எழுதும் விஷயத்தில் நான் மிகுந்த கவனமும் கூர்ந்த அக்கறையும் கொண்டவன். மனத்துக்குள் முற்றிலும் தயாராகாமல் எழுதத் தொடங்கியதே இல்லை. கருவும் மொழியும் உருத் திரண்டு, ஒத்திசைவாய் வருவதை உறுதி செய்துகொள்ளாமல் ஆரம்பிக்க மாட்டேன். நாவல் என்றால் களமும் மொழியும். கதாபாத்திரங்களையோ சம்பவங்களையோ சிந்திக்க மாட்டேன். அது எழுத எழுதத் தன்னால் வந்துவிடும்.
அடிப்படைவாத அட்டூழியங்கள்
சலத்தை எழுதி முடித்து, ஒரு மாதம் விலகியிருந்துவிட்டு, எடிட் செய்ய அமர்ந்தபோது வினோதமான ஓர் உண்மை பிடிபட்டது. இதை உண்மை என்று ஒப்புக்கொள்வது, ஒரு வகையில் என் மனைவியிடம் என் தோல்வியை ஒப்புக்கொள்வது ஆகும்.


