அனுபவம்

work from home

குறித்து இப்போது நிறையப் பேசுகிறார்கள். ஆகஸ்ட் 2011 முதல் நான் அதைத்தான் செய்கிறேன். ஆரம்பத்தில் சற்று சிரமமாக இருக்கலாம். ஆனால் பழகிவிட்டால் பரம சுகம் இது. இதன் லாபங்களாவன: 1. வேளை தவறாமல், சூடு ஆறாமல், சுவையாகச் சாப்பிடலாம். டப்பா கட்டும் அவலம் இல்லை. 2. நினைத்த நேரத்தில் வேலை பார்க்கலாம். நினைத்த பொழுது படுத்துத்… Read More »work from home

எண்ணும் எழுத்து – ஒரு நிகழ்ச்சி

நாளை மாலை 6 மணிக்கு கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நிகழவிருக்கும் ‘பொன் மாலைப் பொழுது’ நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறேன். ‘எண்ணும் எழுத்து’ என்பது பொதுவான தலைப்பு. எனக்கு சொற்பொழிவாற்ற எப்போதும் விருப்பம் இருப்பதில்லை. சும்மா சிறிது நேரம் அறிமுக வார்த்தைகளாக ஐந்து நிமிடம் பேசிவிட்டு நிகழ்ச்சியைக் கலந்துரையாடலாக மாற்றிவிடலாம் என்று எண்ணியிருக்கிறேன். நான் 90களில் எழுத… Read More »எண்ணும் எழுத்து – ஒரு நிகழ்ச்சி

தராத புத்தகங்கள்

நூல் வெளியானதும் அதன் ஆசிரியருக்குப் பதிப்பாளர் தரப்பில் இருந்து பத்து பிரதிகள் தருவார்கள். இதற்கு ‘ஆத்தர் காப்பி’ என்று பெயர். கொஞ்சம் குண்டு புத்தகமாக இருந்தால் ஐந்து பிரதிகள் வரும். உப்புமா கம்பெனி என்றால் ஐந்து, மூன்றாக மாறவும் வாய்ப்புண்டு. நூலாசிரியர்கள் தமக்கென்று சில பிரதிகள் வைத்துக்கொண்டு மிச்சத்தை நண்பர்களுக்கும் தெரிந்தவர்களுக்கும் தருவார்கள். (சில வருடங்கள்… Read More »தராத புத்தகங்கள்

ஒரு நாள் கழிவது எப்படி?

யார் கிளப்பிவிட்டது என்று தெரியவில்லை. பார்க்கிறவர்களுள் பெரும்பான்மையானோர், ‘எப்படி உங்களால் இவ்வளவு எழுத முடிகிறது?’ என்று தவறாமல் கேட்கிறார்கள் இப்போதெல்லாம். சென்ற ஆண்டு விருட்சத்தில் ஒரு பேட்டிக்காக அழகியசிங்கர் இதனைக் கேட்கப் போக, ஒவ்வொரு பேட்டியிலும் [கடைசியாக வந்த ஆதன் மீடியா பேட்டி வரை] இக்கேள்வி தவறாமல் இடம்பெற்றுவிடுகிறது. அப்படியா? ஜெயமோகன் எழுதுவதில் பத்தில் ஒரு… Read More »ஒரு நாள் கழிவது எப்படி?

பக்தி எனும் கொண்டாட்டம்

ஹரே கிருஷ்ணா இயக்கத்தில் இருக்கும் என் நண்பர் சுவாமி சுதாமா தாஸின் அழைப்பின்பேரில் பிரபுபாதா குறித்த டாகுமெண்டரி படம் ஒன்றைக் காண திருசூலம் பிவிஆருக்குப் போயிருந்தேன். [இந்தத் திரையரங்கைப் பல வருடங்களாகக் கட்டிக்கொண்டிருந்தது தெரியும். எப்போது திறந்தார்கள் என்று தெரியவில்லை. நன்றாகவே இருக்கிறது.] பிரபுபாதா, தனது எழுபது வயதுவரை இந்தியாவில் வாழ்ந்து முடித்துவிட்டு அதன்பின் துறவறம்… Read More »பக்தி எனும் கொண்டாட்டம்