Tagகல்கி

உறங்காத அலை

இந்தக் கதையை நான் இதுவரை சொன்னதில்லை. சொந்த சோகங்களைப் பொதுவில் வைக்கக்கூடாது என்ற கொள்கை காரணம். இப்போது ஏன் சொல்கிறேன் என்றால் இந்த சோகம் காலாவதியாகிவிட்டதனால்தான். நான் கல்கியில் வேலை பார்த்ததும் அங்கிருந்து குமுதம் சென்றதும் உங்களுக்குத் தெரியும். ஆனால் விலகிய சமயத்தில் உண்டான பிரச்னை மிகப் பெரிது. அந்த வயதின் அறியாமை, ஆத்திரம், விவரிக்க முடியாத கடுங்கோபம் எல்லாம் சேர்ந்து மூன்று மாத நோட்டீஸ்...

படித்தவன்

இன்று புத்தக தினம். நான் படித்த லட்சணத்தைச் சற்று நினைவுகூர்ந்து பார்த்தேன். பள்ளி, கல்லூரி நாள்களில் பாடப் புத்தகங்களை அவ்வளவாக விரும்பியதில்லை. வரலாறு, புவியியல் பிடிக்கும். ஆங்கிலத்தில் நான் – டீடெய்ல் புத்தகம் பிடிக்கும். தமிழ் பிடிக்காதா என்றால் பள்ளிக்கூடத் தமிழ்ப் புத்தகங்கள் அன்று எனக்குக் கொள்ளிவாய்ப் பிசாசுகளாகத்தான் தெரிந்தன. அது என்னால் விரும்ப முடியாத தமிழாக இருந்தது...

தகவல்களைப் பற்றிய ஒரு தகவல்

முன்னொரு காலத்தில் மனோரமா இயர்புக் வாங்குவதும் படிப்பதும் எனக்கு மிகுந்த விருப்பத்துக்குரிய செயலாக இருந்தது. எந்த அரசுத் தேர்வோ, வேலை வாய்ப்போ எனக்கு நோக்கமாக இருந்ததில்லை. அதற்குத்தான் அந்தப் புத்தகம் என்று எல்லோரும் சொல்வார்கள். ஆனால் என் பொது அறிவை விருத்தி செய்தே தீருவது என்ற வெறியுடன் வருடம்தோறும் வாங்கி வாசிப்பேன். ஒரு எழுநூறு எண்ணூறு பக்கப் புத்தகத்தை அப்படியே மனத்தில் ஏற்றிக்கொள்வது இயலாத...

மறக்க முடியாத ஒரு புத்தகம்

நினைவு சரியென்றால் 1989லிருந்து சென்னை புத்தகக் காட்சிக்குச் சென்றுகொண்டிருக்கிறேன். ஓராண்டு கூடத் தவறியதில்லை. அதற்கு முன்பும் சென்றிருப்பேன். அப்பாவோடு. அல்லது வேறு யாராவது அழைத்துச் சென்றிருந்தால் உடன் சென்றிருப்பேன். அது என் கடமை, என் தேவை, என் மகிழ்ச்சி, எனக்காக நான் செய்துகொள்வது என்று எண்ணிச் செய்யத் தொடங்கியது 1989லிருந்துதான். அன்று அண்ணாசாலை காயிதே மில்லத் மகளிர் கல்லூரி மைதானத்தில்...

அஞ்சலி: கடுகு (பி.எஸ். ரங்கநாதன்)

மே 2017ல் கடுகு சாரிடம் இருந்து எனக்கு ஒரு மின்னஞ்சல் வந்தது. அதில் இருந்த வரிகள்: //அன்புள்ள பா.ரா அவர்களுக்கு, வணக்கம். நலமாக இருக்கிறீகள் என்று நம்புகிறேன். இங்கு நியூ ஜெர்சியில் இருக்கிறோம். இத்துடன் உள்ள படம் சற்று வித்தியாசமான முறையில், கிட்டத்தட்ட 100 Step-பில் போட்டோஷாப்பில் உருவாக்கியது. MONEY STYLE etched graphics என்கிறார்கள். பல நாள் முயற்சி செய்து செய்து ஓரளவு தேறிவிட்டேன்...

ஆதியிலே நகரமும் நானும் இருந்தோம் – 30

நகரம் என்பது மண் அல்ல. நகரம் என்பது மனிதர்களும் அல்ல. நகரம் என்பது நினைவுகள். நகரம் அல்லாத பிராந்தியங்களில் வசிப்பவர்களுக்கு மண்ணும் மனிதர்களும் முக்கியமாகத் தெரிவார்கள். நகரவாசிகளுக்கு நினைவுகள் மட்டுமே நெடுந்துணை. ஏனெனில் இங்கே வந்து போகிறவர்கள் மிகுதி. நிலைத்திருப்போர் ஒப்பீட்டளவில் குறைவானவர்கள். மண்ணின் மக்கள் என்போர் அதனினும் குறைவு. ஒரு விதத்தில் நானும் வந்தேறி வம்சம்தான். என் தாத்தாக்கள்...

ஆதியிலே நகரமும் நானும் இருந்தோம் – 26

எண்பதுகளின் இறுதியிலும் தொண்ணூறுகளின் தொடக்கத்திலும்  சென்னையில் நான் கண்ட ஒரு காட்சி எக்காலத்திலும் தமிழகத்தின் வேறு எந்த ஊரிலும் நடந்திருக்க வாய்ப்பில்லை. சென்னையிலேயே கூட சமீப காலமாக இந்தக் கலாசாரம் அநேகமாக வழக்கொழிந்துவிட்டது என்று நினைக்கிறேன். அது, சினிமா வாய்ப்புக் கேட்டு கம்பெனிகளை முற்றுகையிடுவது. படம் எடுப்பவர்கள், முதலீடு செய்பவர்கள், நடிப்பவர்கள், மற்ற தொழில்நுட்ப வல்லுனர்களைப் போலவே...

கண்ணீரின் ருசி

அலை உறங்கும் கடல் நாவலை இன்று கிண்டில் மின் நூலாக வெளியிட்டிருக்கிறேன். இன்று வரை என்னைச் சந்திக்கும் வாசக நண்பர்களுள் பத்துக்கு நாலு பேராவது இதைப் பற்றிப் பேசாதிருந்ததில்லை. உமாவையும் அருள்தாஸையும் அற்புத மேரியையும் நீலுப்பாட்டியையும் சங்குக்கடை ராஜுவையும் தமது மனத்துக்கு நெருக்கமாக வைத்துப் பரவசத்துடன் என் கைகளைப் பிடித்துக்கொண்டு அவர்கள் மூச்சு விடாமல் பேசுகிற போதெல்லாம் எனக்குக் கண்ணீர்...

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி