கபடவேடதாரி – ஷாலினி கணேசன் மதிப்புரை (அத்தியாயம் 3)

பெரும்பாலும் வாய்ப்பை நோக்கியே நாம் நகர்ந்து கொண்டிருப்போம் அல்லது வெறுமனே அத்தக்க சமயத்துக்காக காத்திருப்போம். ஆனால் சிலரே வாய்ப்பை ஏற்படுத்தி கொள்வார்கள். அப்பிடிதான் இக்கதையில் அந்த சூனியனும் தனக்காக வாய்ப்பை தானே ஏற்படுத்தி கொள்கிறான். அவன் நல்லவனா கெட்டவனா என்பது எனக்கு தெரியவில்லை. ஆனால் அந்த மனோதிடம் எனக்கு பிடித்திருந்தது. இறக்கும் தருவாயிலும் தைரியமாக பதில் சொல்லும் அந்த தோரணை பிடித்திருந்தது. நீல நகரம் நோக்கி வீசி எறிந்தபோது வாழ்வோ சாவோ இந்த நிமிடம் நான் யார் கட்டுக்குள்ளும் இல்லை என பேசும் அந்த சுதந்திரம் பிடித்திருந்தது. என்ன தான் சூனியனை உருவகப்படுத்தி காட்சிப்படுத்தியிருந்தாலும், ஓர் மாயாஜால உலகினில் பயணித்தாலும், இதில் வரும் வரிகள் அப்பிடியே நிஜ வாழ்க்கையை ஒத்திப்போகிறது என்பது வாசிப்பதற்கு கொஞ்சம் எதார்த்தமாக இருக்கிறது.
இந்த அத்தியாயம் முழுக்க முழுக்க இரசிப்பு. சூனியனை கண்டு இரசித்தே நகர்கிறது‌. அவன் பேச்சு, செயல், நினைப்பு எல்லாம் இரசிக்க வைக்கிறது. மனித நாற்றம் மிகுந்த நகரத்தை அடைந்துவிட்டான் சூனியன். இனிதான் கதைக்களம் சூடு பிடிக்கப்போகிறது என்பது நிச்சயம்.
By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

Subscribe to News Letter


Exit mobile version