Tagஅறிவிப்பு

அடுத்தது என்ன?

மே 2006ல் தொடங்கியது. முழுதாக இரு வருடங்கள் ஓடிவிட்டன. ரிப்போர்ட்டரில் என்னுடைய ‘மாயவலை’ தற்சமயம் நிறைவடைந்ததை அடுத்து [தினத்தந்திக்கு அடுத்தபடி செய்திகளை முந்தித்தருபவருக்கு நன்றி.] இரண்டு கேள்விகளுக்கு தினசரி குறைந்தது பத்து முறையாவது பதிலெழுதிக்கொண்டிருக்கிறேன் / சொல்லிக்கொண்டிருக்கிறேன். முதல் கேள்வி, இது எப்போது நூலாக வரும்? இதற்கான பதில் : வந்துவிட்டது அல்லது வராது என்பதுதான்...

நவீனத்துவத்தின் முகம்

நவீன இலக்கியம் என்றால் என்ன என்று நேற்று பின்னூட்டப் பெரியவர் ஒருவர் ஒரு கேள்வி கேட்டார். அகராதி வைத்துப் படிக்க வேண்டியவையெல்லாம் பழைய இலக்கியம், அகராதி துணையின்றிப் படிக்க முடிகிறவை நவீன இலக்கியம் என்று சொல்லிவிடலாமா என்று அவரே தமது முடிவையும் இங்கே முன்வைத்திருந்தார். இம்மாதிரி விவகாரங்களில் பொதுவாக நான் கருத்து சொல்லுவதில்லை. இலக்கியத்தைப் பொறுத்தவரை நான் ஒரு தீவிரவாதி மனநிலை கொண்ட வாசகன்...

எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது.

நண்பர்களுக்கு வணக்கம். கடந்த ஆறு மாதகாலமாகக் ‘காணாமல் போயிருந்த’ என்னுடைய writerpara ஜிமெயில் முகவரி சற்றுமுன் எனக்குத் திரும்பக் கிடைத்திருக்கிறது. இந்த மின்னஞ்சல் முகவரியைச் சிலகாலம் எடுத்துக்கொண்டு விளையாடிய நண்பர்கள் அது குறித்து இணையத்தில் எழுதியிருந்ததைக் கண்டிருப்பீர்கள். அதன் தொடர்ச்சியாக மேற்கொண்ட சில நடவடிக்கைகளின் விளைவாக இப்போது இந்த முகவரி எனக்குத் திரும்பக்...

இங்கே இருக்கிறேன்!

வணக்கம். மூன்று வருடங்கள் இருக்குமா? பெரிய இடைவெளி இல்லை. மீண்டும் இணையத்தில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி. இம்முறை சொந்தத் தளம் என்பதால் சற்றே கூடுதலாகவும். இடைப்பட்ட காலங்களில் இங்கு எழுதாமல் இருந்தேனே தவிர வாசிக்காமல் இல்லை. மகிழ்ச்சி கொள்ளவும் மௌனம் காக்கவும் புன்னகை செய்யவும் புல்லரிக்கவும் அதிர்ச்சி கொள்ளவும் அடங்கிப் போகவும் மிரள வைக்கவும் மென்று விழுங்கவும் எப்போதும் கிடைத்தபடிதான்...

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி