ArchiveJanuary 2023

குளிர்

பொதுவாக வேலை செய்ய அமரும்போது ஃபேன் போட மாட்டேன். ஏசிதான் எப்போதும். ஃபேன் சத்தம் அலர்ஜி. ஏசியிலும் சத்தம் உண்டென்றாலும் அந்தளவு மோசமில்லை. ஆனால் என் அலுவலகத்தில் ஏசி கிடையாது. எனவே ஃபேனை அணைத்துவிட்டு எழுதுவேன். எழுதாமல், யோசிக்கும்போது ஃபேன் போட்டுக்கொள்வேன். அதாவது குளிர்ச்சி, சூடு என்பது பொருட்டல்ல. சத்தம், சத்தமின்மையே பேசுபொருள். இப்படித்தான் சென்ற ஆண்டு வரை வாழ்ந்து வந்தேன். என்ன காரணமோ...

மெட்ராஸ் பேப்பர் விழா

மெட்ராஸ் பேப்பர் வாசகர் திருவிழா – 13 நூல்கள் வெளியீட்டு விழா கடந்த ஜனவரி 11ம் தேதி புதன் கிழமை அன்று சென்னை கேகே நகர் டிஸ்கவரி புக் பேலஸ் அரங்கில் சிறப்பாக நடந்தேறியது. விழாவினை நண்பர் கபிலன் (ஸ்ருதி டிவி) நேரலையில் கண்டு களிக்க வழி செய்தார். பெருந்திரளாகக் கூடிய வாசகர்களின் வாழ்த்து புதிய தெம்பையும் உற்சாகத்தையும் தந்தது. விழாவின் வீடியோக்கள் கீழே உள்ளன. விழாவில் எனது வரவேற்புரை...

வாவ் தமிழா பேட்டி

நடைபெறும் சென்னை புத்தகக் காட்சியை ஒட்டி, தமிழில் அவசியம் படிக்க வேண்டிய புத்தகங்களைக் குறித்து வாவ் தமிழா யூ ட்யூப் சேனலுக்காக நண்பர் தளவாய் சுந்தரத்துக்கு ஒரு பேட்டியளித்தேன். கீழே அது இரண்டு பகுதிகளாகத் தரப்பட்டுள்ளது.

இது போதும்

நேற்று டிஸ்கவரி வேடியப்பன் அழைப்பின் பேரில் ஆண்டிறுதி புத்தக இரவு நிகழ்ச்சியில் கலந்துகொள்ளச் சென்றிருந்தேன். நண்பர் சமஸையும் என்னையும் கேஎன் சிவராமன் கேள்விகள் கேட்டுப் பேச வைத்தார். நிகழ்ச்சியில் ஒரு வினா – புதிய எழுத்தாளர்களை நீங்கள் எவ்வாறு அடையாளம் காண்கிறீர்கள்? எப்படித் தேர்ந்தெடுக்கிறீர்கள்? சுமார் இருபதாண்டுகளாகப் பல்வேறு சந்தர்ப்பங்களில் பலர் இதனைக் கேட்டுவிட்டார்கள். பதில் மிக...

இந்த வருடம் ஏன் எதுவும் செய்யவில்லை?

ஆண்டுக்கு ஒரு நாவல், ஒரு பெரிய கேன்வாஸ் நான் ஃபிக்‌ஷன் என்பது என் ஒழுங்கீனங்களில் இருந்து என்னைக் காப்பாற்றிக்கொள்வதற்காக நானே ஏற்படுத்திக்கொண்ட வழக்கம். சென்ற ஆண்டு அப்படியொன்றும் ஒழுங்கீனம் பொங்கிப் பெருகவில்லை ஆயினும் நாவலை முடிக்க முடியவில்லை. காரணம், வகுப்புகள்-மெட்ராஸ் பேப்பர்-புதிய எழுத்தாளர்களின் புத்தக முயற்சிகள். மாயவலை சீரிஸில் மிச்சமிருந்த புத்தகங்களின் மறு பதிப்புகளைக் கொண்டு வந்தேன்...

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

Subscribe to News Letter


Exit mobile version