Category: புனைவு

பினாக்கிள் புக்ஸ் பதிப்பக அறிமுக விழா

யதி நாவலை வெளியிடும் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் பினாக்கிள் புக்ஸ் பதிப்பக அறிமுக விழா நிகழ்ச்சி எதிர்வரும் வெள்ளிக்கிழமை மாலை சென்னை ஆழ்வார்பேட்டை சி.பி. ஆர்ட் செண்டரில் நடைபெறவிருக்கிறது. நாகூர் ரூமி, சுதாகர் கஸ்தூரி, ஹாலாஸ்யன் ஆகியோருடன் நானும்… Read more »

பூனைக்கதை – ஹரன் பிரசன்னா மதிப்புரை

பா.ராகவனின் நூல் ஒன்றுக்கு விமர்சனம் எழுதுவது என்பது ஒரு சங்கடம்தான். ஏனென்றால் மிக மரியாதைக்குரிய நண்பர்களில் ஒருவர் அவர். எனவே வெளிப்படையாக எழுதுவது என்பதில் எனக்குக் கொஞ்சம் சிக்கல்கள் உண்டு. இதன் மற்றொரு பக்கம் சுவாரஸ்யமானது. அவரிடம் நேரில் பேசும்போது அவரது… Read more »

கரையான் கதை [பூனைக்கதை டிரெய்லர் 1]

கோல்கொண்டா கோட்டை விழுந்துவிட்டது என்று ஜமீந்தார் சீட்டு அனுப்பியிருந்தார். எப்படியும் ஒரு மண்டலத்துக்குள் ஔரங்கஜேப் தொண்டை நாட்டைப் பிடித்துவிடுவான். அங்கிருந்து தஞ்சை வந்து சேர அவனுக்கு அதிக அவகாசம் எடுக்கப் போவதில்லை. மராட்டி ராஜா, ராமநாதபுரத்துக்குப் போய் பதுங்கிக்கொள்ள முடிவு செய்திருப்பதாகச்… Read more »

பேய் ஊட்டிவிட்ட பிரியாணி [பூனைக்கதை டிரெய்லர்-2]

வடபழனி பஸ் ஸ்டாண்டின் கடைசி வரிசை பெஞ்சில் மயில்சாமி அமர்ந்திருந்தான். மதிய நேரம் என்பதால் ஆட்கள் அதிகம் இல்லை. பேருந்துகளை நிறுத்திவிட்டு டிரைவர்களும் கண்டக்டர்களும் சாப்பிடப் போயிருந்தார்கள். ஒவ்வொரு வரிசை பெஞ்சிலும் யாராவது ஒருவர் படுத்திருந்தார். ஈ மொய்ப்பதைப் பொறுத்துக்கொள்ளலாம் என்றால்… Read more »

பால்ய கால சதி

இது என் பால்யம். எல்லாமே நடந்ததா என்றால், யாருக்காவது நிச்சயம் நடந்திருக்கும் என்பதே என் பதில். இந்தக் கதையில் நான் இருக்கிறேன். நிறையவே இருக்கிறேன். என் நண்பர்கள் பலர் இருக்கிறார்கள். இன்றுவரை என்னோடு தொடர்பில் இருப்பவர்கள்.  எப்போதாவது நாங்கள் சந்தித்துக்கொள்ளும்போதெல்லாம் எண்ணிப்… Read more »