ArchiveFebruary 2022

அஞ்சலி: ஜே.எஸ். ராகவன்

மூத்த எழுத்தாளர் ஜே.எஸ். ராகவன் காலமானார். நெடுநாள் கல்கி, விகடன் வாசகர்கள் என்றால் அவர் பெயர் உங்களுக்குத் தெரிந்திருக்கும். நல்ல நகைச்சுவை எழுத்தாளர். மாம்பலம் டைம்ஸ் என்னும் பிராந்தியப் பத்திரிகையில் பல்லாண்டுக் காலமாக இதழ் தவறாமல் ‘தமாஷா வரிகள்’ என்னும் பத்தியை எழுதி வந்தார். விரைவில் அந்தப் பத்தி ஆயிரமாவது அத்தியாயத்தைத் தொடவிருந்தது. ஒரு வார இதழில் ஆயிரம் கட்டுரைகள் –...

சன் டிவி பேட்டி

புத்தகக் காட்சியை முன்னிட்டு சன் டிவி வணக்கம் தமிழா நிகழ்ச்சியில் ஒரு பேட்டிக்கு அழைத்திருந்தார்கள். நேற்று (பிப்ரவரி 23) ஒளிபரப்பான அந்நிகழ்ச்சி இன்று இணையத்தில் வெளியாகியிருக்கிறது. கீழே அதனைக் காணலாம்.

எழுதுதல் பற்றிய குறிப்புகள் – ஒரு பார்வை: திருவாரூர் சரவணன்

வணக்கம் பாரா. புத்தகம் உள்ளங்கை அகலத்திற்கு கச்சிதமாக இருந்தது முதல் ஆச்சர்யம். பிறகு சித்திரகுப்தன் பேரேடின் அளவு முன்மாதிரியாக இருந்திருக்கும் என்று தோன்றியது. கலையைச் சொல்லித்தர முடியாது. ஆனால் நுட்பங்களை முடியும். பின் அட்டையில் உள்ள இந்த வரிகள்தான் மொத்த சாரம்சம். சைக்கிள் கற்றுக் கொடுத்தால் எனக்கு முன்னாலேயே ஏறி ஓட்டிட்டுப் போவ – இப்படிப்பட்ட பங்காளி எனக்கு உண்டு. ஆனால் நீங்கள்...

சென்னை புத்தகக் காட்சி 2022

சென்னை புத்தகக் காட்சி 2022 இன்று தொடங்குகிறது. வழக்கம் போல ஜனவரியில் திட்டமிடப்பட்டு, அது தள்ளிப் போனபோது ஒரு திருமணம் ஒத்தி வைக்கப்பட்ட உணர்வே இருந்தது. வெளியே சொல்ல முடியாத துக்கம்; மனச் சோர்வு. கழுவித் தள்ளிவிட்டு வேலையைப் பார்க்க வேண்டும் என்று திரும்பத் திரும்ப எனக்கு நானே சொல்லிக்கொண்டு, வலுக்கட்டாயமாகச் சில காரியங்களை இழுத்துப் போட்டுக்கொண்டு செய்தேன். ஆன்லைன் புத்தக ஆர்டர்களுக்கு ஒரு...

காதலற்றவன்

இன்றெல்லாம் ஏராளமான காதல் குறிப்புகள், கவிதைகள், நினைவுச் சிதறல்கள் என்று சமூக வெளி எங்கும் ஊதுபத்திப் புகை போலக் காதல் மிதந்து ஊர்ந்துகொண்டே இருந்தது. தனக்கு வரும் மர்மப் பரிசுகளை மனுஷ்யபுத்திரன் தொடர்ந்து புகைப்படங்களாகவும் குறிப்புகளாகவும் தெரியப்படுத்திக்கொண்டே இருந்தார். தனக்கு யாரும் முத்தம் தரப்போவதில்லை என்று நிச்சயமாகத் தெரிந்தபடியால் மைலாப்பூர் ஜன்னல் கடையில் உருளைக் கிழங்கு பஜ்ஜி...

இறவான் – ஒலிப் புத்தகம்

இறவான் ஒலிப் புத்தகம் இன்று ஸ்டோரி டெல்லில் வெளியாகியிருக்கிறது. நண்பர்கள் கேட்டுப் பார்த்து உங்கள் கருத்துகளை எழுத வேண்டுகிறேன். தொடர்ந்து என்னுடைய பல புத்தகங்கள் ஸ்டோரி டெல்லில் ஒலி நூல்களாக வர இருக்கின்றன என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
இறவான் ஒலிப் புத்தகத்தைக் கேட்டு ரசிக்க இங்கே செல்லவும்.

இறவான் நினைவுகள்

பிப்ரவரி 14 அன்று ‘இறவான்’ ஒலிப் புத்தகமாக வெளியாகிறது. ஸ்டோரி டெல் நிறுவனம் இதனை வெளியிடுகிறது. இதனை ஒட்டி ஸ்டோரி டெல்லின் பவ்யா கீர்த்திவாசனுக்கு ஒரு சிறிய பேட்டி அளித்தேன். கீழே உள்ள வீடியோவில் அதனைக் காணலாம்.

மறதி

என்னுடைய நினைவுத் திறன் மிக அதிகம். மிகச் சிறிய வயதுகளில் நடந்த சிறிய சம்பவங்கள்கூட நினைவிருக்கின்றன. தொடக்கப் பள்ளி, உயர் நிலைப் பள்ளி நாள்களில் கலந்துகொண்ட திருமண நிகழ்ச்சிகள், அச்சந்தர்ப்பங்களில் நான் அணிந்திருந்த உடைகளின் நிறம் வரை இன்னும் மறக்கவில்லை. ஒழுங்காகப் படித்துக்கொண்டிருந்த காலத்தில் மனனம் செய்த பாடப் பகுதிகள், செய்யுள்கள் அனைத்தும் நினைவில் இருக்கின்றன. கேளம்பாக்கம் அரசினர்...

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி