Tagநகைச்சுவை

சர்வநாச பட்டன் – 6

அதிகாரம் 6: புரட்சி 1. மிகப்பெரிய புரட்சிகளுக்கான முதல் புள்ளி பெரும்பாலும் சமையலறைகளில்தான் வைக்கப்படும். உதாரணமாக, விளாதிமிர் லெனினின் மனைவி நதெஸ்தா க்ருப்ஸ்கயா கட்சி வேலைகளில் லெனினைவிட பிசியாக இருந்ததால் கணவருக்கு நல்ல தேநீர் போட்டுத் தர வழியில்லாதிருந்தது. விளைவு, அடிக்கடி தோழர்களைச் சேர்த்துக்கொண்டு டீ குடிக்கச் சென்றவர், அப்படியே புரட்சியில் குதித்துவிட்டார். 2. புரட்சிகர எழுத்துகளில்...

சர்வநாச பட்டன் – 5

அதிகாரம் 5: பெண்கள் 1. பெண்கள் இரண்டு வகைப்படுவர். 1. ஆண்கள் விரும்புவது போல இல்லாதவர்கள். 2. இதர  பெண்கள் விரும்புவது போல இல்லாதவர்கள். 2. பெண்ணுக்குப் பெண்ணே எதிரி என்ற முதுமொழியில் ஒரு தவறான புரிதலுக்கான வாய்ப்புள்ளது. பொதுவாகப் பெண்கள் இன்னொரு பெண்ணை எதிரியாகக் கூட அண்ட விடமாட்டார்கள். 3. பெண்ணியம் என்பது சரியாக சாம்பார் வைக்க வராதவர்களால் உருவாக்கப்பட்ட கருத்தாக்கம். 4. இருபது வருடங்களுக்கு...

சர்வநாச பட்டன் – 4

அதிகாரம் 4: காதல் நவீன காதல் என்பது திருமணத்தை உத்தேசிக்க வாய்ப்பில்லை. ஆனால் விவாகரத்தை அது இரு கரம் தட்டி வரவேற்கும். சிறந்த காதலர்கள் சீக்கிரம் பிரிந்துவிடுவார்கள். காதலை வாழவைக்க வேறு நல்ல உபாயமில்லை. போயும் போயும் இவனை (அல்லது இவளை)க் காதலித்தோமே என்று தோன்றும்போதுதான் மேற்படியார்கள்  கவிதை எழுத ஆரம்பிக்கிறார்கள். இது குழந்தைகள் மலச்சிக்கலில் இருந்து விடுபட ஆசனவாயில் வெற்றிலைக் காம்பைச்...

சர்வநாச பட்டன் – 3

அதிகாரம் 3: பதிவர் சிறந்த பதிவரை இனம் காண்பது எப்படி? அனைத்து பக்கெட், டேக்சா சேலஞ்சுகளிலும் தன் இருப்பைச் சொல்லி, ஹேஷ் டேக் இட்டு டிரெண்டிங்குகளில் பங்களித்து, அவ்வப்போது செல்ஃபி போட்டு, சுதந்திர தினத்துக்கு ப்ரொஃபைலில் தேசியக் கொடி வைத்து, மோடி வரும்போது கோபேக் சொல்லி, மாதக் கடைசி ஆனால் ஃபேஸ்புக்கிலிருந்து விலகலாம் என்றிருக்கிறேன் என்று ஸ்டேடஸ் போட்டு, மறு நாள் காலை, இனிய காலை வணக்கம்...

சர்வநாச பட்டன் – 2

அதிகாரம் 2: கடவுள் ஆத்திகனாக இருப்பதற்குக் கடவுள் நம்பிக்கை இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. ஒரு ஹவுஸிங் லோன் இருந்தால்கூடப் போதும். அடி பிடித்த தோசைக்கல்லையும் ஆண்டவனையும் விளக்க நினைப்பது நேர விரயம். அப்படியே தண்ணி தெளித்து சுரண்டிவிட்டு,  மாவை ஊற்ற வேண்டியதுதான். மருத்துவர்கள் தெய்வத்துக்குச் சமம். மெடிக்கல் இன்சூரன்ஸ், பெண் தெய்வத்துக்கே சமம். மெய் வருத்தாமல் கூலி தரும் ஒரு கடவுளைத்...

சர்வநாச பட்டன் – 1

அதிகாரம் 1: சக மனிதன் நூறு நல்லவர்களை என்னிடம் தாருங்கள். நூறு பேருமே ஃப்ராடு என நான் நிரூபிக்கிறேன். ஓ! மனிதன் எத்தனை சிறந்த கமிஷன் ஏஜெண்ட்! நல்ல மனிதர்கள் என்று யாருமில்லை. எல்லோருமே சுமாரான அசெம்பிள்டு செட்தான். மனித குலத்தின் ஆகப் பெரிய பிரச்னை, அன்பு நிறைந்து பொங்கி வழிவது போல அவ்வப்போது காட்ட வேண்டி இருப்பதுதான். ஆண்டவா, உறவுக்காரர்களிடம் இருந்து என்னைக் காப்பாற்று. சக மனிதனை நான்...

அன்சைஸ் – மறு பதிப்பு

  இந்த உலகில் ஆகச் சிரமமான காரியம் ஒன்று உண்டென்றால் அது சுய விமரிசனம் செய்துகொள்வதுதான். ஆனால், பெரும்பாலும் நமக்கு ரொம்பப் பிடித்த நபர் நாமேவாகத்தான் இருப்போம். பிடித்துவிட்டால் விமரிசனம் எங்கிருந்து வரும்? ஆனால் ஓர் எழுத்தாளன், விமரிசனக் கலை பயில விரும்பினால் அதற்கு மிகவும் சௌகரியமான, பாதுகாப்பான வழி தன்னைத்தானே விமரிசித்துக்கொள்வது. ஒரு பயலும் நாயே பேயே என்று நாலு பக்கத்துக்குத் திட்ட...

கொடுங்கனவு

இரவு ஒரு கொடுங்கனவு. கொங்கு நாடு உதயமாகிவிடுகிறது. வலிமை அப்டேட் வானதி சீனிவாசனுக்கு லெஃப்டினண்ட் கவர்னர் காயத்ரி ரகுராம் பதவிப் பிரமாணம் செய்து வைக்கப் போகிற நேரம், ‘நிறுத்துங்கள்!’ என்று கூவிக்கொண்டு ராஜகுரு ஜக்கி வாசுதேவ் உருவிய வாளுடன் அரண்மனைக்குள் நுழைகிறார். கடலுக்குள் மூழ்கிய துவாரகையை மீட்டு வெளியே கொண்டு வந்து, கடல் இல்லாத பாதுகாப்புப் பிராந்தியமான கொங்கு நாட்டில் மறு...

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி