Tagஅரசியல்

போரும் பரபரப்பும்

ஹமாஸ்-இஸ்ரேல் போர் தொடங்கியதில் இருந்து குறைந்தது இருபது யூ ட்யூப் சானல்களில் இருந்தும், அநேகமாக அனைத்து செய்தி டிவிக்களில் இருந்தும் அது குறித்துப் பேசுவதற்கு அழைத்தார்கள். தனிப் பேட்டி, வல்லுநர்களுடன் கலந்து பேசுவது, விவாதங்கள் எனப் பலவிதமான நிகழ்ச்சி அழைப்புகள். ஒரு டிவிக்காரர்கள், போர் முடியும்வரை தினசரி பத்து நிமிடங்கள் அவர்களுடைய காலை நிகழ்ச்சியில் ஓரங்கமாகப் போரினைக் குறித்துப் பேசச்...

மணிப்பூர் கலவரம்: புதிய புத்தகம்

மணிப்பூர் கலவரம்: இனப்பகை அரசியலின் இருண்ட சரித்திரம். இதுதான் தலைப்பு. கடந்த ஐந்து மாதங்களாகச் செய்துகொண்டிருந்த ஆய்வு நிறைவு பெற்று, இப்போது புத்தகம் தயாராகிக்கொண்டிருக்கிறது. எழுத்து பிரசுர வெளியீடாக விரைவில் வெளிவரும்.
அட்டைப் படம் வடிவமைப்பு: பாலா, சேலம்.

பிரபாகரன் – ஒலிப் புத்தகம்

பிரபாகரன் வாழ்வும் மரணமும் ஒலிப் புத்தகம் வெளியாகியிருக்கிறது. ஸ்டோரி டெல் இதனை வெளியிட்டிருக்கிறது. ஒரு விஷயம் நினைவுக்கு வருகிறது. இந்தப் புத்தகத்தின் முதல் பதிப்பு வந்தபோது சென்னை புத்தகக் காட்சியில் போஸ்டர் கூடாது; விளம்பரம் கூடாது என்று தொடங்கி, அரங்கில் வைக்கவே கூடாது என்றெல்லாம் கடைக்கு வந்து கட்டளை போட்டார்கள். அனைத்தையும் மீறி எவ்வளவோ பதிப்புகள் வரத்தான் செய்தன. கடந்த வாரம்கூட ஜீரோ...

கலவர காலக் குறிப்புகள் – மறு பதிப்பு

  என்னுடைய அரசியல் புத்தகங்களில் தனிப்பட்ட முறையில் எனக்கு மிகவும் பிடித்த புத்தகம் இதுதான். இரண்டு காரணங்கள். அதிகம் பரிச்சயமில்லாத தேசங்களின் அரசியலை / பெரும் பிரச்னைகளை மிகக் குறைவான சொற்களில் புரிய வைக்க வேண்டும் என்று எனக்கு நானே விதித்துக்கொண்டு, எந்தக் கட்டுரையும் 500 சொற்களுக்கு மிகாதவாறு பார்த்துக்கொண்டேன். சுருக்கம் தருகிற வேகத்துக்கு நிகரே கிடையாது. இரண்டாவது காரணம், இந்தப்...

பெட்டி

ஐயாவுக்கு இருபது வருடங்களாக நான் கார் ஓட்டிக்கொண்டிருக்கிறேன். அவர் ஒரு காலத்தில் பெரிய நடிகர். நிறைய சம்பாதித்தார். என்னைப் போல அவரிடம் வேலை பார்க்கும் எல்லோருக்கும் மகிழ்ச்சி கொள்ளும் அளவுக்கு சம்பளம் கொடுத்தார். ஏதாவது விசேஷம் என்று பத்திரிகை வைத்தால் வீடு தேடி வந்து தாம்பாளத்தில் பழங்களுடன் பத்தாயிரம், இருபத்தையாயிரம் ரூபாயெல்லாம் தருவார். மிகவும் நல்ல மாதிரி. அவருக்கு அப்படியொரு துயரம்...

ரஜினி: நடிகரும் தலைவரும்

என் நண்பர்களில் சிலர் தீவிரமான ரஜினி ரசிகர்கள். அவரைத் தலைவர் என்று குறிப்பிடுபவர்கள். பன்னெடுங்காலமாக அவர் அரசியலுக்கு வருவார், வருவார் என்று சொல்லிக்கொண்டிருப்பவர்கள். ஒவ்வொரு முறை ரஜினி கூட்டம் கூட்டி விரைவில் முடிவெடுப்பேன் என்று சொல்லும்போதும் என்னமோ திட்டமிருக்கு என்று சொல்வார்கள். கேலி கிண்டல்களை விலக்கி, இம்மனநிலையைப் புரிந்துகொள்ள விரும்புகிறேன். ரஜினி ஒரு நடிகர் என்பதைவிட, ஸ்டைல் மூலமாக...

இரண்டு முக்கிய அறிவிப்புகள்

1. நானும் நீங்களும் கற்பனை செய்யமுடியாத, எமது மனங்கள் ஒப்புக்கொள்ள முடியாத ஒரு நிகழ்வு நடந்தேறி விட்டது. எமது தலைவர் வீரமரணம் அடைந்துவிட்டார் என்பதனை நான் இங்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கின்றேன்.
– செல்வராஜா பத்மநாதன், GTVயில். [ஏன் தமிழ்நெட்டில் அறிவிக்கவில்லை என்று தெரியவில்லை]
2.  பழ. நெடுமாறன் அறிக்கை.
இது அபத்த அரசியல்களின் நேரம்.

முடிந்தது யுத்தம்; அடுத்தது என்ன?

மெஜாரிடி – மைனாரிடி, சிங்களர் – தமிழர் வேறுபாடு இனி இல்லை. தேசப்பற்றாளர்கள் – தேசத்துரோகிகள். தீர்ந்தது விஷயம்.   தமிழர்கள் இனி நிம்மதியாக வாழலாம். அச்சமில்லாமல் வாழலாம். அவர்களது சகவாழ்வுக்கு நான் பொறுப்பு. கடந்த செவ்வாய்க்கிழமை காலை இலங்கை நாடாளுமன்றத்தில் அதிபர் ராஜபக்‌ஷே ஆற்றிய உரையில் குறிப்பிட்டது இது. இலங்கை சுதந்தரம் அடைந்த நாளாக (அப்போது மாண்புமிகு அதிபருக்கு மூன்று...

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி