Tagஅனுபவம்

பேட்டை புராணம்

சில நடைமுறை வசதிகளை உத்தேசித்து என் இருப்பிடத்தை மாற்ற முடிவு செய்தேன். குரோம்பேட்டையிலிருந்து கோடம்பாக்கத்துக்கு. சம்பிரதாயங்கள்மீது மிகுந்த நம்பிக்கை கொண்ட என் பெற்றோர் உடன் வந்து பால் காய்ச்சி சர்க்கரை போட்டு எனக்கு ஒரு தம்ளர் கொடுத்துவிட்டு அவர்களும் ஆளுக்கொரு வாய் சாப்பிட்டுவிட்டு, ‘வீடு நல்லாருக்குடா’ என்று சொன்னார்கள்.[ஆனால் வாடகை அத்தனை நன்றாக இல்லை.] நான் பார்த்திருக்கும் வீட்டுக்கு...

a-s-d-f-g-f ;-l-k-j-h-j

இன்றைக்கு கோடம்பாக்கம் [பழைய] ராம் தியேட்டர் அருகே போய்க்கொண்டிருந்தபோது அவளைப் பார்த்தேன். என்னுடைய பதினைந்தாவது வயதில் முதல் முதலில் பார்த்தபோது தென்பட்டதுபோல் அத்தனை பேரழகியாக இல்லை. இந்தக் கட்டுரை அவளைப் பற்றியதில்லை. அவளைப் போலவே தன் அடையாளம் துறந்துவிட்ட எங்கள் ஊர் டைப்ரைட்டிங் இன்ஸ்டிட்யூட் பற்றியது. அங்கேதான் அவள் எனக்கு அறிமுகமானாள். எங்காவது இன்றைக்கு டைப்ரைட்டிங் இன்ஸ்டிட்யூட்...

பாரதியாருக்கு பக்கோடா வாங்கித் தந்தவர்

என் அம்மா வழி தாத்தாவின் பெயர் ராமசாமி. அவரது பெற்றோர், முன்னோர், சொந்த ஊர், சகோதர சகோதரிகள் குறித்த எந்த விவரமும் எனக்குத் தெரியாது. நானறிந்த தாத்தா, சைதாப்பேட்டை பெருமாள் கோயில் தெருவில் உள்ள நாற்பதாம் எண் வீட்டின் வாசலில் மாலை ஆறு மணிக்குப் பிறகு எப்போதும் மரத்தாலான ஒரு பெரிய ஈசி சேரைப் போட்டு அதில் சாய்ந்து அமர்ந்து ரேடியோ கேட்டுக்கொண்டிருப்பார். எப்போதாவது விடுமுறை தினங்களில் தாத்தா...

எனக்கு இங்கே வயது எட்டு

சமீபத்தில் ஒருநாள் என் பழைய குப்பைகளைக் குடைந்துகொண்டிருந்தபோது ஆதி ராயர் காப்பி க்ளப்புக்கு நான் எழுதி அனுப்பிய சில குறுங்கட்டுரைகளின் கையெழுத்துப் பிரதிகள் அகப்பட்டன. பரபரவென்று யோசித்துப் பார்த்தால் நான் இணையத்துக்கு வந்து எட்டு ஆண்டுகள் முடிகின்றன. இடையே சில வருடங்கள் எழுதாமல் இருந்திருக்கிறேன். பல மாதங்கள் படிக்காமலேயேகூட இருந்திருக்கிறேன். நிறைய நண்பர்கள், ஏராளமான அனுபவங்கள், சந்தோஷங்கள்...

வலி உணரும் நேரம்

எனக்கும் சத்யா ஸ்டுடியோவுக்குமான உறவு மொத்தம் ஒன்பது மாத காலம் ஆகும். அப்போதே அது பாதிதான் ஸ்டுடியோ. மீதி இடத்தை குடோன் ஆக்கிக்கொண்டிருந்தார்கள். பிறகு கொஞ்சநாள் முழு கொடோனாக இயங்கிவிட்டுப் பின்னால் ஒரு கல்லூரியாகப் புதிய பிறவி கண்டது.

மெல்லினம் – சில குறிப்புகள்

நேற்று முன் தினம் மதியத்திலிருந்து நேற்று மாலை ஏழு மணிவரை என்னுடைய லேப்டாப்பில் பிரச்னை. இணையத் தொடர்பு கிடைக்கவில்லை. இணையம் தேவைப்படாத வேறு வேலைகளையும் செய்யமுடியவில்லை. மரணப்படுக்கையில் இருக்கும் நூற்றுக்கிழவனின் இறுதி சுவாசம் போல சிபியூ இயங்கிக்கொண்டிருந்தது. உள்ளிருக்கும் கோப்புகளைப் பிரதியெடுத்து வைக்கக்கூட முடியாத சூழல். எந்த கமாண்ட் கொடுத்தாலும் சிபியூவின் புத்தியில் அது உறைத்து...

பல்லே பல்லே…

நாகராஜன் ருசித்துப் பார்த்து, அறிமுகப்படுத்திவைக்க, நேற்று செனடாஃப் சாலையில் உள்ள தாபா எக்ஸ்பிரஸில் மதிய உணவுக்காகச் சென்றேன். சந்தேகமில்லாமல் அடிமையாக்குகிறது. இன்றைக்கு மதியம் மீண்டும். பல வருடங்களுக்கு முன்னர், திரைப்பட விழாக்களுக்காகப் புது தில்லி செல்லும்போது சாலையோரத் தள்ளுவண்டி தாபாக்களில் சாப்பிட்டிருக்கிறேன். ஆகிருதியான சர்தார்ஜிக்கள் ஒரு வேள்வி போல ரொட்டிகளைச் சுட்டுப் போட்டுக்கொண்டே...

நடந்த கதை

நீண்டநாள் விருப்பம் ஒன்று இன்றைக்கு நிறைவேறியது. சென்னை மெரினா கடற்கரையில் காலை நடைப்பயிற்சி செய்யவேண்டும் என்று எட்டு மாதங்களாக – எடை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்ட நாள் தொடங்கி ஆசைப்பட்டேன். நான் வசிக்கும் பேட்டையிலிருந்து மெரினாவுக்கு வந்து சேரச் சாதாரணமாக ஒன்றே முக்கால் மணி நேரம் ஆகும். சாலை காலியாக இருந்தால் ஐம்பத்தைந்து நிமிஷம். எனவே இது முடியாதிருந்தது. நேற்றைக்குத் திட்டமிட்டு...

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி