Tagமறு பதிப்பு

கலவர காலக் குறிப்புகள் – மறு பதிப்பு

  என்னுடைய அரசியல் புத்தகங்களில் தனிப்பட்ட முறையில் எனக்கு மிகவும் பிடித்த புத்தகம் இதுதான். இரண்டு காரணங்கள். அதிகம் பரிச்சயமில்லாத தேசங்களின் அரசியலை / பெரும் பிரச்னைகளை மிகக் குறைவான சொற்களில் புரிய வைக்க வேண்டும் என்று எனக்கு நானே விதித்துக்கொண்டு, எந்தக் கட்டுரையும் 500 சொற்களுக்கு மிகாதவாறு பார்த்துக்கொண்டேன். சுருக்கம் தருகிற வேகத்துக்கு நிகரே கிடையாது. இரண்டாவது காரணம், இந்தப்...

தீவிரவாதியாக வாழ்வது எப்படி?

மாயவலை மொத்தம் 1300 பக்கங்கள். ஆறு வருடங்கள் வேலை செய்தேன். ஒரு நாள்கூட இடைவெளி இல்லாமல் இரண்டு வருடங்கள் எழுதினேன். இதெல்லாம் பெரிய விஷயமே இல்லை. அந்தப் புத்தகத்தை எழுதிக்கொண்டிருந்த காலத்தில் தீவிரவாத இயக்கங்களின் ட்விட்டர் கணக்குகளுக்குள் நுழைந்து, அதில் தொடர்புடைய நபர்களின் சொந்தப் பக்கங்களை தேடி ஃபாலோ செய்தது என்னைப் பொறுத்தவரை பெரிய சாகசம். அன்று இது அவ்வளவு எளிய காரியமல்ல. எப்படி என்று...

புதிய மறுபதிப்புகள் – அறிவிப்பு

கடந்த ஜனவரியில் என்னுடைய 15 புத்தகங்களின் புதிய மறு பதிப்பு ஜீரோ டிகிரி பப்ளிஷிங் மூலமாக வெளிவந்தது. அதன் பிறகு ஆளாளுக்கு கோவிட் வந்து ஆளுக்கொரு மாதம் அஞ்ஞாத வாசம் சென்றுவிட்டபடியால் வேலை சிறிது சுணக்கம் கண்டது. என்ன ஆனாலும் பூமி சுழலாதிருப்பதில்லை. இதோ மீண்டும் ஆரம்பித்துவிட்டோம். இன்னொரு பதினைந்து புத்தகங்களின் புதிய மறு பதிப்புக்கான அறிவிப்பும் முன் பதிவுச் சலுகை விலைகளும் வெளியாகியிருக்கின்றன...

இந்தப் புத்தகம் ஏன் கிடைப்பதில்லை?

ஒவ்வொரு எழுத்தாளனுக்கும் இருக்கக்கூடிய ஆகப் பெரிய ஆசை என்று எதைக் கருதுவீர்கள்? பெயர், புகழ், பிரபலம், ஊருக்கு நூறு ரசிகர்கள், வீதிக்கொரு சிநேகிதி, விழா எடுக்க ஒரு கூட்டம், போஸ்டரில் போட்டோ, ஏமாற்றாத ராயல்டி, அவ்வப்போது ஒரு விருது – இதில் ஒன்றா? நிச்சயமாக இல்லை. தான் ஒரு எழுத்தாளர் மட்டுமே என்று உணரும் யாரானாலும் அவன் அல்லது அவள் மனத்தில் எப்போதும் ஈரப்பதம் குறையாதிருக்கும் ஒரே பெரிய இச்சை...

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி