அனுபவம்
மழைப்பாடல் V 2.0
நகரெங்கும் நேற்று நல்ல மழை பெய்திருக்கிறது. காற்றின் ஈரம், பதமான குளிர்ச்சியைத் தருகிறது. இப்படியே இருந்தால் நன்றாக இருக்குமே என்று நினைத்துக்கொண்டே வண்டி ஓட்டிக்கொண்டிருந்தேன். என்னை முந்திக்கொண்டு விரைந்த கார் ஒன்று ஓரத்தில் தேங்கிய நீரை வாரி இறைத்துச் செல்ல, எனக்கு முன்னால் போன பைக் உரிமையாளர் உடலெங்கும் சேற்று நீர். நபருக்குக் கோபம் வந்துவிட்டது.… Read More »மழைப்பாடல் V 2.0
நட்ஸ்
நேற்று நான் பயணம் செய்த இண்டிகோ விமானத்தில் எனக்கு எதிர் சீட்டில் இருந்த மூன்று பேர் கொண்ட ஒரு குடும்பம் எனக்குப் பழைய பாராகவனை நினைவூட்டியது.Read More »நட்ஸ்
சீரடிக்குச் சென்ற பூச்சாண்டி
நண்பர்களோடு இரண்டு நாள் சீரடி சென்று திரும்பினேன். இந்த இரண்டு நாள்களும் எழுத்து வேலை, தொலைபேசி அழைப்புகள் இரண்டும் இல்லை. படப்பிடிப்புகளுக்கும் பத்திரிகைகளுக்கும் தேவையானதை முன்கூட்டியே எழுதிக் கொடுத்துவிட்டுப் போனதால் இது சாத்தியமானது.
பயணமோ, தரிசனமோ சிரமமாக இல்லை. உணவுதான் சற்றுப் படுத்திவிட்டது. எனது வழக்கமான ஒரு வேளை உணவு என்பதைக் கடைப்பிடிக்க முடியவில்லை. மதியம் கிடைத்ததை உண்டு, இரவு பாதாம் சாப்பிட்டு சமாளித்தேன்.
என்ன பெரிய வடக்கத்தி மாநிலம்? உருப்படியாக ஒருத்தனுக்கும் ஒரு பனீர் டிஷ் சமைக்கத் தெரியவில்லை. எதைச் செய்தாலும் சோள மாவு அல்லது கடலை மாவைக் கொட்டிக் கவிழ்த்துவிடுகிறான்கள். தவிரவும் சகட்டுமேனிக்கு சூரியகாந்தி எண்ணெய். பார்த்தாலே பயங்கரமாக இருக்கிறது.Read More »சீரடிக்குச் சென்ற பூச்சாண்டி
ஒரு வருட பேலியோ – கிடைத்தது என்ன?
நண்பர்களுக்கு வணக்கம். இந்தக் குறிப்பை நான் இன்னும் சில தினங்கள் முன்னதாக எழுதியிருக்க வேண்டும். சில சொந்தப் பிரச்னைகளால் முடியாமல் போய்விட்டது. கடந்த ஆண்டு [2016] ஜூலை 23ம் தேதி வெஜ் பேலியோ கடைப்பிடிக்க ஆரம்பித்தேன். டாக்டர் ப்ரூனோ எனக்கு அடிப்படைகளை விளக்க, திரு. சங்கர்ஜி எனக்கு ஆரம்ப டயட் கொடுத்தார். மூன்று மாதங்களில் வாரியருக்கு… Read More »ஒரு வருட பேலியோ – கிடைத்தது என்ன?