Category: உடல்நலம்

எண்ணாதே, தின்னாதே!

நான் ஒரு காரியத்தில் இறங்குகிறேன் என்றால் ஒன்று அதை வெறித்தனமாக வேகத்தோடு செய்வேன். அல்லது இறங்கிய சூட்டில் கரை ஏறிவிடுவேன். வைத்துக்கொண்டு வழவழா கொழகொழாவாக மாரடிக்கிற கதையே கிடையாது. இன்று நேற்றல்ல. சிறு வயது முதலே இப்படித்தான்.

ருசியியல்

தமிழ் ஹிந்து நாளிதழில் நாளை முதல் (03/12/16) ஒரு பத்தி தொடங்குகிறேன். ருசியியல் என்ற தலைப்பில். சமையலின் ருசியும் வாழ்வின் ருசியும் வேறுவேறல்ல என்பது என் தீர்மானம். அந்தந்த தினத்தின் மனநிலையே அன்றன்றைய சமையலின் ருசியைத் தீர்மானிக்கிறது என்பதைப் பன்னெடுங்காலமாக கவனித்து… Read more »

நட!

நடப்பது என்பது எனக்கு என்றுமே நடக்கிற காரியமாக இருந்ததில்லை. அடிப்படையில் நான் ஒரு ப்யூரிஃபைட் சோம்பேறி. சைக்கிள் இருந்த காலத்தில் சைக்கிள், டூ வீலர் காலத்தில் டூ வீலர், கார்காலத்தில் கார். அது கந்தஹாருக்குப் போவதானாலும் சரி; கருவேப்பிலை வாங்கப் போவதானாலும்… Read more »