வலை எழுத்து

நிலமெல்லாம் ரத்தம் – வெற்றிமாறன் – வெப் சீரீஸ் விவகாரம்

இயக்குநர் வெற்றிமாறன், ‘நிலமெல்லாம் ரத்தம்’ என்ற பெயரில் ஒரு வெப் சீரிஸ் அல்லது படம் தயாரிப்பதாகவும் இயக்குநர் அமீர் அதில் நடிப்பதாகவும் ஒரு செய்தி வந்தது. நெடு நாள்களுக்கு முன்னரே இச்செய்தி வந்திருக்க வேண்டும். நான் கவனிக்கவில்லை. நேற்று தற்செயலாக கண்ணன் பிரபு என்ற வாசக நண்பர் இதனைச் சுட்டிக்காட்டி, உங்களுக்குத் தெரியுமா என்று கேட்டார். தெரியாது என்று பதில் சொன்னேன். ஃபேஸ்புக்கில் இதனை ஒரு...

நான் தேடி அமர்ந்த ஆப்புகள்

முன்னொரு காலத்தில் நிறைய பேனாக்களைச் சேகரித்துக்கொண்டிருந்தேன். அப்போது நான் எழுத்தாளன் இல்லை என்பது ஒரு முக்கியக் குறிப்பு. ஆனால் பேனாக்களைப் பிடிக்கும். இங்க் பேனா, பால் பாயிண்ட் பேனா, குண்டு பேனா, ஒல்லிப் பேனா, நீல இங்க் பேனா, சிவப்பு இங்க் பேனா, பட்டையாக எழுதும் பேனா, கூராக எழுதும் பேனா. திடீரென்று ஒரு நாள், அதற்கு முன் நான் கேள்விப்பட்டே இராத எர்னஸ்ட் ஹெமிங்வே என்ற அமெரிக்க எழுத்தாளரின்...

எடுத்த புத்தகத்தைப் படித்து முடிப்பது எப்படி?

புத்தகம் படிப்பதில் உள்ள பெரிய சிக்கலே, எடுப்பதில் பாதி படிக்க முடியாதபடி இருப்பதுதான். 1. போரடிக்கும் எழுத்து நடை 2. எழுதத் தெரியாமல் எழுதியிருப்பது 3. சப்ஜெக்டுக்கு வராமல் ஊர் உலகமெல்லாம் சுற்றி வளைப்பது 4. நிறுத்தற்குறி வைக்கும் வழக்கமே இல்லாமல், பத்து வரிக்கு ஒரு சொற்றொடரை அமைத்திருப்பது 5. விறுவிறுப்பே இல்லாமல் இருப்பது 6. சுவாரசியம் அற்று இருப்பது 7. பண்டித மொழியில் எழுதியிருப்பது 8. தொட்ட...

இரண்டு தயாரிப்பாளர்கள்

அவர் பெயர் நரசிம்மன். நான் கல்கியில் பணியாற்றிக்கொண்டிருந்த காலத்தில் அறிமுகமானார். அவ்வப்போது நகைச்சுவை சிறுகதைகள் எழுதுவார். ஒன்றிரண்டைப் பிரசுரித்தபோது ஒரு நாள் நேரில் வந்து பார்த்தார். பிறகு வாரம் ஒருநாள வருவார். குறுகிய காலத்தில் நண்பராகிப் போனார். நண்பரான பின்பு கல்கியில் அவர் எழுதுவது குறைந்துவிட்டது. மாறாக, நான் கல்கிக்கு வெளியிலும் எழுதும் சாத்தியங்கள் குறித்துப் பேசத் தொடங்கினார்...

என்றாவது ஒரு நாள்

வீடு வெதுவெதுப்பாக்கும் விழாக்கள்கூட முக்கியமில்லை. வீட்டைச் சுற்றிக்காட்டும் வீடியோ கலாசாரம் ஒன்று சூடு பிடிக்க ஆரம்பித்திருக்கிறது. நகரியில் ரோஜா கட்டியிருக்கும் வீட்டு விடியோ ஒன்றைப் பார்த்தேன். நேற்று என் அட்மின் இத்தகு விடியோக்கள் இன்னும் இரண்டினைச் சுட்டிக்காட்டினார். முதலாவது, தெலுங்கு நடிகர் மோகன் பாபுவின் வீட்டுச் சுற்றுலா.  அவரது மகள் தயாரித்தது. மற்றது, பாண்டியன் ஸ்டோர் மீனா...

வள்ளலார் டயட்

• பசிக்க ஆரம்பித்த ஐந்தாவது நிமிடத்துக்குள் உண்ணத்தொடங்கிவிட வேண்டும். தள்ளிப் போட்டால் காலக்கிரமத்தில் அல்சர் வரும் • அரிசி ரகங்களில் சீரக சம்பா தவிர மற்றவை அத்தனை தரமில்லை • கிழங்கு வகையில் கருணைக்கிழங்கு தவிர வேறெதுவும் வேண்டாம் • உணவோடு பழங்கள் சாப்பிட்டால் செரிமானப் பிரச்னை வரும் • காய்கறி சமைக்கும்போது புளியும் மிளகாயும் எவ்வளவு குறைவாகச் சேர்க்கிறோமோ, அவ்வளவு நல்லது • மிளகாயைத் தவிர்ப்பது...

எழுத்தாளரும் பதிப்பாளரும்

இந்நாள்களில் எழுத்தாளர்-பதிப்பாளர் உறவு ஒரு பேசுபொருளாகியிருக்கிறது. எழுத்தாளராகவோ பதிப்பாளராகவோ இல்லாதோரும் பேசுகிறார்கள். அக்கப்போர் என்றாகிவிட்டால் ஆளுக்கொரு தர்ம அடி போட்டுவிட்டுப் போய்விடுவது தேசிய குணமல்லவா? இருக்கட்டும். சிறிது வேறு மாதிரியான எழுத்தாளர்-பதிப்பாளர் உறவு குறித்து ஒரு தகவல் படிக்கக் கிடைத்தது. நல்லதையும்தான் பேசிப் பார்ப்போமே. அவர் ஒரு புலவர். ஆன்மிகம் சார்ந்து மட்டுமே...

33 நாயன்மார்கள்

நான் வசிக்கும் சமஸ்தானத்தின் எல்லைக்குள் மொத்தம் 33 நாயன்மார்கள் வசிக்கிறார்கள். இவர்களுள் வீராசாமி நகர் மேநிலை நீர்த்தொட்டியைச் சுற்றி வசிப்போர் ஒன்பது பேர். சேம்பர்ஸ் காலனி மெயின் ரோடில் பன்னிரண்டு பேர். பிறருக்குக் குறிப்பிட்ட இருப்பிடம் கிடையாது. சோறு கண்ட இடம் சொர்க்கம் என்று இருப்பவர்கள். பிராந்தியத்தில் வசிப்பவர்கள் அத்தனை பேரும் வாகனதாரிகளாக வேண்டும், யாரும் கால்நடையாக எங்கும் சென்று...

எழுத்துக் கல்வி

வலை எழுத்து

தொகுப்பு

Links

அஞ்சல் வழி


RSS Feeds

Follow Me