கபடவேடதாரி – தர்ஷனா கார்த்திகேயன் மதிப்புரை (அத்தியாயம் 11)

ஆக இதற்கு முந்தைய அத்தியாயத்தில் நாள் ஊகித்தது தவறு என்று புரிந்து விட்டது.
இன்னும் எனக்கு கதை சரிவர பிடிபடவில்லை போலும். ஆனால் சுவாரசியம் மட்டும் குன்றவில்லை.
சூனியனுடைய 20 லட்சம் பேரை அழிப்பது என்கின்ற இலக்கு மக்களைக் கொல்வது அல்ல. அவர்களுக்கு இருக்கும் கடவுள் பக்தியை கொள்வது தான். அப்படி இருக்கையில் பிரபல்யமான அரசியை பார்த்து மக்கள் அதிக கிளர்ச்சியும் பதற்றமும் அடைவார்கள் என்கின்ற சூரியனுடைய கணக்கு பொய்த்ததுதான் அவனுடைய தோல்விக்கான காரணம். கடவுள் என்று வரும் பொழுது பக்தர்கள் எந்த ஒரு நிலையிலும் தங்கள் நன்மை தீமைகளை தாண்டி தான் மற்ற விஷயங்களை யோசிப்பார்கள் என்று இது காட்டுகின்றது. ஆனால் இது அத்தனை உண்மையா என்று தெரியவில்லை.
தகவல் வேகமாகப் பரவ வேண்டுமென்றால் அது பெண்கள் வழியாக மட்டும் தான் என்கின்ற ஒரு அரதப் பழைய, தேய்வழக்கை கதாசிரியர் இந்த அத்தியாயத்தில் சேர்த்திருக்கிறார். இது ஒருவேளை கதை நிகழும் காலத்தை விளக்குவதற்காக இருக்கலாம். ஏனென்றால் இன்றைக்கெல்லாம் வாட்ஸ் அப்பில் ஊரில் இருக்கும் அத்தனை புரளியும் புரட்டும் ஆண்கள் வழியாகத்தான் வருகின்றன. .
இத்தனை அத்தியாயத்துக்கு பிறகும் நீல நகரம் என்ன என்பதை யாராவது கண்டுபிடிக்காமல் இருக்க முடியுமா என்று தெரியவில்லை. இந்த அத்தியாயத்தில் அதை விளக்கும் ஏகப்பட்ட குறிப்புகள் இருக்கின்றன. எத்தனை இலகுவாக ஒரு போலி பிரஜையை சூனியன் உருவாக்கிவிட்டான் என்பதை சற்று ஆழ்ந்து யோசித்தாலே கண்டுபிடித்துவிட முடியும்.
By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

Subscribe to News Letter


Exit mobile version