Categoryபுத்தகம்

விமலாதித்த மாமல்லன் புத்தகங்கள் – மாணவர் சலுகை அறிவிப்பு

இலக்கியத்தில் ஆர்வமுள்ள / புத்தகம் வாங்க வசதியற்ற மாணவ மாணவியர் (அல்லது அவர்கள் சார்பாக அவர்தம் பெற்றோர்) மாமல்லனை வாட்சப்பில் தொடர்புகொண்டால் போதும்.

இந்த வருடம் இரண்டு புத்தகங்கள்

2023 ஆம் ஆண்டுக்கென ஐந்து திட்டங்களை வகுத்திருந்தேன். மார்ச் தொடங்கி அக்டோபருக்குள் நிறைவு செய்துவிட வசதியாக அன்றாடம் என்னென்ன / எவ்வளவு எழுத வேண்டும், எப்போது என்னென்ன படிக்க வேண்டும் என்றெல்லாம் மிகவும் கவனமாகக் கணக்கிட்டு திட்ட கமிஷன் துணைத் தலைவரைப் போலச் செயல்பட்டேன். இயல்பாகவே ரிஷப ராசி என்பதனாலா, சனிதசை கேது புக்தி என்கிற தனிச் சிறப்புக் காரணத்தாலா என்று தெரியவில்லை. நான் போட்ட ஐந்து...

யுத்த காண்டம்

வினுலா என்னிடம் எழுதக் கற்றுக்கொள்வதற்காக வந்தார். வகுப்புக் காலத்தில் அவர் எதையும் பேசிக் கேட்டதில்லை. ஒன்றிரண்டு அசைன்மெண்டுகளைத் திருப்தியாகச் செய்ததால் மெட்ராஸ் பேப்பரில் எழுதச் சொன்னேன். ஒன்றிரண்டுதான் அதிலும் எழுதியிருப்பார். அந்தச் சமயத்தில் உக்ரைன் மீதான ரஷ்யப் படையெடுப்பு தொடங்கியது. மற்ற அனைத்தையும் மறந்து, அதைக் கவனிக்கச் சொல்லிவிட்டு வேறு வேலைகளில் மூழ்கிவிட்டேன். ஒரு சரியான...

நுட்பம்

மெட்ராஸ் பேப்பரில் இதனை முதலில் ஒரு கேடகரி தலைப்பாகத்தான் வைத்தேன். எந்த நுட்பமும் எளியோருக்கானதே என்கிற என் நிலைபாட்டிலிருந்து சற்றும் விலகாமல் வெங்கட் இந்தப் பகுதியில் எழுத ஆரம்பித்த சில வாரங்களிலேயே இந்தத் தலைப்பு அவரது கட்டுரைகளின் அடையாளமாகிப் போனது. மொபைல் போனும் கம்ப்யூட்டரும்தான் சப்ஜெக்ட். இதில் கம்ப்யூட்டரை அறியாத சிலர் இருக்கலாம். ஆனால் மொபைல் இல்லாதவர்கள் யாருமில்லை என்ற நிலை...

நல்லவனுக்கு எதற்கு இன்காக்னிடோ?

என்னுடைய எழுத்து வகுப்புகளுக்கு வருவோரில் சிலர் வரும்போதே அடிப்படை எழுத்துத் திறமையுடன் வருவார்கள். மிகச் சிறிய பிசிறுகளை மட்டும் சரி செய்தால் போதும் என்று தோன்றும். மிகச் சிலருக்கு அதுவும்கூட அவசியமாக இராது. பள்ளி நாள்களில் ஒழுங்காக இலக்கணம் கற்று , நிறைய புத்தகங்களும் படித்து, இங்கொன்றும் அங்கொன்றுமாக எழுதிப் பார்த்து, தனக்கு எவ்வளவு எழுத வருகிறது, இன்னும் என்ன வேண்டும் என்ற தெளிவான இலக்குடன்...

கடவுளுக்குப் பிடித்த தொழில்

ஜனவரி புத்தகக் காட்சிக்கு இம்முறை மெட்ராஸ் பேப்பர் சார்பில் எட்டு புதிய புத்தகங்கள் வெளியாகின்றன. இந்த நூல்களை ஜீரோ டிகிரி பப்ளிஷிங் நமக்காக வெளியிடுகிறது. ராம்ஜிக்கும் காயத்ரிக்கும் மெட்ராஸ் பேப்பர் சார்பில் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இந்தப் புத்தகங்களை ஓரிரு வரிகளில் இங்கே தொடர்ந்து அறிமுகப்படுத்தலாம் என்று நினைக்கிறேன். ஆர்வமுள்ளோருக்கு உதவலாம் அல்லவா? 1. கடவுளுக்குப் பிடித்த தொழில் /...

பல்சரும் பால கணேஷும்

பால கணேஷ் என் நண்பர் என்பது இந்தப் பக்கத்தைப் பின் தொடரும் அத்தனை பேருக்கும் அநேகமாகத் தெரிந்திருக்கும். உடனடி நகைச்சுவைக்கு, சீண்டலுக்கு, கிண்டலுக்கு, உதாரணத்துக்கு – யோசிக்காமல், போன் செய்து ஒப்புதல் கேட்காமல் நம்மால் யார் பெயரைப் பயன்படுத்த முடியுமோ, அவரைத்தான் நண்பர் என்று சொல்ல முடியும். அவர் எனக்கு அந்த ரகம். பெரிய படிப்பாளி. நல்ல, வெகுஜன நகைச்சுவை எழுத்தாளர். கொஞ்சம் தீவிரம்...

கணை ஏவு காலம் – புத்தக முகப்பு

கணை ஏவு காலம் புத்தகமாக வெளிவருகிறது. தொடராக வெளியிட்ட இந்து தமிழ் திசையே புத்தகத்தையும் வெளியிடுகிறது. ஜனவரி 3ம் தேதி தொடங்கவிருக்கும் சென்னை புத்தகக் காட்சியில் இந்நூல் வெளியாகும். விலை ரூ. 230. நூலின் அட்டைப்படத்தினை இன்று இந்து தமிழ் திசையின் ஆசிரியர் கே. அசோகன் வெளியிட்டார். இன்றுவரை கனவாகவே தொடர்ந்துகொண்டிருக்கும் சுதந்தர பாலஸ்தீன் என்கிற கருத்தாக்கம் தெள்ளத் தெளிவாக வெளிப்படும் விதத்தில்...

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி