Tagகடவுள்

சர்வநாச பட்டன் – 2

அதிகாரம் 2: கடவுள் ஆத்திகனாக இருப்பதற்குக் கடவுள் நம்பிக்கை இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. ஒரு ஹவுஸிங் லோன் இருந்தால்கூடப் போதும். அடி பிடித்த தோசைக்கல்லையும் ஆண்டவனையும் விளக்க நினைப்பது நேர விரயம். அப்படியே தண்ணி தெளித்து சுரண்டிவிட்டு,  மாவை ஊற்ற வேண்டியதுதான். மருத்துவர்கள் தெய்வத்துக்குச் சமம். மெடிக்கல் இன்சூரன்ஸ், பெண் தெய்வத்துக்கே சமம். மெய் வருத்தாமல் கூலி தரும் ஒரு கடவுளைத்...

சுகம் பிரம்மாஸ்மி – 6

அரைகுறைப் படிப்பு, கலவையான ஆர்வங்கள், எதிலும் முழுத்தேர்ச்சி இன்மை, மிகவும் உணர்ச்சிவசப்படும் இயல்பு, கேளிக்கைகளில் மிகுவிருப்பம், வீட்டுக்கோ, நட்புகளுக்கோ, உறவுகளுக்கோ, எனக்கேகூட உபயோகமின்மை, நேர்மையின்மை, வசதிக்கு – தேவைக்கு ஏற்ப விதிமுறைகளை வளைக்கும் அல்லது ஒடிக்கும் இயல்பு, எதையாவது பெரிதாகச் செய்துவிடவேண்டுமென்கிற வெறி அல்லது வேட்கை, ஆனால் எதையும் செய்யத் துப்பில்லாத மொக்கை புத்தி...

சுகம் பிரம்மாஸ்மி – 5

நான் கடவுளை விட்டு வெகு தூரம் விலகி இருந்த நாள்கள் என்று யோசித்தால் அடையாறு செண்ட்ரல் பாலிடெக்னிக்கில் படித்த மூன்று வருடங்களைத்தான் சொல்லத் தோன்றுகிறது. படித்த என்றா சொன்னேன்? மன்னிக்கவும். இருந்த. இப்போது யோசித்துப் பார்த்தால் அன்றைய என்னுடைய அத்தனை பொறுக்கித்தனங்களுக்கும் அடிப்படைக் காரணம், படிப்பு வரவில்லையே என்கிற பயம்தான் என்று தோன்றுகிறது. பத்தாம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் தமிழ்...

சுகம் பிரம்மாஸ்மி – 4

என்ன காரணம் என்று இப்போது சரியாகச் சொல்லத் தெரியவில்லை. ஆனால் ராமகிருஷ்ண பரமஹம்சரைப் படித்ததிலிருந்து, சன்னியாசி ஆகிவிடவேண்டும் என்கிற எண்ணம் மிகத் தீவிரமாக ஏற்பட்டுவிட்டது. படிப்பில் எனக்கு நாட்டமில்லாமல் இருந்தது, என்னைவிட என்னுடைய தம்பிகள் கெட்டிக்காரர்களாக வளர்ந்துகொண்டிருந்தது, வாத்தியார் பிள்ளை மக்கு என்கிற பழமொழிக்குப் பொருத்தமானவனாக நான் என்னை வடிவமைத்துக்கொண்டது, சிறு பொறுக்கித்தனங்களில்...

சுகம் பிரம்மாஸ்மி – 3

நான் கடவுளைப் பார்த்தேன், உனக்கு அவனைக் காட்டுகிறேன். ராமகிருஷ்ண பரமஹம்சரின் இந்த confidence என்னை மிகவும் உலுக்கியது. நம்பமுடியாமல் திரும்பத் திரும்ப இந்த வரிகளைப் பல சமயம் வாசித்துக்கொண்டே இருந்தேன். இந்த வரிகளின் எளிமை, நேரடித் தன்மை, ஆறே சொற்களில் முந்தைய அனைத்து சொற்பிதங்களையும் பெருக்கித் தள்ளிவிடும் லாகவம், மேலான சிநேகபாவம் – எது என்று சொல்வதற்கில்லை. விவேகானந்தர் மூலம்தான் நான்...

சுகம் பிரம்மாஸ்மி – 2

அப்பா எனக்கு உபநயனம் செய்யவேண்டும் என்று சொல்லிக்கொண்டிருந்த நாள்களில் இனாயத்துல்லாவுக்கு அவன் வீட்டில் சுன்னத் கல்யாணம் செய்ய ஏற்பாடு செய்ய ஆரம்பித்தார்கள். சரியாக ஒரு மாதம். அவன் வீட்டில் விசேஷம் வந்துவிட்டது. எங்கள் வீட்டில் ஒரு மூன்று வருடங்கள் தள்ளிப்போட்டு, குரோம்பேட்டைக்குக் குடிவந்த பிறகுதான் அதைச் செய்தார்கள். இனாயத்துல்லா திகிலும் பரவசமுமாகத் தனக்கு நடக்கப்போகிற விஷயம் பற்றி என்னிடம்...

சுகம் பிரம்மாஸ்மி – 1

இது ஒரு வெகுநாள் திட்டம். எழுத நேரம் கூடாமல் தள்ளிப்போய்க்கொண்டே இருந்தது. கிட்டத்தட்ட ஒரு வருடத்துக்கு மேலாகவே சிந்தித்துக்கொண்டிருந்தேன். அவ்வப்போது பத்ரியிடம் மட்டும் பேசுவதுண்டு. எனக்கு மிகவும் நெருக்கமானவர்களாக நான் நினைப்பவர்களுள் முதன்மையான ஒருவரைப் பற்றி எழுதிப் பார்க்கவேண்டும். திரைகள், தடைகள் எதையும் அனுமதிக்காமல் மிகவும் நிர்வாணமாகச் சிந்தித்து, தோன்றியது தோன்றியபடி. இதில் என்...

என் மதம், என் கடவுள் : ஜடாயு கடிதத்தை முன்வைத்து.

என்னுடைய வாழ்வார்கள் கட்டுரைக்கு எதிர்வினையாக நண்பர் ஜடாயு ஒரு கடிதம் அனுப்பியிருந்தார். அவரது அனுமதியுடன் அதனைக் கீழே பிரசுரிக்கிறேன். கடிதத்துக்கு என்னுடைய பதில், அதற்குக் கீழே. அன்புள்ள பாரா, கிருஷ்ண ஜயந்தி பற்றி ரொம்ப ரசமாக எழுதியிருக்கிறீர்கள்.  படிக்க நன்றாக இருக்கிறது. கடைசியில் இப்படி சொல்கிறீர்கள்: எனக்கு மாவா மாதிரி பெரியாழ்வாருக்கு கிருஷ்ணன் இருந்திருக்கிறான். ஸோ, பெரியாஷ்வாருக்கு...

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி