Category: எழுத்து

இது வேறு அது வேறு.

சார் வணக்கம். தயக்கத்துடன் இதைக் கேட்கிறேன். உங்களின் அருமையான அரசியல் வரலாற்று நூல் நிலமெல்லாம் ரத்தத்தையே இலவசமாகக் கொடுத்தீர்களே. யதி, இறவானுக்கு மட்டும் ஏன் தடை? (என் பெயரை வெளியிட்டுவிட வேண்டாம்.) இது சற்று நீண்ட விளக்கம் கோரும் வினா. சரி… Read more »

Pen to Publish 2019 – போட்டி அறிவிப்பு

நண்பர்களுக்கு வணக்கம். Amazon Pen to Publish திட்டத்துக்கு இது மூன்றாவது வருடம். எழுத்தாளர்கள், எழுதுபவர்கள், எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்கள் அனைவரையும் இதில் கலந்துகொள்ள அன்புடன் அழைக்கிறேன். ஆங்கிலம், ஹிந்தி, தமிழ் என மூன்று மொழிகளில் நடத்தப்படும் இப்போட்டியில் இம்முறை தமிழுக்கான… Read more »

மாலுமி – முன்னுரை

கடந்த சில ஆண்டுகளாக ஒவ்வொரு ஜனவரி மாதத்திலும் இரண்டு அல்லது மூன்று சிறுகதைகளை எப்படியாவது எழுதிவிடுகிறேன். வருடம் முழுவதும் என்னென்னவோ எழுத வேண்டி இருக்கிறது. ஆயிரக்கணக்கான தொலைக்காட்சித் தொடர் காட்சிகளுக்கான வசனங்கள், நாவல் முயற்சிகள், பத்திரிகைத் தொடர்கள், கட்டுரைகள், சிறு குறிப்புகள்… Read more »

ஆதிவராகம் [சிறுகதை]

அடையாறில் அப்போது தண்ணீர் வரத்து இருந்தது. பெரியதொரு நதியாகக் காட்சியளிக்காதே தவிர, நதியில்லை என்று சொல்லிவிட முடியாது. ஒரு பக்கம் நீரோட்டம் இருக்கும். அப்படியே சில நூறடிகள் தள்ளி மணல் மேடிட்டிருக்கும். மணல் மேட்டின்மீது பையன்கள் முட்டிவரை நிஜாரை இறக்கி விட்டுக்கொண்டு… Read more »

மாலுமி [சிறுகதை]

ஆதியிலே வினாயகஞ் செட்டியார் என்றொரு தன வணிகர் மதராச பட்டணத்திலே வண்ணாரப்பேட்டை கிராமத்தில் தனது குடும்பக் கிழத்தி, குஞ்சு குளுவான்களோடு சௌக்கியமாக வசித்து வந்தார். துறைமுக வளாகத்தில் வந்திறங்கும் பர்மா ஷேல் எண்ணெய் கம்பேனியின் சரக்குகளைப் பட்டணத்தின் பல திக்குகளிலும் இருந்த… Read more »