ஈரோடு புத்தகக் கண்காட்சி 2008

அழைப்பிதழ்01.08.2008 நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை முதல், மக்கள் சிந்தனைப் பேரவை நடத்தும் ஈரோடு புத்தகக் கண்காட்சி தொடங்குகிறது. வழக்கம்போல் கிழக்கு, ப்ராடிஜி அரங்குகள் இடம்பெறுகின்றன.

09, 10 இரு தினங்களும் [அடுத்த சனி, ஞாயிறு] நான் ஈரோடு நகரத்தில் இருப்பேன்.

நெய்வேலியில் நிகழ்ந்தது போலவே ஈரோடிலும் ப்ராடிஜி சார்பில் மாணவர்களுக்கான கட்டுரைப் போட்டிகள் நடத்தப்படுகின்றன.

பரிசளிப்பு விழா ஒன்பதாம் தேதி காலை பத்து மணிக்கு. காலேஜ் ஹவுஸ் சாலையில் உள்ள ஹோட்டல் ஆக்ஸ்போர்டில் இந்த விழா நடைபெறுகிறது.

கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம் பகுதிகளில் வசிக்கும் வலையுலக நண்பர்களை அன்புடன் அழைக்கிறேன்.

4 comments

  • // கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம் பகுதிகளில் வசிக்கும் வலையுலக நண்பர்களை அன்புடன் அழைக்கிறேன்.//

    நன்றி!

    பரிசளிப்பு விழாவுக்கு வர இயலாது. ஞாயிறன்று புத்தகக்கண்காட்சியில் சந்திக்கிறேன்.

  • வருக. கிழக்கு / ப்ராடிஜி ஸ்டாலில் விசாரித்தால் – தகவல் சொன்னால் நான் எங்கிருந்தாலும் அங்கு வந்து சந்திப்பேன். பொதுவாக நான் சுற்றிக்கொண்டுதான் இருப்பேன்.

  • ஐயா,

    ஈரோடு நூல் அழகம் எத்தனை/ எவ்வளவு (இங்கே எத்தனையா, எவ்வளவா?) நாட்கள் நடைபெறும் என்று சொன்னால் உதவியாக இருக்கும்.

    அல்லது அழகத்தின் அறிவிப்பை இவ்விடத்தில் காட்சிப்படுத்தினால் நன்று.

    நன்றி.

  • அடுத்த ஞாயிறு வரை அவசியம் உண்டு. வருக. பி.கு. அழகம் என்கிற சொல்லாட்சி நன்றாக உள்ளது. அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி.

By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

Subscribe to News Letter


Exit mobile version