Categoryஅனுபவம்

கபடவேடதாரி – கோபி சரபோஜி மதிப்புரை (அத்தியாயம் 49)

வழக்கம் போல சூனியன் தன் புகழை நீட்டி முழங்குவதில் அத்தியாயம் நகர்கிறது. இதுவரையிலும் வெண்பலகையில் போரிட்டுக் கொண்டிருந்தவர்கள் நேரடியாக சந்தித்துக் கொண்டு களமாடினால் அது இன்னொரு சுவராசியம் என நினைத்தால் அதற்கு வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது. கோவிந்தசாமியின் செயல்பாடுகள் குறித்து தன் கதாபாத்திரம் வழி அறியும் சூனியன் குழம்பிப் போகிறான். அவனின் படைப்புகள் தன்னிச்சையாக இயங்க ஆரம்பிக்கின்றன. தான்...

கபடவேடதாரி – கோபி சரபோஜி மதிப்புரை (அத்தியாயம் 48)

தன்னை கதாபாத்திரம் என்று சூனியன் கூறியதால் விசனமடைந்து கோபமடைந்திருந்த கோவிந்தசாமி அது காதல் மனதுக்கு சரிபடாது என்று தனக்குத் தானே சமாதானம் சொல்லிக் கொள்வதோடு காதலுக்கும், காமத்திற்கும் பெண்களின் விருப்பத்திற்குரியவனாக, கவிதையில் பாரதிக்குப் பிந்தைய மகத்தான கவிஞனாக தான் இருப்பதாக தனக்குத் தானே நினைவுபடுத்திக் கொள்கிறான். ஷில்பா சாகரிகாவிடம் கோவிந்தசாமியைச் சந்தித்த விபரத்தைக் கூறுகிறாள். நிழலை...

கபடவேடதாரி – கோபி சரபோஜி மதிப்புரை (அத்தியாயம் 47)

எண்ட்ரி கொடுக்கும் போதெல்லாம் தன் திறன் பற்றி நமக்கு நினைவூட்டுவதை வழக்கமாக வைத்திருக்கும் சூனியன் இந்த அத்தியாயத்தையும் அப்படியே ஆரம்பித்து வைக்கிறான். இரவு ராணி மலரோடு வரும் கோவிந்தசாமியை மடக்கி திசைதிருப்ப பார்க்கிறான். ஆனால், இருவருக்குமிடையே குற்றச்சாட்டுகளாகவும், சமாதானமாகவும் நிகழும் உரையாடல் கோவிந்தசாமிக்கு நிறைவைத் தரவில்லை. சூனியனைச் சபித்து விட்டு ஓடத் தொடங்குகிறான். அந்த ஓட்டம் எங்கு...

பின் கதைச் சுருக்கம் மறு பதிப்பு

நீண்ட இடைவெளிக்குப் பிறகு ‘பின் கதைச் சுருக்கம்’ மறு பதிப்பு ஜீரோ டிகிரியில் வெளியாகியுள்ளது. நாவல்களைப் பற்றிய கட்டுரைகளெல்லாம் வாரப் பத்திரிகையில் வெளியாகுமென்று யாரும் கற்பனைகூடச் செய்ய முடியாத காலக் கட்டத்தில் இக்கட்டுரைகள் கல்கியில் வெளியாயின. (வருடம் மறந்துவிட்டது. குறைந்தது 20 ஆண்டுகளுக்கு முன்னர்.) அப்போது நான் மிகவும் ரசித்த, ஏதோ வகையில் என்னை பாதித்த நாவல்களைக் குறித்தும்...

கலவர காலக் குறிப்புகள் – மறு பதிப்பு

  என்னுடைய அரசியல் புத்தகங்களில் தனிப்பட்ட முறையில் எனக்கு மிகவும் பிடித்த புத்தகம் இதுதான். இரண்டு காரணங்கள். அதிகம் பரிச்சயமில்லாத தேசங்களின் அரசியலை / பெரும் பிரச்னைகளை மிகக் குறைவான சொற்களில் புரிய வைக்க வேண்டும் என்று எனக்கு நானே விதித்துக்கொண்டு, எந்தக் கட்டுரையும் 500 சொற்களுக்கு மிகாதவாறு பார்த்துக்கொண்டேன். சுருக்கம் தருகிற வேகத்துக்கு நிகரே கிடையாது. இரண்டாவது காரணம், இந்தப்...

Bukpet-WriteRoom: எழுத்துப் பயிற்சி வகுப்புகள்

விநாயகரை வணங்கி, இதனை இன்று அறிவிக்கிறேன். Bukpet-WriteRoom எழுத்துப் பயிற்சி வகுப்புகளை முறைப்படித் தொடங்குகிறேன். இன்று மாலை இந்திய நேரம் 6.15க்கு என் நண்பர்கள் ராஜேஷ் கர்கா, பெனாத்தல் சுரேஷ், தினேஷ் ஜெயபாலன் இவர்களுடன் என் மகள் பாரதியும் இணைந்து சமூக வெளியில் இதற்கான இணையத்தளத்தை அறிமுகம் செய்வார்கள். தொடக்கமாக, எட்டு வகுப்புகளுக்கான விவரங்களும் அறிவிப்புகளும் இன்று வெளியாகும். இன்னும் சில...

கபடவேடதாரி – கோபி சரபோஜி மதிப்புரை (அத்தியாயம் 46)

அழுது தீர்த்திருந்த கோவிந்தசாமி ஒரு காஃபி கிடைத்தால் நன்றாக இருக்கும் என நினைக்கிறான். அந்த நினைப்பின் நீட்சி ஒற்றை காஃபிக்காக தன் சித்தாந்தத்தை கொத்தி கூறு போட்ட சாகரிகாவுடனான ஒரு சச்சரவை நினைவு கொள்ள வைத்து விடுகிறது. சிறிது நேரத்திற்கு முன்பு வரை காஃபியை நினைத்த கோவிந்தசாமியின் மனது சாகரிகாவை நினைத்துக் கொள்கிறது. புதிய இரவு ராணிமலரை பறித்து அதில் தன் எண்ணத்தைக் கவிதை வடிவில் உச்சரித்து...

கபடவேடதாரி – கோபி சரபோஜி மதிப்புரை (அத்தியாயம் 45)

எதிர்பாராத வகையில் இரவுராணி மலர் இருக்கும் தடாகத்தின் கரைக்கு கோவிந்தசாமி வந்து சேர்கிறான். நினைவிலும், இலட்சியத்திலும் இருந்த உறுதியில் நீலநகர வனத்துக்கு வந்த நோக்கத்தையே மறந்தும் போகிறான். தன் தோற்றம், ஆளுமை சார்ந்து தனக்கிருந்த நம்பிக்கை சாகரிகாவைக் கவர பயன்படும் என நினைக்கிறான். நினைப்பா? தப்புக் கணக்கா? என்பது போகப் போகத் தெரியும்! அந்த நினைப்பு தாய் மசாஜ் குறித்து ஆரம்பத்தில் அவன்...

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி