Category: யதி

யதி – வாசகர் பார்வை 19 [ஏ.கே. சேகர்]

பா.ராகவன் தினமணி டாட்காமில் எழுதிய யதி நாவலை முழுவதும் வாசித்தேன். இதற்குமுன் அவர் எழுதிய பலவற்றை வாசித்திருந்தாலும் யதி தந்தது வேறு விதமான அனுபவம். யதி, துறவொழுக்கம் அல்லது ஒழுக்க மீறலைக் கருவாகக் கொண்டது. யோகிகள், சித்தர்கள், ஞானிகள் முதல் சாதாரண… Read more »

யதி – வாசகர் பார்வை 18 [இரா. ஶ்ரீதரன்]

குழந்தைப் பருவம் முதல் சாமியார் என்றதும் என் நினைவில் வருபவர், எங்கள் ஊர் (புதுகை) அதிஷ்டானம் சாந்தானந்த ஸ்வாமிகள். சிரித்த முகம். யாரைக் கண்டாலும் ஆசீர்வதிக்கும் பெருங்கருணை. பிறகு வயது ஏற ஏற காஞ்சி மகா பெரியவரின் துறவொழுக்கம் கண்டு தாள்… Read more »

யதி – முன்பதிவு – சலுகை விலை அறிவிப்பு

யதி ஜனவரி சென்னை புத்தகக் காட்சியில் வெளியாகிறது. புத்தக வடிவில் சுமார் ஆயிரம் பக்கங்கள். தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் ‘பினாக்கிள் புக்ஸ்’ இதனை வெளியிடுகிறது. செம்பதிப்பு | ராயல் சைஸ் | விலை ரூ. 1000 டிசம்பர் 30-ம்… Read more »

யதி – வாசகர் பார்வை 17 [சி.ஜே. ஆனந்தகுமார்]

பா. ராகவனின் யதி அவரது முந்தைய படைப்புகளில் இருந்து பெரிதும் வேறுபடுகின்றது. சகோதரர்களான நான்கு சன்னியாசிகளின் கதையை ஒற்றை நபரின் மீள் நினைவாகச் சொல்லும் பாவனையில் இந்திய சன்னியாச மரபினை, அதன் பிரிவுகளை, காவி உடுத்தினாலும் உள்ளத்தின் அலைக்கழிப்பில் பறக்கும் சிந்தனையின்… Read more »

யதி – வாசகர் பார்வை 16 [Ms Fairy]

இடைநிறுத்தம், நிறுத்தம், வரையறை, கட்டுப்பாடு, வழிகாட்டுதல், அடிக்கடி, பக்தன், அழிப்பவர், புனிதமான, தீவிரமான, தேடுபவர், துறவி, one who has controlled his passions and abandoned the world  என்றெல்லாம் பொதுவாக யதி என்னும் வார்த்தை விளக்கப்பட்டாலும் இவையெல்லாம் ஆண்பாலையே குறிக்கின்றது. ஆனால் பாராவின் யதியைப் படித்தபின்பு, இந்த யதி இப்புனைவில் நடமாடும் நான்கு சகோதரர்கள், இவர்களின் அப்பா, மாமா, சம்சுதீன், சொரிமுத்து போன்ற சித்தர்கள் என எவரையும் குறிப்பதாக எனக்குத் தோன்றவில்லை. மாறாக விதவை என்ற சொல்லாலும் தீவிரமாகத் தேடுபவர் என்னும் பொருளில் உலவும் பாத்திரங்களான அம்மா, சித்ரா,பத்மா மாமி என்னும் பெண்களையே இந்நாவலின் தலைப்பு குறிப்பதாக உணர்கிறேன். சித்து – மாந்தரீகம் – ஆவிகள், பேய் பிசாசுகள் என இருளுலகை இச்சிப்பவரும் யதியை வாசிக்கலாம்.   சைவ வைஷ்ணவ மந்திர தந்திர ஒளியுலகை விரும்புவரும் யதியை வாசிக்கலாம். துறவை விரும்பித் தேடும் வேட்கை உடையோரும், உலக வேட்கையை வெறுப்போரும் யதியை விரும்பலாம். குளத்துக்குள் பலவருடம் தவம் செய்வதாகக் கூறப்படும் தபஸ்வியை நேசிக்கக்கூடிய முது வயதினரும் யதி வாசிக்கலாம். சாஜிதாவை லிப்லாக் அடிக்கும் யோகியை விரும்பக்கூடிய விடலைப்… Read more »