Categoryபுத்தகம்

புனைவு என்னும் புதிர் – புதிய தொகுப்புகள்

விமலாதித்த மாமல்லன் மெட்ராஸ் பேப்பரில் எழுதிய புனைவு என்னும் புதிர் இரு தொகுதிகளாக வெளிவர இருக்கிறது. முதல் தொகுப்பு, ஆர். சிவகுமார் மொழிபெயர்ப்பில் வெளிவந்த உலகச் சிறுகதைகளும் அவற்றின் நுட்பங்களைப் பேசும் கட்டுரைகளும் அடங்கியது. இரண்டாவது தொகுப்பும் உலகச் சிறுகதைகளின் மொழிபெயர்ப்பும் நுட்பம் பேசும் கட்டுரைகளும்தான். ஆனால் ஆர். சிவகுமார் நீங்கலான பிறர் மொழிபெயர்த்த கதைகள் அடங்கியது. நிகரற்ற உலக...

உன்னை யாரும் அணைத்துக்கொள்ளவில்லையா?

நண்பர் மனுஷ்யபுத்திரனின் 50வது கவிதைத் தொகுப்பு ‘உன்னை யாரும் அணைத்துக்கொள்ளவில்லையா?’ சென்னை புத்தகக் காட்சி 2024 இல் வெளியாகிறது. மனுஷுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். மனுஷ்யபுத்திரனைத் திட்டுவது, இழிவு செய்வதாக எண்ணிக்கொண்டு அவர் எழுதுபவை கவிதையே இல்லை என்பது, அவரைக் குறித்துத் தப்பித்தவறி நல்ல விதமாக இரண்டு வரி யாராவது எழுதிவிட்டால், கர்ம சிரத்தையாக அங்கே சென்று காறித் துப்புவது போல ஒரு...

மெட்ராஸ் பேப்பரின் புதிய புத்தகங்கள்

விளையாட்டுப் போல இது இரண்டாவது வருடம். மெட்ராஸ் பேப்பர் சார்பில் இந்த வருடம் எட்டு புத்தகங்கள் வெளியாகின்றன. சென்ற ஆண்டு மெட்ராஸ் பேப்பர் அறிமுகம் செய்த பன்னிரண்டு எழுத்தாளர்களின் பதிமூன்று நூல்களை வெளியிட்ட ஜீரோ டிகிரி, இவ்வாண்டு ஏழு எழுத்தாளர்களின் எட்டு நூல்களை வெளியிடுகிறது. ராஜிக் இப்ராஹிம், ந. ஜெயரூபலிங்கம், தி.ந.ச. வெங்கடரங்கன், கோகிலா, கே.எஸ். குப்புசாமி, வினுலா, ரும்மான் –...

எஸ்ராவின் புத்தகங்கள்

மழையால் புத்தகங்கள் பாழானது குறித்து எஸ். ராமகிருஷ்ணன் எழுதியதைப் படித்தேன். அந்த வலி புரிய வேண்டுமானால் அவர் வந்த வழி தெரிந்திருக்க வேண்டும். எஸ்ரா தொடக்கம் முதலே எந்தக் குழுவுடனும் இணையாதவர். தனக்கென எந்தக் குழுவையும் வைத்துக்கொள்ளாதவர். அதாவது, அவருக்கு இதுவரை கிடைத்த அனைத்தும் அவரது சொந்த முயற்சியால் மட்டுமே கிடைத்தவை. தன்னையும் தன் எழுத்தையும் மட்டுமே நம்பித் தமிழிலும் பிழைத்திருக்க முடியும்...

நிலமெல்லாம் ரத்தம் – கார்ல் மார்க்ஸ் கணபதி

பா. ராகவன் எழுதியிருக்கும் “நிலமெல்லாம் ரத்தம்” எனும் நூல், இஸ்ரேல் பாலஸ்தீன் விவகாரம் குறித்து தமிழில் வந்திருக்கும் மிக முக்கியமான நூல். இப்போது உச்சத்துக்கு வந்திருக்கும் இஸ்ரேல் – பாலஸ்தீனிய விவகாரம் பற்றி மேலும் தெரிந்துகொள்வதற்காக படிக்கையில் இந்நூல் ஜெயமோகன் தளத்தின் வழியாக என் கவனத்துக்கு வந்தது. பா. ராகவனின் மொழி நடை குறித்து சொல்ல வேண்டியதில்லை. எல்லா வாசகர்களுக்குமான...

மணிப்பூர் கலவரம்: ஒரு பார்வை – சுனிதா கணேஷ்குமார்

சமீபத்தில் மணிப்பூரில் நடந்த இனக் கலவரத்தைப் பற்றிய ஒரு தெளிவான பார்வையை வாசகர்கள் புரிந்து கொள்வதற்காகப் படைக்கப்பட்ட, மணிப்பூரின் வரலாற்று படைப்பாகவே இருக்கிறது இந்த நூல்.. இனக்கலவரம் என்ற பெயரின் பின்னால் நடக்கும் அரசியலின் இருண்ட பக்கங்களை மிகத் தெளிவாக விளக்குகிறது.. மணிப்பூர் மாநிலத்தில் மலைத்தொடர்களில் வசிக்கும் பழங்குடி இனமக்கள் குக்கிகள், நாகாக்கள் மற்றும் சில பழங்குடி இனமக்கள்...

மாலனின் ‘தோழி’ நாவல்

வாழ்வில் நாம் மிகவும் எதிர்பார்த்து ஏமாந்த சில சந்தர்ப்பங்கள் இருக்கும். எவ்வளவு காலமானாலும் அது மறக்காது. முதலில் ஏமாந்து, பிறகு அது கிடைத்துவிட்டாலுமே ஏமாந்த தருணம் நினைவில் எங்காவது உட்கார்ந்திருக்கும். எனக்கு அப்படிச் சில உண்டு. சுமார் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு பெரிய பத்திரிகையில் விளம்பரம் ஒன்று வந்தது. ஒரு தொடருக்கான விளம்பரம். மாலன் எழுதுகிறார் என்றிருந்தது. இரண்டே சொற்களைக்...

ஆட்டோகிராஃப்

பொதுவாக எழுத்தாளர்களுக்குக் கிளுகிளுப்பு தரக்கூடிய சில விஷயங்களுள் ஒன்று, புத்தகங்களில் கையெழுத்திடுவது.  எழுதத் தொடங்கி, பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு எனக்கு அந்த மகிழ்ச்சி அருளப்பட்டது. மறக்கவே முடியாது. 2005 சென்னை புத்தகக் காட்சியில் டாலர் தேசம் வெளியாகியிருந்த நேரம். ஒவ்வொரு நாளும் குறைந்தது இருபது முதல் நாற்பது கையெழுத்துகள் போடுவேன். அவ்வளவு பேர் நம்மை விரும்புகிறார்கள், நம் எழுத்தை...

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி