Tagஇணையம்

பரம ரகசியங்களைக் குறித்த வெள்ளை அறிக்கை

நவீன வாழ்க்கை விடுக்கும் சவால்களில் மிக மோசமானதென்று நான் கருதுவது பாஸ்வர்டுகளை நினைவில் வைத்துக்கொள்வதுதான். பாஸ்வர்ட் மேனேஜர்கள், அனைத்துக்கும் ஒரே பாஸ்வர்ட், ஒரே பாஸ்வர்டின் பல்வேறு வித வெளிப்பாடுகள், இயந்திர உற்பத்தி பாஸ்வர்டுகள், ஒவ்வொரு முறையும் forgot password போட்டுப் புதிய பாஸ்வர்ட் பெறுதல் உள்ளிட்ட அனைத்து சாத்தியங்களிலும் முயற்சி செய்து சலித்துப் போன அனுபவத்தில் இதனை எழுதுகிறேன்...

மொட்டைமாடியில் விக்கிபீடியா

இன்று [சனிக்கிழமை 13.6.2009] மாலை 6 மணிக்கு கிழக்கு மொட்டை மாடிக் கூட்டத்தில் தமிழ் விக்கிபீடியா பற்றி ரவிசங்கர் பேசுகிறார். சாத்தியமுள்ள அனைத்து சென்னைவாழ் நண்பர்களையும் கலந்துகொள்ள அழைக்கிறேன். உபயோகமான விஷயம். இது பற்றி ரவிசங்கர் அனுப்பியிருந்த குறிப்பு: இந்திய மொழிகளில் இந்திக்கு அடுத்து தமிழ்தான் இணையத்தில் அதிக அளவு இடம் பெற்றிருக்கிறது. 5,000-க்கும் மேற்பட்ட தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன...

இந்த வருடம் என்ன செய்தேன்?

* மிகக் குறைவான திரைப்படங்களையே பார்த்திருக்கிறேன். மனத்தில் நிற்பது சுப்ரமணியபுரம் மட்டும். தமிழல்லாத வகையில் Gloomy Sunday. * கிழக்கு சேர்த்து, படித்தது மொத்தம் 149 புத்தகங்கள். குறிப்பிடத் தோன்றுபவை: ஆன்மிகத்தில் பொருந்தாத ஒரு மறைஞானியின் சுயசரிதம் (கண்ணதாசன் பதிப்பகம்), பிரம்ம சூத்திரம் (விளக்கம்: அ. சுகவனேச்வரன்), சுதந்தர வேட்கை (அடேல் பாலசிங்கம்), ஜாமிஉத் திர்மிதி, அங்கே இப்ப என்ன நேரம் (அ...

ஆர்குட்டில் என் வாசகர் குழுமம்

ஆர்குட்டில் எனக்கொரு வாசகர் குழுமம் தொடங்கப்பட்டிருப்பதை நேற்று கண்டேன். பொதுவாக எனக்கு ஆர்குட் என்றால் அலர்ஜி. முன்பொரு சமயம் நண்பர்கள் அறிமுகப்படுத்தியபோது உள்ளே சென்று பார்த்திருக்கிறேன். பெரிதாக ஆர்வம் கவரவில்லை. வெளியேறி விட்டேன். பின்பு என்னுடைய ஜிமெயில் முகவரி களவு போன சமயம், ஒரு போலி ஆர்குட் முகவரியை நான் க்ளிக் செய்து உள்ளே சென்று கடவுச்சொல் கொடுத்ததுதான் காரணம் என்று நண்பர் இட்லிவடை...

Technically Yours

சமீபத்தில் ஒருநாள் ஏதோ ஒரு வேகம் வந்து, என் லேப்டாப்பில் போட்டோ ஷாப் மென்பொருளை இன்ஸ்டால் செய்து, உடனடியாக என் அலுவலகத் தோழி வைதேகியை அழைத்து அதன் அடிப்படைகளைச் சொல்லித்தரச் சொல்லி ஒரு சில மணிநேரங்கள் கற்றுக்கொண்டு, கச்சாமுச்சாவென்று ஒருவாரத்தில் ஏகப்பட்ட போட்டோ ஷாப் உருவங்களை உருவாக்கிப் பார்த்தேன். பத்ரி, இட்லிவடை, மருதன் போன்ற நண்பர்கள் என் ஆர்வத்துக்கு மனமுவந்து தமது வலைப்பதிவுகளையே...

எனக்கு இங்கே வயது எட்டு

சமீபத்தில் ஒருநாள் என் பழைய குப்பைகளைக் குடைந்துகொண்டிருந்தபோது ஆதி ராயர் காப்பி க்ளப்புக்கு நான் எழுதி அனுப்பிய சில குறுங்கட்டுரைகளின் கையெழுத்துப் பிரதிகள் அகப்பட்டன. பரபரவென்று யோசித்துப் பார்த்தால் நான் இணையத்துக்கு வந்து எட்டு ஆண்டுகள் முடிகின்றன. இடையே சில வருடங்கள் எழுதாமல் இருந்திருக்கிறேன். பல மாதங்கள் படிக்காமலேயேகூட இருந்திருக்கிறேன். நிறைய நண்பர்கள், ஏராளமான அனுபவங்கள், சந்தோஷங்கள்...

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி