என் மனைவி எப்போதும் சொல்வது ஒன்றுண்டு. எதையும் அளவுடன். உணவு தொடங்கி உணர்ச்சிகள் வரை அனைத்துக்கும் பொருந்தக்கூடிய சூத்திரம்தான். ஆனால் அது எத்தனை பெரிய சிரமம் என்பது எனக்கு மட்டுமே தெரியும். என்னால் நூறு சதவீத அர்ப்பணிப்பைத் தர இயலாத எது ஒன்றின் மீதும் விரைவில் அக்கறை இழந்து போய்விடுகிறேன்.
காணாமல் போன காதல் டைரி
வீட்டுக்கு வந்ததும் என் வசம் உள்ள, வையவன் அனுப்பிய பிரதியைத் தேடத் தொடங்கினேன். நெடுநேரம் தேடியும் கிடைத்தபாடில்லை. அப்படி எங்கே வைத்துத் தொலைத்திருப்பேன் என்று தெரியவில்லை. புத்தகங்களின் எண்ணிக்கை ஓரளவு கட்டுக்குள் இருந்த வரை எந்தப் புத்தகத்தையும் சட்டென்று எடுத்துக்கொண்டிருந்தேன். இப்போது வைக்க இடமில்லாமல் என் அறையே ஒரு வில்லன் கொடோன் போலாகிவிட்டது.
மங்கலப் பற்றாக்குறை
‘அது நான்கு அயோக்கிய ராஸ்கல்களின் கதை. நான்கு பேரும் ஒரே பெண்ணைத் திருட்டுத்தனமாகக் காதலித்தவர்கள். அதில் ஒருவன் திருமணம் வரை சென்று ஏமாற்றியவன். அவளது தற்கொலைக்கே காரணமாக இருந்துவிட்டுப் பிறகு வாழ்க்கை முழுக்க ஹரே கிருஷ்ணா ஹரே ராமா என்று சொல்லிக்கொண்டிருக்கிறான். அவனையெல்லாம் கட்டி வைத்து உதைக்க வேண்டாமா?’
அடிப்படைவாத அட்டூழியங்கள்
சலத்தை எழுதி முடித்து, ஒரு மாதம் விலகியிருந்துவிட்டு, எடிட் செய்ய அமர்ந்தபோது வினோதமான ஓர் உண்மை பிடிபட்டது. இதை உண்மை என்று ஒப்புக்கொள்வது, ஒரு வகையில் என் மனைவியிடம் என் தோல்வியை ஒப்புக்கொள்வது ஆகும்.
கழுத்து வலி மாத்திரை ரூ. 12,500
எழுத்தாளர்களின் தலையாய பிரச்னைகளுள் முதன்மையானது, கழுத்து வலி. பண்டைக்காலத் தமிழ் சினிமா மணப்பெண்களைப் போலப் பெரும்பாலான நேரங்களில் குனிந்த தலை நிமிராமல் மானிட்டரைப் பார்த்துக்கொண்டே அமர்ந்திருப்பதால் இது வருகிறது.
பைந்நாகப் பாய்
ஒரு செங்கல் அளவு பெரிதான நோக்கியா, அதில் பாதி அளவுள்ள ஒரு விண்டோஸ் போனுக்குப் பிறகு ஐபோன் 3ஜி வாங்கினேன். கடந்த பதிமூன்று ஆண்டு காலமாகப் பல்வேறு ஐபோன்களைத்தான் பயன்படுத்தி வந்திருக்கிறேன். அதன் எளிமை, சொகுசு, நூதனங்களின் ரசிகனாக இருந்திருக்கிறேன். இன்றுவரை அதில் மாற்றமில்லை என்றாலும் இன்று ஐபோனுக்கு விடை கொடுத்துவிட்டு ஆண்டிராய்ட் போனுக்கு மாறினேன். காரணம் இது: என் ஐபோன் 14 இல் பேட்டரி பிரச்னை...
பகுதியளவு ஜெயமோகன்கள்
டிசம்பர் 16, 17 தேதிகளில் கோயமுத்தூரில் நடைபெற்ற விஷ்ணுபுரம் விருது விழாவில் கலந்துகொண்டு திரும்பினேன். தமிழின் முக்கியமான படைப்பு ஆளுமைகளுள் ஒருவரான யுவன் சந்திரசேகருக்கு இவ்வாண்டு விருது வழங்கப்பட்டது. இந்திய வரலாற்று ஆய்வாளர் ராமச்சந்திர குஹா, மலேசிய எழுத்தாளர் ஜாஹிர், எம். கோபாலகிருஷ்ணன், ஜெயமோகன் ஆகியோர் யுவனை வாழ்த்திப் பேசினார்கள். விழாவில் யுவனைக் குறித்த ஆவணப் படம் ஒன்று திரையிடப்பட்டது...
நானொரு மாண்டேக் சிங் அலுவாலியா
ஒவ்வொரு புத்தாண்டு தொடங்குவதற்கு முன்பும், அதற்கு முந்தைய டிசம்பரில் அடுத்த ஒரு வருடத்துக்கான திட்டங்களை எழுதுகிறேன். இந்தத் திட்டம் எழுதும் பணி என்பது ஒரு நாவல் எழுதுவதினும் கடினமானது, கவனம் கேட்பது. கிட்டத்தட்ட ஒரு தற்கொலைப் போராளி மனநிலையுடன்தான் இச்செயலில் ஒவ்வொரு முறையும் ஈடுபடுகிறேன். அந்தத் தீவிரத்தை உங்களால் புரிந்துகொள்ளவே முடியாது, நீங்கள் என்னை நிகர்த்த அல்லது என்னைக் காட்டிலும்...
விஷ்ணுபுரம் விழா – அழைப்பிதழ்
இந்த ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருது யுவன் சந்திரசேகருக்கு வழங்கப்படுகிறது. விழா, வரும் டிசம்பர் 16-17 தேதிகளில் கோவையில் நடக்கிறது. நிகழ்ச்சியில் வரலாற்றறிஞர் ராமச்சந்திர குஹா, மலேசிய எழுத்தாளர் சையத் மொஹம்மத் ஷாகிர், எம். கோபாலகிருஷ்ணன், பாலாஜி பிருத்விராஜ் இவர்களுடன் ஜெயமோகனும் யுவனை வாழ்த்திப் பேச இருக்கிறார். ஆண்டுதோறும் இவ்விழாவில் நடைபெறும் எழுத்தாளர்-வாசகர் சந்திப்பு நிகழ்ச்சிகள்...
கணை ஏவு காலம்: இரண்டு மாத வாழ்க்கை
அக்டோபர் 7, 2023 அன்று ஹமாஸ் – இஸ்ரேல் போர் தொடங்கியது. பத்தாம் தேதி முதல் இந்து தமிழ் திசையில் கணை ஏவு காலம் எழுதத் தொடங்கினேன். ஆரம்பிப்பதற்கு முன்னரே இது போரைக் குறித்த கட்டுரைகளல்ல என்று தெளிவாகச் சொல்லிவிட்டுத்தான் ஆரம்பித்தேன். இறைத்தூதர் மோசஸ் காலத்துக் கதைகளில் தொடங்கி யாசிர் அர்ஃபாத்தின் மறைவுக் காலம் வரை நீண்டு நிறைந்த நிலமெல்லாம் ரத்தத்தின் இரண்டாவது பாகத்தைத்தான் இப்போது...