சிறுவர் எழுத்துப் பயிலரங்கம்

வரும் வெள்ளி-சனி [ஆக. 20,21] இரு தினங்களில் சிறுவர்களுக்காக எழுதுவது – பதிப்பிப்பது தொடர்பான பயிலரங்கம் ஒன்று புது தில்லியில் நடைபெறுகிறது. இதில் கலந்துகொள்வதற்காக நாளை புறப்படுகிறேன்.

சிறுவர்களுக்காக எழுதப்படும் புத்தகங்கள் எப்படி இருக்கவேண்டும் என்பதைவிட, எப்படியெல்லாம் இருக்கக்கூடாது என்று இப்பயிலரங்கம் கற்றுத்தரும் என்கிறார்கள். காமிக்ஸ் மற்றும் கிராஃபிக் நாவல்களை உருவாக்குதல் பற்றிய அமர்வு ஒன்று உள்ளது. ‘நாங்கள் என்ன எதிர்பார்க்கிறோம்?’ என்று சிறுவர்களே விவரிக்கும் தனி அமர்வு ஒன்றும் உண்டு.

தவிர, சிறுவர் புத்தகங்களுக்கு வரைதல் தொடர்பாக, மொழிமாற்றம் செய்வது தொடர்பாக, பல்வேறு வயதுக் குழந்தைகளுக்கேற்ற மொழியைத் தேர்ந்தெடுப்பது தொடர்பாக, மீபுனைவு எழுத்து தொடர்பாகத் தனித்தனி அமர்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

விக்ரம் சேத், அனிதா ராய், ஷோபா டே, ப்ரீத்தி பால் போன்றவர்களோடுகூட மணி சங்கர ஐயர், ஷீலா தீக்‌ஷித் போன்ற சிலரும் இப்பயிலரங்கில் பேச வருகிறார்கள் என்பது சுவாரசியம். ஒரு சில வெளிநாட்டுச் சிறுவர் இலக்கியப் படைப்பாளிகளும் கலந்துகொள்கிறார்கள்.

புது தில்லி ஜெர்மன் புக் ஆபீஸ் நிறுவனம் இந்தப் பயிலரங்கை நடத்துகிறது.

5 comments

  • வாவ்… சென்று வந்து நிறைய பகிர்ந்து கொள்ளுங்கள் எங்களோடும்.

  • வாழ்த்துகள்
    அடுத்த தலைமுறை புத்தகங்கள் படிப்பதை தொடர்வது இன்றைய குழந்தைகளைப் ப்டிக்கவைப்பதில்தானிருக்கிறது.அதை அறிவிய்ல் ரீதியாக அணுகுவ்தில் நீங்களும் பங்கேற்பது சந்தோஷத்தை தருகிறது

  • சிறுவர்களுக்கான காமிக்ஸ் , மற்றும் த்ரில் கதைகள் அழகாக கோர்வையாயாக எழுத இங்கே யாரும் முணையவில்லை.அதற்கான இடம் இன்னமும் யாராலும் வெல்லப்படவில்லை..ஹாரிபார்டர் அடைந்த மகுடம் இன்னமும் இங்கே யாராலும் சூடப்படாமல் தூசு படிந்து கிடைக்கிறது..

  • sir, what about “Siruvar payilarangam..” Neenga poitu vanthatha pathi yeluthuveenganu august 17 la irunthu kaathiruken.. konjamavathu sollungalen…

By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

Subscribe to News Letter


Exit mobile version