F5 உங்கள் சாய்ஸ்

பன்னெடுங்காலமாக சுப்புடுவின் தலைப்புப்பட்டை என்னை வசீகரித்து வந்தது. இந்த மனிதர் என்ன செய்திருக்கிறார் என்று மிகவும் யோசித்திருக்கிறேன். ஒவ்வொரு முறை பக்கத்தைப் புத்துணர்ச்சி கொள்ளச் செய்யும்போதும் ஒவ்வொரு தலைப்புப்படம் வரும். புதிதாகக் கிறுக்கும். அழகு.
ஆனால் எப்போதும்போல் எனது அரிச்சுவடித் தொழில்நுட்ப அறிவு எதையும் உணரவிடாமல் அடித்து வந்தது. கணேஷிடம் சொல்லலாம்தான். எழுதுவதைத் தவிர மற்ற அனைத்திலும் நான் காட்டுகிற ஆர்வம் பற்றி ஏற்கெனவே அவருக்குக் கடுங்கோபம் உண்டு என்பதால் பேசாதிருந்தேன்.
மாற்றி மாற்றிப் பார்த்த வார்ப்புருக்களில் இந்த Neoclassical என் ஆசைக்கொரு வழி தந்தது. Chris Pearson வாழ்க. சுழலும் பிம்பங்கள் இனி இங்கும் சுழலும்.
ஆனால் இதனைச் செயல்படுத்துவதற்குள் பட்ட பாடு கொஞ்சமல்ல. ஒரு கட்டத்தில் சுழற்சியை நிறுத்திவிட்டு ஒற்றைப்படம் போட்டு ஒழிகிறது என்றே விட்டிருந்தேன். பழைய பங்காளி இன்று ஒத்துழைத்தான். எனவே படம் பார்க்கிறீர்.
நீங்கள் ஒவ்வொரு பக்கம் நகரும்போதும் மேலே ஒவ்வொரு படமாக மாறும். பக்கத்துக்குப் பக்கம் புத்துணர்ச்சி என்று Tag Line கொடுத்தால் கொலைவெறி வரும் என்பதால் தவிர்க்கிறேன்.
இந்தத் தொழில்நுட்பக் குடைச்சல் நோய் என்னை ஒரு வழி பண்ணாமல் விடாது என்று நினைக்கிறேன். எனது ஆர்வங்கள் அடுத்தவர்களுக்கு இம்சைகளாவது ஒன்றுதான் இப்போதைய வருத்தம்.
வழியில்லை. இது நிரந்தர வருத்தம்.

9 comments

  • ஆக மொத்தம், புதுப்பதிவு இல்லாட்டாலும் படம் வரலாங்கிறீங்க

  • தலைப்பில் இருக்கும் படம் மாறும் வித்தௌ வெகு அருமை. ஒரேயொரு பரிந்துரை. ஒவ்வொரு தலைப்புப் படமும் ஒரு ஸ்டிலை மட்டும் கொன்டிருந்தால் இன்னும் நன்றாக இருக்கும்.

    இப்பொழுது பல ஒளிப்படங்கள், இரண்டு காட்சிகளைக் கோன்டவாறு அமைக்கப்பட்டிருக்கிறது.

    • பாபா, இப்போது மீண்டும் கைவைக்கும் உத்தேசமில்லை. மீண்டும் மூடு வரும்போது பார்க்கலாம் 😉

  • உங்க blog-தான். நீங்க வசனமெழுதின படம் தான். அதுக்காக இப்படி அந்த ஸ்டில்களை போட்டு எங்களை தாக்குறீங்களே – கொஞ்சம் too much இல்லியா? அதுக்கு சுப்புடு போல் உங்களுக்குப் பிடித்த எழுத்தாளர்கள், புத்தகங்கள் என்று போடலாமே!

    • அன்புள்ள அபூ! தப்புதான். ஒரு தொழில்நுட்பத்தை முயற்சி செய்து பார்ப்பதற்காகக் கைவசமிருந்த திரைப்படப் புகைப்படங்களை அப்லோட் செய்தேன். மாற்றிவிடுகிறேன். நேரம்தான் பிரச்னை.

By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி

Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

Subscribe to News Letter

Exit mobile version