Tagமனிதர்கள்

ஆடு, பாம்பு, யானை மற்றும் எம்.ஜி.ஆர்.

சமீபத்தில் நான் வியந்து வாசித்த புத்தகம், சின்னப்பா தேவருடைய வாழ்க்கை வரலாறு. ஒரு திரைப்படத் தயாரிப்பாளர், பல்வேறு கலைஞர்கள், தொழில்நுட்ப வல்லுநர்களுடன் பழக வாய்த்தவர் வாழ்வில் அனுபவங்களுக்குப் பஞ்சம் இராது என்பது உண்மைதான். ஆனால் தேவருடைய அனுபவங்கள் சாதாரணமாக வேறு யாருக்கும் வாய்க்க முடியாதவை. அபாரமான கடவுள் பக்தி, கண்மூடித்தனமான பக்தி. [முருகனை மயிராண்டி என்றெல்லாம் கூப்பிடுகிறார். பயமாக...

நடிகர் விக்கிரமாதித்யன்

ஏவி.எம் கார்டனில் நான் கடவுள் கலைஞர்கள் குவிந்திருந்தார்கள். பத்திரிகையாளர் சந்திப்பு ஏதோ நடந்திருக்கும் போலிருக்கிறது. மேக்கப் இல்லாத பூஜாவும் வந்திருந்தார். படத்தில் நடித்த உடல் ஊனமுற்ற சிறுவர்களையும் பெரியவர்களையும் ஆங்காங்கே சிலர் தூக்கிக்கொண்டு நடந்துகொண்டிருந்தார்கள். அத்தனைபேர் முகத்திலும் மகிழ்ச்சி, பரவசம். படத்தில் நடித்ததற்கான ஊதியம் தாண்டி குழுவினர் வேறு ஏதோ செய்திருக்கிறார்கள் என்று...

ஒரு மாணவனின் புத்தகம்

* அகிராவுக்கு நான் அதிகமொன்றும் சொல்லித்தந்ததில்லை. அவன் என்னிடம் கற்றதெல்லாம் எப்படியெல்லாம் விதவிதமாகக் குடிக்கலாம் என்பதைத்தான். – யாமாசான் * உதவி இயக்குநர்கள் பயில்வதற்காகத் தன் படத்தையே நாசமாக்கலாம் என்று அவர் நினைத்தார். அவரையொத்த சிறந்த ஆசிரியர்கள் கிடைப்பது அரிது. – அகிரா குரோசாவா. கடந்த வார இறுதி தினங்களில் ஜப்பானிய [என்பது தவறு; உலக] திரைப்பட இயக்குநர் அகிரா குரோசாவாவின்...

பிறந்த ஊர்

  சோமங்கலம் என்கிற ஊரைப் பற்றி சிறு வயதிலிருந்து நான் நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன். சென்றதில்லை, பார்த்ததில்லை, அதற்கான சந்தர்ப்பங்கள் ஏதும் நேர்ந்ததில்லை. அந்த ஊரில் உத்தியோகம் பார்த்துக்கொண்டிருந்தபோதுதான் நான் பிறந்தேன் என்று என் அப்பா சொல்லியிருக்கிறார். சென்னை தாம்பரத்திலிருந்து சுமார் பதினைந்து கிலோ மீட்டர்கள் தொலைவில் இருக்கிற கிராமம் போன்ற ஊர். பிறந்த ஊர் என்று பெருமிதம் கொள்ள...

மீட்டர் போட்ட ஆட்டோ

  விடியும் பொழுதில் இன்று ஓர் அதிசயம். ஒரு காரியமாக கேகே நகருக்கு இரவு சென்றிருந்தேன். காலை ஆறுக்கு அங்கிருந்து புறப்பட்டு அலுவலகம் உள்ள ஆழ்வார்பேட்டைக்கு ஆட்டோ கூப்பிட்டு, ‘எவ்ளோ?’ என்று கேட்டேன். ‘மீட்டர் போடுறேன் சார்’ என்று பதில் வந்தது. ஒரு கணம் நம்பமுடியாமல் அவரைப் பார்த்தேன். சென்னை நகர ஆட்டோக்களில் மீட்டர் என்பது ஒரு செட் ப்ராபர்டி. யாரும் பொதுவில் அதனைப்...

கி.ரா.

சரியாக எட்டு வருடங்கள் ஆகின்றன, நான் அவரைச் சந்தித்து. நேற்று நேர்ந்தது. அதே புன்னகை. அதே அன்பான தோள் தட்டல். அதே நலன் விசாரிப்புப் பாணி. அதே ‘அழகிய’ சென்னைத் தமிழ். நல் ஊழ் மட்டுமே நல்ல ஆசிரியர்களை நமக்குக் கொண்டுவந்தளிக்கும். கி.ரா. என்கிற கி. ராஜேந்திரன் எனக்கு அம்மாதிரி. கார்ட்டூனிஸ்ட் மதியின் ‘அடடே’ புத்தக வெளியீட்டுக்கு அவரை அழைத்திருந்தோம். தம் மகளும் தற்போதைய கல்கி ஆசிரியருமான...

பார்த்தசாரதிகளின் கதை [பாகம்3]

குமுதத்தில்தான் அவர் எனக்கு அறிமுகமானார். அனுமார் குங்குமம் என்கிற ஆரஞ்சு நிற குங்குமப் பொட்டும் தலையில் கட்டிய கர்ச்சிப்பும் கையில் ஹெல்மெட்டுமாக அரக்கபரக்க அலுவலகத்துக்குள் நுழையும் பார்த்தசாரதி. அறிமுகப்படுத்தியபோது, டாட்காம் இவருடைய பொறுப்பில்தான் வருகிறது என்று சொன்னார்கள். குமுதம் அலுவலகத்தின் இரண்டாம் தளத்தில் ஓய்வு பெறவேண்டிய சில கிழவர்களை மட்டும் வேலைக்கு வைத்துக்கொண்டு ஒண்டியாளாக அந்தப்...

பார்த்தசாரதிகளின் கதை [பாகம்2]

குமுதம் பதிப்பாளர் அமரர் பார்த்தசாரதியுடன் எனக்கு நேரடி அனுபவங்கள் மிகவும் குறைவு. மூன்றாண்டுகள் அந்த நிறுவனத்தில் பணியாற்றினாலும் அவருடனான என்னுடைய நினைவுகள் சொற்பமானவை. ஆனால் மிகவும் முக்கியமானவை. நான் குமுதத்துக்குச் சென்ற காலத்தில் அவர் அநேகமாகத் தன்னுடைய பொறுப்புகளிலிருந்து மெல்ல மெல்ல விலகத் தொடங்கியிருந்தார். மாலைமதி  [மாத நாவல்]  மட்டும் அப்போதும் அவரது கட்டுப்பாட்டில்தான் இருந்தது...

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

Subscribe to News Letter


Exit mobile version