கபடவேடதாரி – முனைவர் ப. சரவணன் மதிப்புரை (அத்தியாயம் 13)

இயற்கை மனிதருக்கு ஒரு முகத்தைத்தான் வழங்கியுள்ளது. ஆனால், மனிதர்கள் சூழலுக்கு ஏற்ப தம் மனத்தளவில் பல்வேறு முகங்களை உருவாக்கிக்கொள்கின்றனர்.
இந்த நாவலில் மனிதர்கள் தங்களின் விருப்பத்திற்கு ஏற்ப உடலளவிலும் பல்வேறு முகங்களை மாற்றிக்கொள்ளக் கூடியவர்களாகவே இருக்கிறார்கள்.
விழாக்காலங்களில் பலூன் வியாபாரிகள் சிறார்களுக்கான பல்வேறு விதமான முகமூடிகளை விற்பார்கள். அவற்றை அணிந்துகொண்ட சிறார்கள் அந்த முகமூடிக்கு ஏற்பத் தம் உள்ளத்தின் நிலையையும் உடல்மொழியையும் குரலையும் மாற்றிக்கொள்வார்கள்.
அதுபோலவே, இந்த நாவலில் கோவிந்தசாமி தனக்குத் தேவையான, தான் விரும்பும் சில முகங்களை நீலநகரத்தில் பெற்றுக்கொள்கிறான். அதுமட்டுமல்ல, அங்கு நிகழ்பவற்றை உற்று நோக்கி, அவற்றுக்கு ஏற்ப தனது மனநிலையையும் மாற்றிக்கொள்கிறான்.
இப்போது அவனுக்கு அந்த நகரில் அவனைத்தவிர அவனுக்கு உதவுபவர்கள் யாரும் இல்லை. ‘தன் கையே தனக்குதவி’ என்பதுபோல தன்னுள்ளமே தனக்குதவி என்று புரிந்துகொண்டு, வாழ்வில் முதன்முறையாகத் தன் மூளையைப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டான்.
By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

Subscribe to News Letter


Exit mobile version