ஐயாசாமியும் அழகுசாமியும்

ஐயாசாமி ஐயாசாமி கொய்யா தந்தீங்க
மெய்யா வயிறு வலிக்குதுங்க ஐயோ என்செய்ய?

ஆசுபத்திரி போயி நீயும் ஊசி போட்டுக்கோ
அதுக்கு நானும் என்ன செய்ய அழகுசாமியே

ஆசுபத்திரி போக எனக்கு காசு வேணாமா
பீசுகேட்டா என்ன செய்ய; ஓசி டாக்டரா?

காசு இல்லை என்றுதானே கவலைப்படுகிறாய்?
இந்தா காசு, எடுத்துக்கொண்டு உடனே சென்றிடு!

காசு கொடுத்து, பீசு கொடுத்து ஊசி எதுக்குங்க?
காசிக்கடை அல்வா போதும் காசு குடுங்க!

[என் முதல் எழுத்து முயற்சி. 1981-82. ஆறாம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும்போது எழுதியது. அழ. வள்ளியப்பா இதை கோகுலம் சிறுவர் இதழில் பிரசுரித்தார்.]

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

Subscribe to News Letter