Search results forயதி

யதி: இருபது பார்வைகள்

நண்பர்களுக்கு வணக்கம். யதி வெளியானபோது அதற்கு மதிப்புரை எழுதிய இருபது வாசகர்களின் கட்டுரைகள் தொகுக்கப்பட்டு மின்நூலாக வெளியிடப்படும் என்று அறிவித்திருந்தேன். விலையற்ற மின்நூலாக வெளியிட வழியுண்டா என்று போராடிப் பார்த்ததிலேயே நாள்கள் ஓடிவிட்டன. இன்றுவரை அதற்கான வாய்ப்பு டைரக்ட் பப்ளிஷிங் முறையில் வெளியிடுவதில் இல்லை. இப்படி வெளியிடுவதைத் தவிர எழுத்தாளர்களுக்கு இங்கு வேறு வழியும் இல்லை...

கிண்டிலில் யதி

கிண்டில் பதிப்புகள் திருட்டுக்கு உட்படாது என்று சொல்லப்பட்டது. அது இல்லை என்று சில தொழில்நுட்பத் திருடர்கள் நிரூபித்ததைச் சமீபத்தில் கண்டறிந்தேன். கணி யுகத்தில் சாத்தியமில்லாதது ஒன்றுமில்லை என்பதை அறிவேன். இருப்பினும் உயிரைக் கொடுத்து எழுதிய ஒரு பிரதியை சர்வ சுலபமாகக் கள்வர்கள் கொண்டு செல்ல எடுத்து வெளியே வைக்க விருப்பமில்லை. என்னால் முடிந்த மிக எளிய சில பாதுகாப்பு ஏற்பாடுகளை மட்டும் செய்து...

யதி வெளியீடு

புத்தகக் கண்காட்சியின் தொடக்க நாளான இன்று, யதி வெளியிடப்பட்டது. நண்பர் எஸ்.ரா. சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பினாக்கிள் புக்ஸின் முதன்மை நிர்வாகி ஆர்விஎஸ்ஸிடம் இருந்து முதல் பிரதியைப் பெற்றுக்கொண்டு வாழ்த்துரை வழங்கினார். எனக்காக வருகை தந்த எழுத்தாளர்கள் லஷ்மி சரவணகுமார், வாசு முருகவேல், காஞ்சி ரகுராம், நண்பர்கள் ஆர். பார்த்தசாரதி, ஹரன் பிரசன்னா, சேகர், கணேஷ் வெங்கடரமணன், பால கணேஷ், கவிஞர்...

யதி

யதி, நான்கு சன்னியாசிகளின் வாழ்வனுபவங்களின் மூலம், இந்தியாவில் புழக்கத்தில் உள்ள அனைத்து விதமான சன்னியாச ஆசிரமங்களிலும் புழங்குவோரின் உலகைத் திறந்து காட்டுகிற நாவல். சன்னியாசிகளைப் பற்றிய இப்படி ஒரு புனைவுப் பிரதி இதுவரை வந்ததில்லை. நாமறிந்த காவி, நாமறிந்த ஆளுமைகள், நமக்குத் தெரிந்த துறவிகளின் வாழ்வுக்கும் செயலுக்கும் அப்பால் உள்ள, எங்கோ ஓடி ஒளிந்துகொண்ட ஒரு ஜீவநதியின் சத்தியத் தடம் தேடிப் போகும்...

யதி முன்னுரை – தேர்வானவர் அறிவிப்பு

யதிக்கு ஆர்வமுடன் முன்னுரை எழுதியோர் மொத்தம் 38 பேர். அவர்களுக்கு முதலில் என் நன்றியைச் சொல்லிவிடுகிறேன். ஆயிரம் பக்க அளவுள்ள ஒரு நாவலை வாசித்து, ஆழத் தோய்ந்து, தாம் உணர்ந்ததை வெளிப்படுத்திய அந்த அன்பும் அக்கறையும் எனக்குப் பெரிய விருது. அநேகமாக வேறெந்த எழுத்தாளருக்கும் புத்தகம் வெளிவருவதற்கு முன்பே இத்தனை மதிப்புரைகள் கிடைத்திருக்க வாய்ப்பில்லை. கேட்டு வாங்கியதுதான் என்றாலும் யார் இன்று வேலை...

யதி – வாசகர் பார்வை 20 [அரங்கப்பெருமாள் கோவிந்தசாமி]

துறவறம் எனும் சத்திய தடம் தேடிச் சென்ற நாவலுடன் நானும் பயணித்தேன். மறக்க முடியாத அனுபவம் இது. திஜாவின் கும்பகோணம் – காவிரி போல கேளம்பாக்கம் கோவளம் கடற்கரை மற்றும் திருவிடந்தை பெருமாள் இந்நாவலெங்கும் வியாபிக்கிறார்கள். அந்த விவரிப்பு தரும் சிலிர்ப்பே என்னை ஜீவத் தடத்தைத் தேடிச் செல்லுவதை உறுதிப்படுத்துகிறது. செங்கல்பட்டு மாவட்டத்தின் ஒரு சிறிய கடலோர கிராமத்தில் கிளம்பி, கேரளத்தில்...

யதி – வாசகர் பார்வை 19 [ஏ.கே. சேகர்]

பா.ராகவன் தினமணி டாட்காமில் எழுதிய யதி நாவலை முழுவதும் வாசித்தேன். இதற்குமுன் அவர் எழுதிய பலவற்றை வாசித்திருந்தாலும் யதி தந்தது வேறு விதமான அனுபவம். யதி, துறவொழுக்கம் அல்லது ஒழுக்க மீறலைக் கருவாகக் கொண்டது. யோகிகள், சித்தர்கள், ஞானிகள் முதல் சாதாரண சன்னியாசிகள்வரை பலபேர் நாவலில் வந்தாலும் அவர்களின் தோற்றத்துக்கு அப்பால் உள்ளதைத் தோண்டி எடுப்பதே நோக்கம் என்பது தொடக்கத்திலேயே புரிந்துவிடுகிறது. ஒரு...

யதி – வாசகர் பார்வை 18 [இரா. ஶ்ரீதரன்]

குழந்தைப் பருவம் முதல் சாமியார் என்றதும் என் நினைவில் வருபவர், எங்கள் ஊர் (புதுகை) அதிஷ்டானம் சாந்தானந்த ஸ்வாமிகள். சிரித்த முகம். யாரைக் கண்டாலும் ஆசீர்வதிக்கும் பெருங்கருணை. பிறகு வயது ஏற ஏற காஞ்சி மகா பெரியவரின் துறவொழுக்கம் கண்டு தாள் பணிந்தேன். பின்னாளில் விதவிதமாக எவ்வளவோ சன்னியாசிகள் எங்கெங்கிருந்தோ முளைத்தார்கள். ஒவ்வொருவரைப் பற்றியும் பல்வேறு விதமான செய்திகள், தகவல்கள், பரபரப்புகள்...

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி