Categoryசிறுகதை

பூக்களால் கொலை செய்கிறேன்

வயது என்னை ஆண்டு கொண்டிருந்த காலம் அது. எதிர்காலம், இரு சாத்தியங்களாயிருந்தது அப்போது. ஒன்று, நானொரு தேர்ந்த பொறுக்கியாகி விடலாம். அல்லது கவிஞனாக. கர்த்தருக்கு நன்றி. டெய்ஸி வளர்மதி என் பாதையில் காதலியாக எதிர்ப்பட்டதும் நான் கவிஞனாகிப் போனேன். நண்பர்கள் வியந்தார்கள். குறிபார்த்துப் பேராசிரியர்களின் வாகனங்களின் மேல் கல்லெறிவதும், ஸ்டிரைக்குகள் சமயம் கல்லூரி நிர்வாகத்தைக் கடுமையாகக் கண்டித்து...

கூறாமல் சன்னியாசம்

ஓடிப்போய்விடலாம் என்று நான் முடிவு செய்து, புறப்பட்ட தினத்தைத் தேவர்கள் ஆசீர்வதித்திருக்க வேண்டும். அன்று நல்ல மழை. சென்னை நகரம் அதற்கு முன் பார்த்திராத இயற்கைத் தாண்டவம் அது. கடற்கரையில் அபாயச் சின்னம் ஏற்றி, பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து, வீட்டுத் தரைகளில் ஈரக் கோணிகள் நிரம்பியதும் புறப்பட்டேன். ‘இந்த மழையில் எங்க கிளம்பறே கிருஷ்ணா? போய்த்தான் ஆகணும்னா குடை எடுத்துண்டு போ’ என்று...

காணாமல் போனவர் பற்றிய அறிவிப்பு

காசை எண்ணிக் கொடுத்துவிட்டு அரங்கத்தின் வாசலில் அவர் ஆட்டோவிலிருந்து இறங்கும்போது, மிதந்து கடந்த காரில் அமைச்சர் இருந்தார். காத்திருந்த கனவான்கள் பரபரப்படைந்து விரைந்து வந்தார்கள். காற்றில் படபடத்துச் சுருளப் பார்த்த பேனரில், நூற்றாண்டு விழாக் காணும் மேதை, நீல எழுத்துக்களில் பாதி தெரிந்தார்.

லா.ச.ரா : அணுவுக்குள் அணு

லாசரா எனக்கு முதல் முதலில் அறிமுகமானபோது நான் விவேக் ரூபலாவின் கொலைவெறி ரசிகனாக இருந்தேன். பத்தாம் வகுப்பு முடித்திருந்த நேரம். எங்கள் பேட்டையில் அப்போது இருந்த லீலா லெண்டிங் லைப்ரரியில் தினமும் ஒரு கிரைம் நாவலை எடுத்துப் படிப்பது என்பதை ஒரு சமூகக் கடமையாக நினைத்தேன். சுஜாதாவெல்லாம் என்னைக் கவரவில்லை. ராஜேஷ்குமார்தான். உலகின் ஒரே உன்னத எழுத்து என்றால் அது அவரது க்ரைம் நாவல்தான். அத்தகு ரத்த தினம்...

பேட்டா

இன்றைக்கு எப்படியும் கொடுத்துவிடுவார்கள் என்று தணிகாசலம் சொல்லியிருந்தான். எத்தனை நாள் பேட்டா என்று உடனே கேட்கத் தோன்றியதைக் கஷ்டப்பட்டு அடக்கிக்கொண்டு, ரொம்ப நன்றி சார் என்று மட்டும் சொல்லிவிட்டு அறையைவிட்டு வெளியே வந்தான் சுப்பிரமணி. மனித மனம்தான் எத்தனை விசித்திரங்கள் நிறைந்தது! மூன்றாண்டு காலமாக வேலையே இல்லை. வீட்டில் சும்மா படுத்துக் கிடந்ததில் நாடி நரம்புகளெல்லாம் உலர்த்தாமல் சுருட்டிப்...

இறுதிச் சடங்கு – விவாதங்கள்

இறுதிச் சடங்கு சிறுகதை சில விவாதங்களைக் கிளப்பியிருப்பதை அறிந்தேன். சிறுகதைகளைப் பொருட்படுத்தி விவாதிப்போர் இன்னும் இருப்பதே ஆசுவாசமளிக்கிறது. நண்பர் ஆர்வி இந்தக் குறிப்பை அனுப்பியிருந்தார்.நண்பர்களின் கருத்துகளோடு உடன்படவோ முரண்படவோ நான் விரும்பவில்லை. நான் சொல்ல நினைத்தது இதனைத்தான் என்று மைக் பிடிப்பதைக் காட்டிலும் அவலம் வேறில்லை. வாசகர்களுக்கு ஒரே ஒரு குறிப்பை மட்டும் நான் தரலாம். இந்தக்...

இறுதிச் சடங்கு

சரி நாம் திருமணம் செய்துகொள்ளலாம். அவ்வளவுதானே? திருப்தியா? சந்தோஷமா?
யெஸ். தேங்ஸ். ஆனால் ஊரறிய. எனக்கு பேப்பரில் போட்டோ வரவேண்டுமென்ற ஆசையெல்லாம் இல்லை. ஆனால் குறைந்தபட்சம் நம் நண்பர்களுக்குத் தெரியவேண்டும். பெற்றோருக்குத் தெரியவேண்டும். உறவினர்களுக்கு அப்புறம்.
அவன், அவனை ஒரு கணம் உற்றுப் பார்த்தான். புன்னகை போல் ஒன்று வந்த மாதிரி இருந்தது. ஆனால் முழுதாக இல்லை. ஆல்ரைட். சொல்லிவிடுவோம்.

யாளி முட்டை

இதுவரை சுமார் 100 சிறுகதைகள் எழுதியிருப்பேன் என்று நினைக்கிறேன். தொகுப்பாக வந்தவை போக மிச்சமுள்ளவற்றில் என்வசம் இருப்பவை இவ்வளவுதான். குமுதத்தில் சில நல்ல கதைகளை எழுதியிருக்கிறேன். ஆனால் அவற்றுக்கெல்லாம் பிரதி இல்லை. ஆரம்பக் காலத்தில் பிரசுரமாகும் அனைத்தையும் கத்தரித்து வைத்து பைண்ட் செய்து அழகு பார்க்கும் வழக்கமெல்லாம் இருந்தது. போகப் போக அதெல்லாம் தன்னால் நின்றுவிட்டது. பிறகு கையெழுத்துப்...

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி