இகவாழ்வில் ஒவ்வொருவருக்கும் விடை தெரியாத வினாக்கள் ஆயிரம் இருக்கும். எனக்கு உள்ளவற்றுள் முதன்மையான வினா, வேட்டி எப்படி இடுப்பில் நிற்கிறது என்பது.
கருவி(யி)ன் குற்றம்
இது என்னைப் போலவே உருண்டையானது. அசப்பில் ஒரு உருளைக்கிழங்கு போண்டாவைக் காதில் சொருகியது போல இருக்கும். காது துவாரங்களுக்குள் சொருகி எப்படிச் சுழற்றினாலும் இரண்டடி நடந்தால் கீழே விழுந்துவிடும். சுழற்றாமல் அப்படியே சொருகப் பார்த்தால் பாடாது.
பயண இலக்கியம்
இரயில் வண்டி பெருங்களத்தூர் நிறுத்தத்தை நெருங்கியது. பண்டொரு காலத்தில் பிற்காலப் பல்லவர்களுக்கும் மிச்சம் மீதமிருந்த பிற்காலச் சோழர்களுக்கும் யுத்தம் மூண்டபோது அது நிகழ்ந்த பெரும் களமாக இருந்தபடியினாலே அந்தத் தலத்துக்குப் பெரும் களத்தூர் என்ற பெயர் உண்டானது.
மங்கலப் பற்றாக்குறை
‘அது நான்கு அயோக்கிய ராஸ்கல்களின் கதை. நான்கு பேரும் ஒரே பெண்ணைத் திருட்டுத்தனமாகக் காதலித்தவர்கள். அதில் ஒருவன் திருமணம் வரை சென்று ஏமாற்றியவன். அவளது தற்கொலைக்கே காரணமாக இருந்துவிட்டுப் பிறகு வாழ்க்கை முழுக்க ஹரே கிருஷ்ணா ஹரே ராமா என்று சொல்லிக்கொண்டிருக்கிறான். அவனையெல்லாம் கட்டி வைத்து உதைக்க வேண்டாமா?’
ஒரு நபர் கமிஷன்
ஒரு முழு நேர எழுத்தாளனாக இருப்பதில் எழுத்து-வருமானத்துக்கு அப்பால் வேறு சில அசௌகரியங்கள் இருக்கின்றன. நானாக யாரிடமும் சென்று எப்போதும் பேசுவதில்லை என்றாலும் வம்படியாக வந்து பேசுவோருக்கு பதில் சொல்ல வேண்டியதாகிவிடுகிறது. கடந்த வாரம் ஒரு நாள் காலை நடைப் பயிற்சியின்போது (அன்றைக்குப் பார்த்து எட்டரைக்கு நடக்கச் சென்றேன்.) ஒருவர் வேகவேகமாக அருகே வந்து வணக்கம் சொன்னார். ‘சார், அன்னிக்கு ஒரு நாள் ஆபீஸ்...
அறுக்கமாட்டாதவன்
எழுதத் தொடங்கிய காலத்தில் பெரும்பாலும் நானொரு கைவலிய நவநீதனாகத்தான் இருப்பேன். என் அளவுக்கே குண்டான பேனாக்களைப் பிடிக்க முடியாமல் பிடித்துக்கொண்டு நான்கைந்து மணி நேரம் இடத்தை விட்டு நகராமல் அமர்ந்து எழுதிக்கொண்டிருப்பேன். வலி, விரல்களில் இருந்து முழங்கை வரை நீண்டு தொடும்போது சிறிது நேரம் ஓய்வு. பிறகு மீண்டும் எழுத ஆரம்பித்தால் தோள்பட்டை வலிக்கும்வரை எழுதுவேன். கைவலி உச்சம் தொடும்போது அது கழுத்து...
பார்த்தால் தீருமா பசி?
எனக்கு சமைக்கத்தான் வராதே தவிர, சாப்பிடும் கலையில் சந்தேகமின்றி வாகை சூடியவன். குவாலிடி கண்ட்ரோல் என்றொரு பணி இனத்தையே எவனோ என்னை ஒளிந்திருந்து பார்த்துத்தான் உருவாக்கியிருக்கிறான் என்ற ஐயம் எனக்குண்டு. சாதாரண சாம்பார், ரசமானாலும் ருசியில் அரை சிட்டிகை முன்னப்பின்ன இருந்தால் அந்தராத்மா அலாரம் அடித்துவிடும். இது வெறும் உப்பு-காரம் குறைபாடு சார்ந்தது மட்டுமல்ல. ஒரு ரசப்பாத்திரத்தைத் திறந்தால்...
பெண்ணிய விரோதக் கட்டுரை எழுதுவது எப்படி?
பொதுவாக ஆண்களுக்கு இது எளிதே என்றாலும் எழுதுவது என்னும் தொழிற்படும்போது அவர்கள் சிறிது எச்சரிக்கையாகிவிடுவார்கள். பொது புத்தி என்று பொதுவில் முன்வைக்கப்படும், காதல் சந்தியாவின் மூக்கு நிகர்த்த குற்றச்சாட்டுக்கு அஞ்சி, தம்மையொரு நடுநிலைவாதியாகக் காட்டிக்கொள்ளும் ஆயத்த உணர்வு ஆரம்பத்தில் ஏற்படும். ஆனால் அது தேவையற்றது. எப்படி என்பதைப் படிப்படியாகப் பார்க்கலாம். கட்டுரையின் முதல் பத்தியில் பெண்களின்...
நீலக் கல்லே, என் அன்பே!
2017க்குப் பிறகு எனக்கு சோதிடத்தின் மீதிருந்த நப்பாசை சார்ந்த சிறு பற்றுதல் ஆட்டம் காணத் தொடங்கியது. எப்போதாவது நல்லவனாக இருக்கும்போது ‘நம் எதிரிக்கும் இது நடக்கக் கூடாது’ என்று சிலவற்றை நினைப்போமல்லவா? அதெல்லாம் என்னையே எதிரியாக முன்வைத்துக் கோலாட்டம் ஆடிக் காட்டிவிட்டன. இத்தனைக்கும் அந்தக் காலக்கட்டம் தொடங்கி ஒவ்வொரு சோதிடரும், ஒவ்வொரு பருவத்துக்கும் ஆஹா ஓஹோ என்று அள்ளி அள்ளி...
அன்சைஸ் – மறு பதிப்பு
இந்த உலகில் ஆகச் சிரமமான காரியம் ஒன்று உண்டென்றால் அது சுய விமரிசனம் செய்துகொள்வதுதான். ஆனால், பெரும்பாலும் நமக்கு ரொம்பப் பிடித்த நபர் நாமேவாகத்தான் இருப்போம். பிடித்துவிட்டால் விமரிசனம் எங்கிருந்து வரும்? ஆனால் ஓர் எழுத்தாளன், விமரிசனக் கலை பயில விரும்பினால் அதற்கு மிகவும் சௌகரியமான, பாதுகாப்பான வழி தன்னைத்தானே விமரிசித்துக்கொள்வது. ஒரு பயலும் நாயே பேயே என்று நாலு பக்கத்துக்குத் திட்ட...
கொடுங்கனவு
இரவு ஒரு கொடுங்கனவு. கொங்கு நாடு உதயமாகிவிடுகிறது. வலிமை அப்டேட் வானதி சீனிவாசனுக்கு லெஃப்டினண்ட் கவர்னர் காயத்ரி ரகுராம் பதவிப் பிரமாணம் செய்து வைக்கப் போகிற நேரம், ‘நிறுத்துங்கள்!’ என்று கூவிக்கொண்டு ராஜகுரு ஜக்கி வாசுதேவ் உருவிய வாளுடன் அரண்மனைக்குள் நுழைகிறார். கடலுக்குள் மூழ்கிய துவாரகையை மீட்டு வெளியே கொண்டு வந்து, கடல் இல்லாத பாதுகாப்புப் பிராந்தியமான கொங்கு நாட்டில் மறு...
நான் மில்லியனர் ஆகப் போகிறேன்.
அன்பின் மூசா முகமது, உங்கள் அஞ்சலுக்கு நன்றி. சர்வதேச வர்த்தக ஆய்வு நிறுவன டைரக்டரிக்கு என் மின்னஞ்சல் எப்படிச் சென்றது என்று தெரியவில்லை. பாருங்கள், நான் எவ்வளவு பெரிய அப்பாடக்கார் என்பது எனக்கே தெரியாதிருக்கிறது. அது நிற்க. இருபத்திரண்டு மில்லியனில் நாற்பத்தைந்து சதமானப் பங்கு என்பது பெரிய தொகை மட்டுமல்ல. உங்கள் பரந்த உள்ளத்தையும் காட்டுகின்றது. இந்தப் பணம் எனக்குக் கிடைத்துவிடும் பட்சத்தில்...
ஞானப்பழம்
ஒரு தர்பூசனிப் பழம் வாங்கச் சென்றேன். கடைக்காரப் பெண்மணியிடம் ஒன்றை எடுத்துக் காட்டி, ‘எவ்ளம்மா?’என்று கேட்டேன். அவர் ‘பதினைந்து ரூபாய்’ என்று பதில் சொல்லி முடிப்பதற்குள் எங்கிருந்தோ பாய்ந்தோடி வந்த ஒரு வாசகர் திலகம், ‘சார், நீங்க பாராதானே?’ ஆமாம் என்று பதில் சொன்னேன். ‘உங்க புக்ஸ் நிறைய படிச்சிருக்கேன் சார். பூனைக்கதை ரொம்ப பிடிக்கும். இறவான் கொஞ்சம்...
வக்கும் வாக்கும்
அன்பின் பாரா, நீங்கள் ஏன் ஒரு கட்சி ஆரம்பித்து தேர்தலில் நிற்கக்கூடாது? நேற்று ஒரு வாசகர் மெசஞ்சரில் இதனைக் கேட்டார். நடிகர்கள் எல்லாம் கட்சி ஆரம்பித்து தேர்தலில் நிற்கும்போது எழுத்தாளர்கள் செய்யக்கூடாதா? தாராளமாகச் செய்யலாம். ஆனால் அதற்கெல்லாம் ஒரு வக்கு வேண்டும். இதுவே ஜெயமோகனைச் சொல்கிறீர்களா? நியாயம். மய்யத்தைவிட அதிகமான தொண்டர் பலம் கொண்டவர் அவர். கொரோனா கஷ்ட காலத்தில் விஷ்ணுபுரம் வாசகர்...
திண்டுமலாரி
யாராவது சோம்பிக் கிடந்தால் என் பாட்டி ஒரு வசைச் சொல்லைப் பயன்படுத்துவார். ‘திண்டுமலாரி.’ சிறு வயதில் பலமுறை இதனைக் கேட்டிருக்கிறேன். ஆனால் அர்த்தம் தெரியாது. இன்று வரையிலுமே தெரியாது. ஆனால் ஒரு திண்டுமலாரி எப்படி இருப்பான்/ள் என்று இப்போது புரிந்துவிட்டது. டிவியில் ஒரு விளம்பரம் பார்க்கிறேன். காப்பி விளம்பரம். வேலைக்காரம்மாள் போன் செய்கிறாள். ஊரிலிருந்து வந்துவிட்டதாகவும் மறுநாள் காலை...
எனக்கு இருபது உனக்குப் பத்து
எனக்கு இருபது உனக்குப் பத்து மேலே உள்ள குறுஞ்செய்தியை வாசித்தீர்களா? இன்று வந்தது. முன்பின் தெரியாத என் பேரில் இந்த நாரீமணிக்குத்தான் எவ்வளவு கரிசனம். இந்தக் கொடூரமான ஊரடங்குக் காலத்தில் நான் இருக்கிறேனா செத்தேனா என்று கேட்கக்கூட ஒரு நாதியற்றுக் கிடப்பது பற்றி அடி மனத்தில் ஒரு துயரம் படிந்திருந்தது. சொன்னால் யார் நம்பப் போகிறார்கள்? வீட்டோடு இருக்கும் இக்காலத்தில் மொத்தமாகவே இதுவரை நான்கைந்து...
தோற்ற மயக்கம் அல்லது யாருடா நீ மூதேவி.
நான் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் முன்னூறு குடும்பங்கள் இருக்கின்றன. தோராயமாகக் கணக்குப் போட்டால் மொத்த மக்கள் தொகை சுமார் ஆயிரம். இவர்களில் பெரும்பாலானவர்களுக்கு என்னைத் தெரியாது. தெரிந்த சிலருக்கும் முகம் தெரியுமே தவிர என்னைப் பற்றிய தகவல்கள் எதுவும் தெரிய வாய்ப்பில்லை. கவனமாக நான் அதைத் தவிர்ப்பேன். ஓர் எழுத்தாளனாக, புகைப்படங்களைப் பத்திரிகைகளில் பார்த்துவிட்டு அடையாளம் கண்டு...
நகையலங்காரம்
எனது நகைச்சுவைக் கட்டுரைகளின் தொகுப்பு, ‘நகையலங்காரம்’ என்ற பெயரில் இன்று கிண்டில் மின் நூலாக வெளியாகியிருக்கிறது. மொத்தம் 26 கட்டுரைகள்.
பத்திரிகைகளில் எழுதியவை, இணையத்தில் எழுதியவை, சொந்த இஷ்டத்துக்கு எழுதி எங்கும் பிரசுரிக்காதவை என்று இத்தொகுப்பில் உள்ள கட்டுரைகள் பலவிதம். அனைத்துக்கும் பொதுவான ஒரே அம்சம், நகைச்சுவை.
சொந்த சோகம்
தினமலர் பத்தி எழுதத் தொடங்கியது முதல் தினசரி இருபது முப்பது மின்னஞ்சல்களாவது போற்றியும் தூற்றியும் வருகின்றன. நானும் பார்க்கிறேன், எழுதுகிற இத்தனை பேரில் ஒருவராவது ஜெயமோகனுக்கு எழுதுவதுபோல அறிவுஜீவித்தனமாக எழுதுவாரா என்று. ம்ஹும். கல்கி, குமுதம் காலத்தில் வாசிக்கக் கிடைத்த அரவக்குறிச்சிப்பட்டி அசோக்ராஜா, அரகண்டநல்லூர் விஜி, அய்யாறு வாசுதேவன் வகையறாக் கடிதங்கள்தாம் எல்லாமே. திட்டுகிறவர்கள்கூட...
சேகரைச் சாகடிக்கும் கலை
நெடுந்தொடருலகில் கதாசிரியன் பாடு சற்று பேஜாரானது. சும்மா ஒரு ஜாலிக்கு அவனைப் போட்டு வாங்க நினைப்பவர்கள் மாதாந்திரக் கதோற்சவத்தில் சில மந்திரப் பிரயோகங்கள் செய்வர். அவையாவன:- 1. செகண்டாஃப் கொஞ்சம் lag சார். 2. சீன் ரிப்பீட் ஆகுது சார். 3. ஸ்கிரீன் ப்ளே ஓகே, ஆனா சீன் ப்ளே சரியில்ல. 4. இதே சீன் பன்னெண்டர சீரியல்ல நேத்துதான் டெலிகாஸ்ட் ஆச்சு. 5. எமோஷன் கம்மியா இருக்கு சார் 6. பேசிட்டே இருக்காங்க...


