புனைவு எழுத்துப் பயிலரங்கம்

தக்‌ஷிணசித்ரா நிர்வாகத்தினர் நடத்தும் *Langfest2021* இன் ஒரு பகுதியாக, புதிதாகக் கதை எழுத வருவோருக்கு உதவும்படியாக ஒரு பயிலரங்கம் நடத்தித் தரக் கேட்டார்கள். மன்மதக் கலையெல்லாம் சொல்லிக் கொடுத்து வருவதா? ஆனால் தூண்டிவிட முடிகிறதா பார்க்கலாம். ஜனவரி 30ம் தேதி சனிக்கிழமை காலை 10.30 முதல் 12.30 வரை (9-10.30தான் ராகுகாலம்) zoomல் இது நடக்கிறது.… Read More »புனைவு எழுத்துப் பயிலரங்கம்

குழுவில் விழுதல்

வாழ்வு தொடங்கி வாட்சப் வரை பரவலாகச்  சில குழுக்களில் உறுப்பினராக இருக்கிறேன். இந்தக் குழு அமைப்பு என்பது மனித வாழ்வில் தவிர்க்க முடியாதது போல. பிரச்னை இல்லை. நான் குழுவில் இருக்க வேண்டும் என்று யாராவது நினைக்கிறார்கள். வேறு யாராவது சேர்க்கிறார்கள். எனவே, இருக்கும்படி ஆகிவிடுகிறது. ஆனால் எந்தக் குழுவிலும் நடவடிக்கைகளில் பங்களித்த நினைவில்லை. ஒரு… Read More »குழுவில் விழுதல்

தகவல்களைப் பற்றிய ஒரு தகவல்

முன்னொரு காலத்தில் மனோரமா இயர்புக் வாங்குவதும் படிப்பதும் எனக்கு மிகுந்த விருப்பத்துக்குரிய செயலாக இருந்தது. எந்த அரசுத் தேர்வோ, வேலை வாய்ப்போ எனக்கு நோக்கமாக இருந்ததில்லை. அதற்குத்தான் அந்தப் புத்தகம் என்று எல்லோரும் சொல்வார்கள். ஆனால் என் பொது அறிவை விருத்தி செய்தே தீருவது என்ற வெறியுடன் வருடம்தோறும் வாங்கி வாசிப்பேன். ஒரு எழுநூறு எண்ணூறு… Read More »தகவல்களைப் பற்றிய ஒரு தகவல்

மறக்க முடியாத ஒரு புத்தகம்

நினைவு சரியென்றால் 1989லிருந்து சென்னை புத்தகக் காட்சிக்குச் சென்றுகொண்டிருக்கிறேன். ஓராண்டு கூடத் தவறியதில்லை. அதற்கு முன்பும் சென்றிருப்பேன். அப்பாவோடு. அல்லது வேறு யாராவது அழைத்துச் சென்றிருந்தால் உடன் சென்றிருப்பேன். அது என் கடமை, என் தேவை, என் மகிழ்ச்சி, எனக்காக நான் செய்துகொள்வது என்று எண்ணிச் செய்யத் தொடங்கியது 1989லிருந்துதான். அன்று அண்ணாசாலை காயிதே மில்லத்… Read More »மறக்க முடியாத ஒரு புத்தகம்

எழுபதில் ஒன்று

சரித்திரம் தூக்கிக் கொஞ்சுகிறதோ, போட்டு மிதிக்கிறதோ. பெற்ற தாய் தனது பிள்ளைகளை கவனிக்காமலா இருப்பாள்? காந்தாரியைக் குறித்து யோசித்துக்கொண்டிருந்தேன். துர்சலை என்ற ஒரு பெண் குழந்தை உள்பட அவளுக்கு நூற்று ஒரு குழந்தைகள். அத்தனைப் பேரின் பெயர்களையும் அவள் எப்போதும் நினைவில் வைத்திருந்திருப்பாள். தனித்தனியே கூப்பிட்டு சாப்பிட்டாயா, குளித்தாயா, சண்டை போடாதே, உட்கார்ந்து படி என்று… Read More »எழுபதில் ஒன்று