Tagஜெயமோகன்

பகுதியளவு ஜெயமோகன்கள்

டிசம்பர் 16, 17 தேதிகளில் கோயமுத்தூரில் நடைபெற்ற விஷ்ணுபுரம் விருது விழாவில் கலந்துகொண்டு திரும்பினேன். தமிழின் முக்கியமான படைப்பு ஆளுமைகளுள் ஒருவரான யுவன் சந்திரசேகருக்கு இவ்வாண்டு விருது வழங்கப்பட்டது. இந்திய வரலாற்று ஆய்வாளர் ராமச்சந்திர குஹா, மலேசிய எழுத்தாளர் ஜாஹிர், எம். கோபாலகிருஷ்ணன், ஜெயமோகன் ஆகியோர் யுவனை வாழ்த்திப் பேசினார்கள். விழாவில் யுவனைக் குறித்த ஆவணப் படம் ஒன்று திரையிடப்பட்டது...

விஷ்ணுபுரம் விழா – அழைப்பிதழ்

இந்த ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருது யுவன் சந்திரசேகருக்கு வழங்கப்படுகிறது. விழா, வரும் டிசம்பர் 16-17 தேதிகளில் கோவையில் நடக்கிறது. நிகழ்ச்சியில் வரலாற்றறிஞர் ராமச்சந்திர குஹா, மலேசிய எழுத்தாளர் சையத் மொஹம்மத் ஷாகிர், எம். கோபாலகிருஷ்ணன், பாலாஜி பிருத்விராஜ் இவர்களுடன் ஜெயமோகனும் யுவனை வாழ்த்திப் பேச இருக்கிறார். ஆண்டுதோறும் இவ்விழாவில் நடைபெறும் எழுத்தாளர்-வாசகர் சந்திப்பு நிகழ்ச்சிகள்...

விஷ்ணுபுரம் விருது விழா

இந்த ஆண்டு விஷ்ணுபுரம் விருது எழுத்தாளர் யுவன் சந்திரசேகருக்கு வழங்கப்படுகிறது. நம் காலத்தின் மிகச் சிறந்த படைப்பாளுமைகளுள் ஒருவரான யுவனுக்குச் சேரும் இக்கௌரவம், இலக்கிய வாசகர்கள் அனைவருக்கும் மிகுந்த மகிழ்ச்சி தருவது. விஷ்ணுபுரம் விருது விழா டிசம்பர் 16-17 தேதிகளில் கோயமுத்தூரில் நடைபெற இருக்கிறது. இவ்வாண்டு நடைபெறும் எழுத்தாளர் சந்திப்பு நிகழ்ச்சிகளுள் ஒன்றனில் நான் பங்குபெறுகிறேன். இது...

ஒரு சிறிய சமூகத்தின் புனைபெயர்

தமிழ்ச் சூழலில் ஒரு சராசரி மனிதன் அறுபதாண்டுகள் நலமாக வாழ்வதற்கும் ஓர் எழுத்தாளன் வாழ்வதற்கும் வித்தியாசங்கள் உண்டு. அவன் ஆசீர்வதிக்கப்பட்டிருந்தாலொழிய அந்தக் காலப் பரப்பைப் பெரிய சிக்கல்களின்றிக் கடப்பது சிரமம். ஜெயமோகன், சிக்கலின்றிக் கடந்தார் என்று சொல்ல முடியாது. அவருக்குப் பத்தாண்டுகள் சிறியவன் என்ற அளவிலேயே, அவர் மீது திணிக்கப்பட்ட குற்றச்சாட்டுகள், அக்கப்போர்கள், திரிபுகள், காழ்ப்புகள்...

ஒரு சமர்ப்பணப் பிரச்னை

ஜெயமோகனின் ஒவ்வொரு புதிய புத்தகம் வெளிவரும்போதும் அதை அவர் யாருக்கு சமர்ப்பணம் செய்திருக்கிறார் என்று முதலில் பார்ப்பேன். நூற்றுக் கணக்கான புத்தகங்களை அவர் எழுதிக்கொண்டே இருப்பதில் எனக்கு வியப்பில்லை. ஒரு ஸ்திதப்ரக்ஞன் என்ன செய்வானோ அதைத்தான் அவர் செய்கிறார். ஆனால் ஒவ்வொரு புத்தகத்தையும் சமர்ப்பணம் செய்ய அவருக்கு எப்படியோ யாரோ ஒருவர் இருந்துவிடுகிறார். சில வருடங்களுக்கு முன்புவரை என். சொக்கன்...

யதி – ஒரு மதிப்புரை (அபிலாஷ் சந்திரன்)

பா.ராவின் ஆயிரம் பக்க “யதி” நாவலை இன்று தான் படித்து முடித்தேன். படிக்க சிரமமான நாவல் ஒன்றுமல்ல. தொடர்ந்து படித்தால் நான்கைந்து நாட்களில் யாராலும் படித்து முடிக்க முடியும். நான் புத்தகத்தை வாங்கிய நாள் இரவில் முதல் 90 பக்கங்களை படித்து ஒரு வாரம் கழித்து மீண்டும் படித்து விட்டு விட்டு படித்தேன். எந்த கட்டத்திலும் அலுப்பூட்டவில்லை என்பதைக் குறிப்பிட வேண்டும் – அதற்கு காரணம் பா.ரா கதையை...

விழித்திருப்பவன்

பாரிஸ் ரெவ்யுவின் ஆர்ட் ஆஃப் ஃபிக்‌ஷன் பகுதியில் இடாலோ கால்வினோவின் நேர்காணலைப் படித்துக்கொண்டிருந்தேன். தன்னால் காலை நேரங்களில் எழுத முடிவதில்லை என்றும் பெரும்பாலும் மதியத்தில்தான் எழுதுவதாகவும் அவர் சொல்லியிருக்கிறார். வினோதமான பிரகஸ்பதி. நமக்கெல்லாம் மதியம் என்பது நள்ளிரவு. என்ன செய்ய. பழகிவிட்டது. ஆனால் இரவில் நெடுநேரம் கண் விழிப்பது தவறு என்று பொதுவாக அனைத்து மருத்துவர்களும் சொல்கிறார்கள்...

வக்கும் வாக்கும்

அன்பின் பாரா, நீங்கள் ஏன் ஒரு கட்சி ஆரம்பித்து தேர்தலில் நிற்கக்கூடாது? நேற்று ஒரு வாசகர் மெசஞ்சரில் இதனைக் கேட்டார். நடிகர்கள் எல்லாம் கட்சி ஆரம்பித்து தேர்தலில் நிற்கும்போது எழுத்தாளர்கள் செய்யக்கூடாதா? தாராளமாகச் செய்யலாம். ஆனால் அதற்கெல்லாம் ஒரு வக்கு வேண்டும். இதுவே ஜெயமோகனைச் சொல்கிறீர்களா? நியாயம். மய்யத்தைவிட அதிகமான தொண்டர் பலம் கொண்டவர் அவர். கொரோனா கஷ்ட காலத்தில் விஷ்ணுபுரம் வாசகர்...

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி