Tagவீட்டோடு மாப்பிள்ளை

இந்த வருடம் ஏன் எதுவும் செய்யவில்லை?

ஆண்டுக்கு ஒரு நாவல், ஒரு பெரிய கேன்வாஸ் நான் ஃபிக்‌ஷன் என்பது என் ஒழுங்கீனங்களில் இருந்து என்னைக் காப்பாற்றிக்கொள்வதற்காக நானே ஏற்படுத்திக்கொண்ட வழக்கம். சென்ற ஆண்டு அப்படியொன்றும் ஒழுங்கீனம் பொங்கிப் பெருகவில்லை ஆயினும் நாவலை முடிக்க முடியவில்லை. காரணம், வகுப்புகள்-மெட்ராஸ் பேப்பர்-புதிய எழுத்தாளர்களின் புத்தக முயற்சிகள். மாயவலை சீரிஸில் மிச்சமிருந்த புத்தகங்களின் மறு பதிப்புகளைக் கொண்டு வந்தேன்...

ஒரு A1B Positive சரித்திரம்

இரண்டாயிரத்து நான்காம் ஆண்டு மத்தியில் முதல் முதலில் தொலைக்காட்சித் தொடருக்கு எழுத ஆரம்பித்தேன். இரண்டாயிரத்து இருபது வரை இடைவெளியின்றி எழுதிக்கொண்டிருந்தேன். கிழக்கில் வேலை பார்த்துக்கொண்டிருந்தபோது மாலைப் பொழுதுகளுக்கு மட்டும் அந்த எழுத்து என்று இருந்தது. முழு நேரமான பின்பு இரவுகளில் மட்டும் இதர வேலைகளுக்கு வாய்ப்பு என்றானது. கசப்புக்கோ இனிப்புக்கோ அங்கே ஒன்றுமில்லை. அது ஒரு பணி. என் தனிப்பட்ட...

புதிய புத்தகங்கள்

இந்த ஆண்டு மூன்று புதிய புத்தகங்கள் வெளியாகியிருக்கின்றன. ஒன்று, உக்ரையீனா. மெட்ராஸ் பேப்பர் வார இதழில் வெளிவந்த உக்ரைனின் அரசியல் வரலாற்றுத் தொடர். அடுத்தது, தொடு வர்மம். குறுங்கட்டுரைகளின் தொகுப்பு. மூன்றாவது, வீட்டோடு மாப்பிள்ளை. உயிர்மை மாத இதழில் எழுதிய நகைச்சுவைப் புனைவு. உண்மையில், இந்த ஆண்டு நான் வைத்திருந்த திட்டங்கள் வேறு. மெட்ராஸ் பேப்பர் ஆரம்பித்ததில் இருந்து அனைத்துத் திட்டங்களையும்...

இந்த வருடம் என்ன செய்தேன்? – 2021

  இவ்வளவு விரைவாக நகர்ந்தோடிய வருடத்தை இதற்கு முன் கண்டதில்லை. இத்தனைக்கும் வருடம் முழுதும் வீட்டிலேயேதான் இருந்திருக்கிறேன். எந்த வெளியூர்ப் பயணமும் இல்லை. வாழ்வில் பெரிய மாற்றங்கள், திருப்பங்கள் ஏதும் ஏற்படவில்லை. குருப் பெயர்ச்சி அதைச் செய்யும், சனிப் பெயர்ச்சி இதைச் செய்யும் என்று சோதிட மாமணிகள் சொன்ன எதுவும் நடக்கவில்லை. வழக்கமான செயல்பாடுகள், அதே படிப்பு, அதே எழுத்து. ஆனாலும்...

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி