Tagஅனுபவம்

எழுதுதல் பற்றிய குறிப்புகள் – ஒரு பார்வை: திருவாரூர் சரவணன்

வணக்கம் பாரா. புத்தகம் உள்ளங்கை அகலத்திற்கு கச்சிதமாக இருந்தது முதல் ஆச்சர்யம். பிறகு சித்திரகுப்தன் பேரேடின் அளவு முன்மாதிரியாக இருந்திருக்கும் என்று தோன்றியது. கலையைச் சொல்லித்தர முடியாது. ஆனால் நுட்பங்களை முடியும். பின் அட்டையில் உள்ள இந்த வரிகள்தான் மொத்த சாரம்சம். சைக்கிள் கற்றுக் கொடுத்தால் எனக்கு முன்னாலேயே ஏறி ஓட்டிட்டுப் போவ – இப்படிப்பட்ட பங்காளி எனக்கு உண்டு. ஆனால் நீங்கள்...

சொற்களால் ஆனவன்

இரண்டாயிரத்து மூன்றாம் ஆண்டுத் தொடக்கத்தில் என் நண்பர் நரசிம்மன் மூலமாக இயக்குநர் விக்கிரமாதித்தனின் அறிமுகம் கிடைத்தது. அப்போது அவர் மெட்டி ஒலி நெடுந்தொடரில் இரண்டாவது யூனிட் இயக்குநராகப் பணியாற்றிக்கொண்டிருந்தார். நான் பத்திரிகைப் பணியில் இருந்து விலகி பதிப்புத் துறையில் ஈடுபடத் தொடங்கியிருந்தேன். தனியே ஒரு தொடரை இயக்குவதற்கான முயற்சிகளில் இருந்த அவரிடம் அப்போது ஒரு கதை சொன்னேன். பிறகு பல...

கோவிந்தசாமிகளின் குணாதிசயங்கள்

திடீர் திடீரென்று தினசரி ஒழுங்குகளை மாற்றுவது, உணவு, உடை, உறக்கம் போன்றவற்றில் புதிய முயற்சிகள் செய்து பார்ப்பது எப்போதும் எனக்குப் பிடிக்கும். முன்பெல்லாம் ஒரு நாளைக்குப் பன்னிரண்டு முதல் பதினான்கு மணிநேரம் உறங்குவேன். எப்போது படுத்தாலும் தூக்கம் வரும். உறங்கி விழித்து எழுந்து காப்பி சாப்பிட்டுவிட்டுத் திரும்பப் படுத்தாலும் மூன்று மணி நேரம் தூங்க முடியும் என்னால். உறக்கம் என்பது என்னைப்...

நடிகர் விக்கிரமாதித்யன்

ஏவி.எம் கார்டனில் நான் கடவுள் கலைஞர்கள் குவிந்திருந்தார்கள். பத்திரிகையாளர் சந்திப்பு ஏதோ நடந்திருக்கும் போலிருக்கிறது. மேக்கப் இல்லாத பூஜாவும் வந்திருந்தார். படத்தில் நடித்த உடல் ஊனமுற்ற சிறுவர்களையும் பெரியவர்களையும் ஆங்காங்கே சிலர் தூக்கிக்கொண்டு நடந்துகொண்டிருந்தார்கள். அத்தனைபேர் முகத்திலும் மகிழ்ச்சி, பரவசம். படத்தில் நடித்ததற்கான ஊதியம் தாண்டி குழுவினர் வேறு ஏதோ செய்திருக்கிறார்கள் என்று...

எழுதாத நாள்கள்

வாசகர்கள் மன்னிக்க வேண்டும். சுகம் பிரம்மாஸ்மி ஆரம்பித்த வேளை சரியில்லை. சிவல்புரி சிங்காரத்திடம் கேட்டுவிட்டுத் தொடங்கியிருக்கலாம். உட்கார்ந்து எழுதவே முடியவில்லை. தவிர்க்கவே முடியாத ரிப்போர்ட்டர் தொடர் தவிர வேறு எதுவுமே இந்நாள்களில் எழுதுவதில்லை. கால், கால்வாசிதான் குணமாகியிருக்கிறது. இப்போது எழுந்து நிற்க முடிகிறது. ஒரு சில நிமிடங்கள். ஆனால் நடக்க முடியவில்லை. இந்த வயதில் நடைவண்டி வாங்கிப்...

சோதிடர்களின் கூட்டுச் சதி

கலைத்துறையில் புதிய தடங்கள் பதிப்பீர்கள். சொல்வாக்கும் செல்வாக்கும் மேலோங்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். புதிய வீடு வாங்கும் யோகம் கூடும். எதிரிகள் சில்லறைத் தொல்லை தருவார்கள். ஆனாலும் சமாளித்துவிடுவீர்கள். சிறு உடல் உபாதைகள் வந்து போகும். பயணம் செய்யும்போது எச்சரிக்கை அவசியம். விபத்துகள் நேரிடலாம். மேற்கண்ட சோதிடப் பலன்கள், புத்தாண்டை ஒட்டி பண்டிதர் காழியூர் நாராயணன், யதார்த்த ஜோதிடர் செல்வி...

மூன்று விஷயங்கள்

நகரம் நனைந்திருக்கிறது. நல்ல மழை. இடைவிடாமல் மூன்று தினங்களாகப் பெய்துகொண்டிருப்பதால் அனைத்துச் சாலைகளும் குறைந்தபட்சம் கணுக்கால் அளவு நீருக்கு அடியில்தான் இருக்கின்றன. பல இடங்களில் முழங்காலுக்கு மேல் தண்ணீர். நேற்றைக்குச் சற்று அதிகம். சுரங்கப்பாதைகளெல்லாம் நீச்சல் குளங்கள் போல் ஆகியிருக்கின்றன. மாம்பலத்தை தியாகராயநகருடன் இணைக்கும் அரங்கநாதன், கோவிந்தன் சுரங்கப்பாதைகள் இரண்டும் நிரம்பித்...

கோடம்பாக்கத்துக்குப் போன கோயிஞ்சாமி

ஒரு வழியாகக் கடந்த ஞாயிற்றுக்கிழமை குரோம்பேட்டையிலிருந்து இடம் பெயர்ந்து கோடம்பாக்கத்துக்குக் குடிவந்து சேர்ந்தேன். வீடு மாற்றியதற்கு முன் தினம் பேட்டையில் முழு நாள் மின்சாரம் கிடையாது. காலை ஆறு மணிக்குப் போன கரெண்ட், நள்ளிரவு பன்னிரண்டுக்கு வந்தது. எல்லா வேலைகளும் எனக்காக நாளெல்லாம் காத்திருந்து உறங்கத் தொடங்கியபோது, தட்டி எழுப்பி, மூட்டை கட்ட ஆரம்பித்தேன். என் நேரம். ஞாயிறு அதிகாலை இடியுடன்...

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி