மறுபதிப்புக்கான மறுஅறிவிப்பு

என்னால் எழுதப்பட்டதான ‘தாலிபன்’ மறுபதிப்புப் பணிகள் முடிவடைந்து இன்று புத்தகம் கைக்குக் கிடைத்தது. பார்க்க மிக லட்சணமாக இருக்கும் இந்நூல் படிக்கவும் அருமையாகவே இருக்குமென்பதைச் சொல்லத் தேவையில்லை. சந்தேகமிருப்பின் முன்னதான பதிப்புகளில் பாய்ந்து பாய்ந்து வாங்கி வாசித்த நல்லவர்களிடம் விசாரித்துக்கொள்ளலாம்.

இந்தப் புதிய பதிப்பில் புத்தகமானது 256 பக்கங்கள் உள்ளதாக இருக்கிறது. விலையோவெனில் வெறும் 160 உரூபாய்கள் மட்டுமே. என்ன ஒரு சல்லிசு!

இணையவெளியில் மதி நிலையத்தின் புத்தகங்கள் உடுமலை டாட்காமில் கிடைக்கத் தொடங்கியிருப்பதாகச் சற்றுமுன் அறிந்தேன். மிக விரைவில் மதி நிலையத்துக்கே ஓர் இணைய அங்காடி திறக்கப்படும் என்பதையும் அறிந்தேன். இவையெல்லாம் வாசக நேயர்களுக்கு எனது மற்றும் மதி நிலையத்தாரின் தீபாவளிப் பரிசாக இனிப்பூட்டக்கூடியவை என்பதில் எனக்கு எள்ளளவும் ஐயமில்லை.

8 comments

  • இந்த விமர்சனம் உங்களுக்கு ஏற்புடையதாக இல்லாவிட்டால் ஒதுக்கி விடவும்.

    சென்ற முறை நடந்த திருப்பூர் புத்தக கண்காட்சியில் ஒரு கடையில் பொன்னியின் செல்வன் 5 பாகங்களும் அடங்கிய புத்தகத்தைப் பார்த்தேன். ஆடம்பரம் ஆர்ப்பாட்டம் அழகு என்ற போர்வையில் எதுவும் தேவையில்லாமல் விலை ரூபாய் வெறுமனே 290.,00

    பதிப்பகத்தின் பெயர் எல் கே எம் பப்ளிகேஷன்,
    பழைய எண் 15.4
    புதிய எண் 33,4
    ராமநாதன் தெரு
    தி.நகர். சென்னை 17.

    விலையைச் சொல்லி வாங்கச் சொன்ன போது விளையாட்டுக்குச் சொல்கின்றார்கள் என்றே நினைத்தேன். இதில் கழிவு வேறு கொடுத்தார்கள்.

    தங்கள் பதிப்பக மக்களுக்கு இது போன்ற ஒரு எண்ணம் இருந்தால் உங்களுக்கு உடன்பாடு இருக்கும்பட்சத்தில் இது போல உங்கள் பெரிய புத்தகங்கள் எல்லாம் வர வேண்டும். சம காலஇளைஞர்களுக்க சர்வதேச அரசியல், வெளிநாட்டு தொடர்புகள், தீவிரவாதஇயக்கங்கள் குறித்த புரிதல்கள் தெரிய வேண்டும் என்பது என் விருப்பம்.

    நிச்சயம் உங்கள் புத்தகங்களை படிக்கும் போது என்னைப் போல பலருக்கும் நாமும் எழுதலாம் என்ற எண்ணம் நிச்சயம் வந்துவிடும் மந்திர எழுத்து நடை உங்களுடையது.

    அலங்காரத்திற்கென்று ஒதுக்கும் சேர்க்கும் பணம் தான் பல பெரிய புத்தகங்களை அதன் விலை பார்த்து பலரும் வாங்குவதில்லை என்பது என் கருத்து. விதிவிலக்குகளைத் தவிர்த்து. இதில் முகவரியை குறிப்பிடக்காரணம் அதன் நம்பகத்தன்மையை உங்களுக்கு தெரியப் படுத்துவதன் பொருட்டே,

    பெரிய அகலமான 854 புக்கங்கள் உள்ள புத்தகத்தை கையில் வைத்துக் கொண்டு வாசிக்க அத்தனை சுகமாக இருக்கிறது.

  • தவறாக நினைக்க மாட்டீர்களே ! NHM இல் இந்தப் புத்தகம் இதே 256 பக்கங்களுடன் 100 ரூபாய்க்கு கிடைக்கிறது. நீங்கள் 160 ரூபாயை சல்லிசு என்கிறீர்கள் . Any Extra matter update ?

    • சட்டநாதன்:- என்னெச்செம் வெளியீடாக இது வந்தபோது ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 61 உரூபாய். ஒரு கிலோ கத்திரிக்காயின் விலை 8 ரூபாய். இவ்வண்ணமே அரிசி, துவரம்பருப்பு, உளுத்தம்பருப்பு, பினாயில், சீயக்காய்த்தூள், தக்காளிப்பழம், டீசல், சமையல் எரிவாயு, துணிமணிகள் போன்றவையும் விலைமாறுதல் கண்டிருக்கின்றன. காகிதமும் மையும் மட்டும் காலத்துக்கேற்ற விலையுயர்வு காணாதா?

  • கண்டிப்பாக காலத்திற்கேற்ற விலைஉயர்வு அவசியம் தான். நாங்க மட்டும் இன்கிரிமென்ட் எதிர்பார்க்காமலா வேலை பார்க்கிறோம்.

    இந்தப் புத்தகம் ஏற்கனவே என்னிடம் உள்ளது. அதனால தான் மேட்டர் update ஆகியிருக்கான்னு கேட்டேன். மாயவலை , டாலர் தேசம் , நிலமெல்லாம் ரத்தம் எல்லாவற்றையும் தள்ளுபடி எதுவும் இன்றி வாங்கினேன் . மாயவலை மிகக் குறைந்த விலையில் கிடைக்கப் போவதாக முந்தைய பதிவில் சொன்னீர்கள் அல்லவா ? அந்த வகையில் கேட்டேன். வேறு எண்ணம் இல்லை. உங்களுக்கு எழுதிய முதல் பின்னூட்டமே இப்படி எக்குத் தப்பாக ஆனது என் துரதிர்ஷ்டமே.

    தமிழில் கிடைக்கின்ற எவ்வளவோ நல்ல புத்தகங்கள் ஒப்பீட்டளவில் குறைந்த விலை கொண்டவையே.

By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

Subscribe to News Letter


Exit mobile version