இந்துத்துவ நம்பிக்கையும் சாகரிகாவின் மீது கொண்டிருக்கும் காதலும் ஒன்றுதான் என்கிறான். “உன்...

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி