Tagபண்டிகை

ஒரு நாள், ஒரு பண்டிகை

நண்பர்கள் அனைவருக்கும் சரஸ்வதி பூஜை வாழ்த்துகள். ஓர் இறை நம்பிக்கையாளனாக, செயல்கள் அனைத்தையும் என்னால் அறிய முடியாத ஒரு பெரும் சக்தி கண்காணித்துக்கொண்டிருப்பதாகவே எப்போதும் நினைப்பேன். தெரியாமல் எந்தத் தவறும் செய்வதில்லை. தெரிந்து செய்யும் தருணங்கள் வராதிருந்ததில்லை. தவறிழைக்கும்போதும் மனத்துக்குள் என் கடவுளுக்குத் தெரிவித்துவிட்டுத்தான் ஆரம்பிக்கிறேன். மன்னித்துவிடு என்று கேளாமல் இருப்பதில்லை...

சில குறிப்புகள் – விடுபட்டவை

முதல்முறையாக இம்முறை நகர தீபாவளி. போக்குவரத்து நிறைய உள்ள சாலைகளில்கூட சகட்டு மேனிக்கு வெடி வைக்கும் மக்கள் மிகுந்த அச்சம் தந்தார்கள். காலை எட்டு மணி சுமாருக்கு மாவா வாங்க வண்டி எடுத்துக்கொண்டு கிளம்பி, நான்கு இடங்களில் தடுமாறி விழப்போகுமளவுக்கு இன்னும் மக்களின் வெடி விருப்பம் தீரவில்லை. குறிப்பாக இளம் பெண்கள். வாழ்க. சன் டிவியில் அப்துல் கலாமை விவேக் பேட்டி கண்டதைப் பார்த்தேன். கலாமிடம் மக்கள்...

வாழ்வார்கள்

விக்கிரகத்தில்தான் கடவுள் இருக்கிறார் என்றெல்லாம் நம்பி, கைகூப்பித் தொழும் பருவம் கடந்தபின்னும் சில பாலிய வழக்கங்கள் இன்னும் தொடர்கின்றன. கிருஷ்ண ஜெயந்தி அதிலொன்று. எங்கள் வீட்டு கிருஷ்ண ஜெயந்தி மிகவும் விசேஷமானது. அன்றைக்கு அம்மா சாப்பிடமாட்டாள். காலை முதல் கிருஷ்ண ஸ்மரணை. கிருஷ்ணரை நினைத்தபடி கைமுறுக்கு, வெல்லச் சீடை, உப்புச் சீடை, தட்டை, வாழைப்பழம் போட்ட அப்பம் என்று ஆரம்பித்து ஒரு மெனு கார்ட்...

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி