Tagஃபேஸ்புக்

ஃபேஸ்புக்: ஓர் அறிவிப்பு

இந்தக் குறிப்பை ஃபேஸ்புக்கில் எழுதினேன். இங்கே சேகரித்து வைக்கிறேன். அவ்வளவுதான். கடந்த மூன்று மாதங்களாக இங்கே நான் எழுதும் எந்த ஒரு குறிப்பும் ஐம்பது பேருக்கு மேலே சென்று சேராமல் இருந்தது. எப்போது நான் என்ன எழுதினாலும் – அது நட்ட நடு ராத்திரியாகவே இருந்தாலும் முதல் காரியமாக எழுந்து உட்கார்ந்து படித்து, லைக் போட்டுவிட்டுப் பிறகு இழுத்துப் போர்த்திக்கொண்டு தூங்கத் தொடங்கும் நண்பர்களுக்குக்...

விலகியிருத்தல்

சில தினங்களாக நண்பர்கள் பலர் அடிக்கடி நலம் விசாரிக்கிறார்கள். உடம்புக்கு ஒண்ணும் இல்லியே? ஏன், நல்லாத்தான் இருக்கேன். ஃபேஸ்புக்ல காணமேன்னு கேட்டேன். உண்மையில், மணிப்பூர் கலவரம் புத்தகத்துக்கான எழுத்துப் பணி தொடங்கியதில் இருந்து என் அன்றாட ஒழுங்கு அல்லது ஒழுங்கின்மை முற்றிலும் மாறிவிட்டது.  முன்போல இப்போதெல்லாம் இரவு நெடுநேரம் கண் விழித்து எழுத முடிவதில்லை என்பதால் பகலிலும் சிறிது நேரம் வேலை செய்ய...

இன்ஸ்டாக்ராமுக்குப் போய்விடலாமா?

தெளிவாக அலசி ஆராய்ந்துவிட்டேன். இருபத்தைந்து வயதுக்கு உட்பட்ட இளைய தலைமுறையைச் சுண்டி இழுத்து சூனியம் வைக்க வேண்டுமானால் இன்ஸ்டாகிராமுக்குத்தான் குடி மாற வேண்டும். பிரச்னை என்னவென்றால் அங்கே எழுத முடியாது. எதைச் சொன்னாலும் பொம்மை போட்டுத்தான் சொல்ல வேண்டும். கேவலமான அஷ்ட கோணல் செல்ஃபிகளையெல்லாம் லட்சம் பேர் லைக் செய்கிறார்கள். நடிகைகளும் பெண் எழுத்தாளர்களும் இதில்தான் சதம் அடித்துவிடுகிறார்கள்...

குழுவில் விழுதல்

வாழ்வு தொடங்கி வாட்சப் வரை பரவலாகச்  சில குழுக்களில் உறுப்பினராக இருக்கிறேன். இந்தக் குழு அமைப்பு என்பது மனித வாழ்வில் தவிர்க்க முடியாதது போல. பிரச்னை இல்லை. நான் குழுவில் இருக்க வேண்டும் என்று யாராவது நினைக்கிறார்கள். வேறு யாராவது சேர்க்கிறார்கள். எனவே, இருக்கும்படி ஆகிவிடுகிறது. ஆனால் எந்தக் குழுவிலும் நடவடிக்கைகளில் பங்களித்த நினைவில்லை. ஒரு பார்வையாளனாக இருப்பதில் உள்ள சௌகரியத்தை மட்டுமே...

உதிரி

உறவினர்களைப் பற்றி உயர்வான அபிப்பிராயம் வைத்திருக்கும் ஒரு சென்னைவாசியைக்கூட நான் கண்டதில்லை. என்னையும் சேர்த்தேதான் சொல்லத் தோன்றுகிறது. என் நண்பர்களில் பலபேர் மதுரைக்காரர்கள். சிலர் திருநெல்வேலிக்காரர்கள். திருச்சிப் பக்கம் சிலர் இருக்கிறார்கள். இவர்களில் யாரும் தமது உறவினர்களைக் குறித்து எதிர்மறையாக என்னிடம் ஏதும் சொன்னதில்லை. மாறாக தாய்மாமன், அத்தை, சித்தப்பா, பங்காளி உறவு முறையில்...

இந்தக் கதையில் நீ சொல்ல வருவது என்ன?

இத்தொகுப்பில் உள்ள கதைகளை அதிகபட்சம் நாற்பது நாள் இடைவெளியில் எழுதினேன். கொரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்டது முதல், தினம் தினம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையையும் இறந்தவர்களின் எண்ணிக்கையையும் செய்திகளில் பார்த்துப் பார்த்துக் கிட்டத்தட்ட மனச்சோர்வு எல்லைக்குச் சென்றுவிடுவேன் என்று தோன்றியது. வலுக்கட்டாயமாக அதில் இருந்து என்னைப் பிடுங்கிக்கொள்ளவே வழக்கத்தைவிட நிறைய எழுதத் தொடங்கினேன். ஆதியிலே...

ஞானஸ்தன் (கதை)

பாரா ஒரு நாள் ஞானம் பெற்று பாராசான் என்னும் ஜென் குரு ஆனான். ஆனால் அவன் பாராசான் ஆனது ஊருக்குத் தெரியாது. அது ஊருக்குத் தெரியாது என்கிற சங்கதி பாராசானுக்கும் தெரியாது என்பதனால் ஏன் தன்னை நாடி முட்டாள்களோ சீடர்களோ இன்னும் வரவேயில்லை என்று அவன் தினமும் கவலைப்படலானான். ஒவ்வொரு புதிய முட்டாள் வரும்போதும் எப்படி அவர்களை மடக்கி, வியப்பூட்டி, பரவசப்படுத்தி, ஒரு ஓட்டாஞ்சில்லைத் தூக்கிப் போட்டு அதில்...

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி