வலை எழுத்து

ஒரு நாள், ஒரு பண்டிகை

நண்பர்கள் அனைவருக்கும் சரஸ்வதி பூஜை வாழ்த்துகள். ஓர் இறை நம்பிக்கையாளனாக, செயல்கள் அனைத்தையும் என்னால் அறிய முடியாத ஒரு பெரும் சக்தி கண்காணித்துக்கொண்டிருப்பதாகவே எப்போதும் நினைப்பேன். தெரியாமல் எந்தத் தவறும் செய்வதில்லை. தெரிந்து செய்யும் தருணங்கள் வராதிருந்ததில்லை. தவறிழைக்கும்போதும் மனத்துக்குள் என் கடவுளுக்குத் தெரிவித்துவிட்டுத்தான் ஆரம்பிக்கிறேன். மன்னித்துவிடு என்று கேளாமல் இருப்பதில்லை...

கணை ஏவு காலம் – புதிய தொடர்

இந்து தமிழ் திசை நாளிதழில் கணை ஏவு காலம் என்ற புதிய தொடரை ஆரம்பித்திருக்கிறேன். ஹமாஸ்-இஸ்ரேல் இடையே தொடங்கியிருக்கும் போரினை முன்வைத்து இஸ்ரேல் பாலஸ்தீன் பிரச்னையின் நவீன கால வரலாற்றைப் பேசுகிற தொடர் இது. தினமும் வெளியாகும். 2004ம் ஆண்டு முதல் குமுதம் ரிப்போர்ட்டர் இதழில் இதே இஸ்ரேல் பாலஸ்தீன் பிரச்னையின் வரலாற்றைப் பேசும் ‘நிலமெல்லாம் ரத்தம்’ தொடரை எழுதினேன். இரண்டாண்டு காலம் வெளியான அத்தொடர்...

மணிப்பூர் கலவரம் – புத்தக மதிப்புரை: கார்த்திகேயன் வெங்கட்ராமன்

கடந்த மே மாதம் மணிப்பூர் மாநிலத்தில் கலவரங்கள் துவங்கிய பொழுது செய்தித்தாள்களில் அது தொடர்பான செய்திகளை வாசித்ததுண்டு. அப்போதெல்லாம் அந்தக் இனக் குழுவின் பெயரை எப்படி உச்சரிப்பது? மீட்டியா, மீத்தீயா? அல்லது மெய்ட்டியா என்பதிலேயே எனக்கு குழப்பம் இருந்தது. அதுபோக ஒரு குழுவுக்கு ஆதரவான மாநிலத்தின் உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக மற்றொரு குழு போராட்டம் நடத்துகிறது என்ற அளவில்தான் எனது அடிப்படைப்...

ஆட்டோகிராஃப்

பொதுவாக எழுத்தாளர்களுக்குக் கிளுகிளுப்பு தரக்கூடிய சில விஷயங்களுள் ஒன்று, புத்தகங்களில் கையெழுத்திடுவது.  எழுதத் தொடங்கி, பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு எனக்கு அந்த மகிழ்ச்சி அருளப்பட்டது. மறக்கவே முடியாது. 2005 சென்னை புத்தகக் காட்சியில் டாலர் தேசம் வெளியாகியிருந்த நேரம். ஒவ்வொரு நாளும் குறைந்தது இருபது முதல் நாற்பது கையெழுத்துகள் போடுவேன். அவ்வளவு பேர் நம்மை விரும்புகிறார்கள், நம் எழுத்தை...

போஸ்டர்

சக்தி ஜோதி என்ற சகோதரி நேற்று இந்தப் படத்தை அனுப்பியிருந்தார். நிலக்கோட்டையில் இருந்து ஐயம்பாளையம் வரை இந்த போஸ்டர் ஒட்டப்பட்டிருப்பதாகச் சொன்னார். மதுரையில் வசிக்கும் மெட்ராஸ் பேப்பர் எழுத்தாளர், நண்பர் மதுசூதனன் நிலக்கோட்டையிலேயே வசிக்கும் அவரது நண்பரைத் தொடர்புகொண்டு மேலும் சில படங்களும் ஒரு விடியோவும் எடுத்து அனுப்பியிருந்தார். எழுதுபவனைத் தவிர வேறு யாருக்கும் இந்த முகமறியா அன்பெல்லாம்...

இருண்ட மலைகளும் இனப்பகை அரசியலும்

முப்பது ஆண்டுகளுக்கு முன்பு மணிப்பூர் சென்றிருக்கிறேன். அப்படிச் சொல்வது எவ்வளவு பெரிய அபத்தம் என்று இப்போது புரிகிறது. ஏனென்றால் அன்று இம்பால் பள்ளத்தாக்கை மட்டும் சுற்றிப் பார்த்துவிட்டு மணிப்பூரைப் பார்த்துவிட்டதாக நினைத்துக்கொண்டேன். உண்மையில் மணிப்பூரின் மொத்த பரப்பளவில் இம்பால் என்பது ஒன்றுமேயில்லாத ஒரு சிறு புள்ளி. ஆனால் அந்நிலப்பரப்பில் வாழும் மெய்தி பெரும்பான்மை சமூகத்தினர்தாம் மொத்த...

விஷ்ணுபுரம் விருது விழா

இந்த ஆண்டு விஷ்ணுபுரம் விருது எழுத்தாளர் யுவன் சந்திரசேகருக்கு வழங்கப்படுகிறது. நம் காலத்தின் மிகச் சிறந்த படைப்பாளுமைகளுள் ஒருவரான யுவனுக்குச் சேரும் இக்கௌரவம், இலக்கிய வாசகர்கள் அனைவருக்கும் மிகுந்த மகிழ்ச்சி தருவது. விஷ்ணுபுரம் விருது விழா டிசம்பர் 16-17 தேதிகளில் கோயமுத்தூரில் நடைபெற இருக்கிறது. இவ்வாண்டு நடைபெறும் எழுத்தாளர் சந்திப்பு நிகழ்ச்சிகளுள் ஒன்றனில் நான் பங்குபெறுகிறேன். இது...

மணிப்பூர் கலவரம்: புத்தக முன்பதிவு விவரம்

வெளிவர இருக்கும் என்னுடைய மணிப்பூர் கலவரம்: இனப்பகை அரசியலின் இருண்ட சரித்திரம் நூலுக்கு இப்போது முன்பதிவு செய்யலாம். முன்பதிவு செய்வோருக்கு ஜீரோ டிகிரி இணையத்தளத்தில் இருபத்தைந்து சதவீதம் தள்ளுபடி அறிவிக்கப்பட்டிருக்கிறது.
ஆர்வமுள்ளவர்கள் இந்த லிங்க்கைப் பின் தொடர்ந்து பதிவு செய்யலாம். புத்தகம் மிக விரைவில் வெளிவரும்.

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

Subscribe to News Letter


Exit mobile version