இந்த ஆண்டின் இரண்டாவது எழுத்துப் பயிற்சி வகுப்புகளை ஏப்ரல் 5 முதல் தொடங்கவிருக்கிறேன். இது தொடர்பாக அடிக்கடி கேட்கப்படுகிற சில வினாக்களும் பதில்களும் கீழே உள்ளன.
தத்துவங்களைத் தகர்த்தல்
மொழியைப் பழக்குவது என்பது நாய்-பூனையைப் பழக்குவது போன்றதல்ல. வீட்டில் ஒரு சிறுத்தை அல்லது சிங்கத்தைச் சோறு போட்டு வளர்ப்பது போன்றது.
அடிப்படைவாத அட்டூழியங்கள்
சலத்தை எழுதி முடித்து, ஒரு மாதம் விலகியிருந்துவிட்டு, எடிட் செய்ய அமர்ந்தபோது வினோதமான ஓர் உண்மை பிடிபட்டது. இதை உண்மை என்று ஒப்புக்கொள்வது, ஒரு வகையில் என் மனைவியிடம் என் தோல்வியை ஒப்புக்கொள்வது ஆகும்.
சலம் – எடிட்டிங் அப்டேட்
என் பதிப்பாளர் இரண்டு முறை அழைத்து, எப்போது முடியும் என்று கேட்டுவிட்டார். என்னைக் கேட்காதீர்கள், என் கழுத்தைக் கேளுங்கள் என்றா சொல்ல முடியும்?
சரியான தொடக்கம் – வினுலா
இரண்டு வருடங்களுக்கு முன்னால் இதே தேதியில் தான் ஆசிரியர் பா ராகவன் அவர்களது குரலை முதல் முறையாகக் கேட்டேன். புத்தகங்கள் வழியாக அரசியலைப் புரிய வைத்தவர், அன்று எழுத்து எனும் தீவிர அரசியலை எனக்கு அறிமுகப்படுத்தினார்.
பிப்ரவரி 8 – எழுத்துப் பயிற்சி வகுப்புகள் ஆரம்பம்
எதிர்வரும் பிப்ரவரி 8 ஆம் தேதி முதல் எழுத்துப் பயிற்சி வகுப்புகளை மீண்டும் தொடங்குகிறேன். எழுத்தார்வமும் கற்கும் ஆர்வமும் உள்ள புதியவர்கள் வரலாம்.
ஃபேஸ்புக்: ஓர் அறிவிப்பு
இந்தக் குறிப்பை ஃபேஸ்புக்கில் எழுதினேன். இங்கே சேகரித்து வைக்கிறேன். அவ்வளவுதான். கடந்த மூன்று மாதங்களாக இங்கே நான் எழுதும் எந்த ஒரு குறிப்பும் ஐம்பது பேருக்கு மேலே சென்று சேராமல் இருந்தது. எப்போது நான் என்ன எழுதினாலும் – அது நட்ட நடு ராத்திரியாகவே இருந்தாலும் முதல் காரியமாக எழுந்து உட்கார்ந்து படித்து, லைக் போட்டுவிட்டுப் பிறகு இழுத்துப் போர்த்திக்கொண்டு தூங்கத் தொடங்கும் நண்பர்களுக்குக்...
சொல்லாமல் சொல்லிவைத்த பாடம்
உவேசா முன்னுரைகள் என்ற சிறிய தொகுப்பு நூல் ஒன்றைப் படித்துக்கொண்டிருந்தேன். அவர் பதிப்பித்த சில புராதன இலக்கியப் பிரதிகளுக்கு எழுதிய முன்னுரைக் குறிப்புகளைக் கொண்ட நூல் இது. சிறுபாணாற்றுப்படை அதிலொன்று. //சிறுபாணாற்றுப்படை என்பது நக்கீரர் முதலிய கடைச் சங்கப் புலவர்களால் இயற்றப்பட்டு, அவர்களால் தொகுக்கப்பெற்ற பத்துப் பாட்டினுள், மூன்றாவதாக உள்ள ஒரு நேரிசை ஆசிரியப்பா. இஃது இருநூற்றுப் பத்தொன்பது...
நானொரு மாண்டேக் சிங் அலுவாலியா
ஒவ்வொரு புத்தாண்டு தொடங்குவதற்கு முன்பும், அதற்கு முந்தைய டிசம்பரில் அடுத்த ஒரு வருடத்துக்கான திட்டங்களை எழுதுகிறேன். இந்தத் திட்டம் எழுதும் பணி என்பது ஒரு நாவல் எழுதுவதினும் கடினமானது, கவனம் கேட்பது. கிட்டத்தட்ட ஒரு தற்கொலைப் போராளி மனநிலையுடன்தான் இச்செயலில் ஒவ்வொரு முறையும் ஈடுபடுகிறேன். அந்தத் தீவிரத்தை உங்களால் புரிந்துகொள்ளவே முடியாது, நீங்கள் என்னை நிகர்த்த அல்லது என்னைக் காட்டிலும்...
பாடசாலை (சிறுகதை)
கணேசன் வீட்டுக்கு வரும்போதே ஏதோ சரியில்லை என்று கௌசல்யாவுக்குத் தெரிந்துவிட்டது. என்ன, என்னவென்று நச்சரிக்கத் தொடங்கினால் சொல்வதற்கு அதிக நேரம் எடுத்துக்கொள்வான். உண்மையிலேயே ஏதாவது பெரிய பிரச்னையாக இருக்கும்பட்சத்தில் எரிச்சலும் கோபமும் அதிகரித்து, ஒரு கட்டத்தில் சண்டையில் முடிய வாய்ப்பிருக்கிறது. எனவே அவனாகப் பேசுகிற வரை முகத்தை வைத்துத் தான் எதையும் கண்டுபிடித்துவிடவில்லை என்கிற பாவனையைத்...