Categoryதகவல்

நகையலங்காரம்

எனது நகைச்சுவைக் கட்டுரைகளின் தொகுப்பு, ‘நகையலங்காரம்’ என்ற பெயரில் இன்று கிண்டில் மின் நூலாக வெளியாகியிருக்கிறது. மொத்தம் 26 கட்டுரைகள்.
பத்திரிகைகளில் எழுதியவை, இணையத்தில் எழுதியவை, சொந்த இஷ்டத்துக்கு எழுதி எங்கும் பிரசுரிக்காதவை என்று இத்தொகுப்பில் உள்ள கட்டுரைகள் பலவிதம். அனைத்துக்கும் பொதுவான ஒரே அம்சம், நகைச்சுவை.

என் இனிய தோழியே

ராஜ் டிவியில் நாள்தோறும் இரவு 9.30க்கு (திங்கள் முதல் வெள்ளி வரை) ஒளிபரப்பாகும் என் இனிய தோழியே தொடருக்குத் திரைக்கதை எழுத ஒப்புக்கொண்டிருக்கிறேன். இந்த வருடத்தில் எனக்கு முதல் புதிய தொடர் இது.  சென்ற வருடம் கிளி பாதியில் உயிரை விட்டது குறித்து வருத்தப்பட்டிருந்தேன். செல்லக்கிளியை இயக்கிய  செந்தில்குமார்தான் இந்தத் தொடரை இயக்குகிறார். செந்திலுடன் மீண்டும் இணைவது மகிழ்ச்சியாக இருக்கிறது.

மறுபதிப்பு குறித்த ஒரு மறுபதிப்பு

எனது மாயவலை மறுபதிப்பு தயாராகிவிட்டது. புத்தகக் கண்காட்சியில் விற்பனைக்கு வந்துவிடும். [மதிநிலையம் வெளியீடு]. 750 முதல் 900 வரை நல்ல மார்க்கெட்டிலும் ஆயிரம் முதல் பத்தாயிரம் வரை கள்ள மார்க்கெட்டிலும் [பின்னது பிரதிகள் மட்டும்] விலை போய்க்கொண்டிருந்த இக்காவியமானது மக்கள் பதிப்பு – மலிவுப் பதிப்பாக வெறும் ரூ. 500க்கு கிடைக்கும் என்பது இனிக்கும் சேதி. இவ்வினிப்புக்கு இனிப்பு சேர்க்க பதிப்பாளரானவர்...

இணையத்தில் மதி நிலையம்

என்னுடைய மற்றும் பலருடைய புத்தகங்களை வெளியிட்டு வரும் மதி நிலையம் ஒருவழியாகத் தனக்கொரு இணையத்தளத்தைத் தொடங்கியிருக்கிறது. தளத்தை இங்கே சென்று பார்க்கலாம். ஆனால் இத்தளத்தில் இப்போது காசு கொடுத்து நேரடியாகப் புத்தகங்களை வாங்கும் வசதி இல்லை. ஏனென்று தெரியவில்லை. வேண்டிய புத்தகத்தைக் குறிப்பிட்டு மின்னஞ்சல் செய்தால் கூரியர் அல்லது புறா மூலம் புத்தகத்தை அனுப்பிவைத்துவிடுவோம் என்று...

சிலேட்டுமப் படலம்

இன்று தொடங்கி எனது இத்தளத்தில் ‘ஸ்லேட்’ என்னும் புதிய சந்து திறக்கப்படுகிறது. இதுநாள் வரை ட்விட்டரில் நான் செய்துவந்தவற்றை இனி இங்கே செய்ய உத்தேசம். ஒரு புத்தகமாகத் தொகுக்கலாம் என்று நினைத்தால்கூட ட்விட்டரில் தேடித்தொகுப்பது பெரும்பாடாயிருக்கிறது. எழுதுபவை அனாமத்தாக வீணாவது பொறுக்கவில்லை. எனவே வாசகர்கள் / நண்பர்கள் இப்பக்கத்திலேயே என் ட்வீட்களுக்கு பதிலளிக்கலாம். விவாதிக்கலாம். அங்கு செய்யும்...

பதிலளிக்கும் நேரம்

கிழக்கிலிருந்து விலகிய பிறகு நான் என்ன செய்துகொண்டிருக்கிறேன் என்று கேட்டு அநேகமாக தினசரி இரண்டு மின்னஞ்சல்களாவது வருகின்றன. இணையத்தில் ஏன் முன்போல் எழுதுவதில்லை என்று விசாரித்தும்.
இது பதிலளிக்கும் நேரம்.

பத்ரி நலமாக இருக்கிறார்!

இன்று காலை ஹிந்து நாளிதழின் நீத்தார் குறிப்பு விளம்பரப் பகுதியைப் பார்த்த பலபேர், அதிர்ச்சியடைந்து பத்ரிக்குத் தொலைபேசிய வண்ணம் உள்ளார்கள். ‘ஓ, நீங்கள் இன்னும் உயிருடன் தான் இருக்கிறீர்களா?’ என்று ஜோக்கடிப்போர் முதல், தமது அதிர்ச்சியை வெளிப்படுத்த வார்த்தையில்லாமல் தவித்துத் திண்டாடுவோர் வரை அவர்களுள் பலவிதம். ஹிந்துவில் ‘காலமானார்’ என்று இன்று குறிப்பிடப்பட்டிருக்கும் பத்ரி சேஷாத்ரி வேறு யாரோ...

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி